தேனி மாவட்டச் சிறையிலிருந்து நேற்று இரவு சுமார் 17 கைதிகள் தப்பி ஓடிய சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்த சம்பவத்தில் தற்போது வரை நான்கு பேர் பிடிபட்டுள்ளனர். மீதமுள்ள சிறைவாசிகளை தீவிரமாக போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் தேனி மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிகுள்ளாக்கி இருக்கிறது.

சிறை- representation image
சிறை – representation image

அரசியல் தலைவர்கள் பலரும் இந்தச் சம்பவத்திற்கு எதிராக கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுதொடர்பாக திமுக தலைவர் மு.க ஸ்டாலின் வெளியிட்டிருக்கும் பதிவில், ” Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!

ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.

சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.

புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.

ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.

மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை.

மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது” என்று கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன? ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன? October 30, 2026 கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு October 30, 2026 நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்! நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்! October 30, 2026 என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார் என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார் October 30, 2026 அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக – அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள் அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக – அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள் October 30, 2026 நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்! நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்! October 30, 2026

See all 576 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *