பிரேசிலில் நான்காவது முறையாக ஆட்சியில் அமர்ந்துள்ளார் அந்த நாட்டின் அதிபர் லுலா டா சில்வா.
தேர்தல் வெற்றி
கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 25), பிரேசிலில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. ஆரம்பக் கட்ட வாக்கு எண்ணிக்கைகளில் பின்தங்கினாலும், இறுதியாக லுலாவின் ‘தொழிலாளர் கட்சிக்கே’ (Workers Party) வெற்றியைத் தந்தது இந்தத் தேர்தல்.
லுலாவிற்கு எதிராக Liberal Party சேர்ந்த ஃபிளாவியோ போல்சோனாரோ தேர்தலில் போட்டியிட்டார். ஆனால், இவருடைய கட்சி 48.21 சதவிகித வாக்குகளைப் பெற்றுள்ளது.
லுலாவின் கட்சி பெற்ற வாக்குச் சதவிகிதமோ 51.79 சதவிகிதம்.

ட்ரம்பின் தலையீடு
பிரேசில் நாடாளுமன்றத் தேர்தலைப் பற்றிப் பேசும்போது, அந்த நாட்டையும் தாண்டி, அமெரிக்கா குறித்துப் பேச வேண்டியதாக இருக்கிறது.
அமெரிக்காவின் பக்கத்து நாடுதான் லத்தீன் அமெரிக்க நாடான இந்தப் பிரேசில். மூலப்பொருள்கள் சப்ளை, பொருளாதாரம் முதல் புவியியல் ரீதியாக பிரேசில் அமெரிக்காவிற்கு முக்கிய இடத்தில் இருக்கிறது.
முடிந்தளவிற்குத் தங்களது சாதகமாக மற்ற நாடுகளை வைத்துக்கொள்வது… முடியாவிட்டால், அந்த நாடுகளுக்குப் பல்வேறு விதங்களில் நெருக்கடி தருவது எனத் தன்னை எப்போதும் முன்னிலைப்படுத்திக் கொள்வது அமெரிக்காவின் நீண்டகாலத் தெளிவான குறி.
பிற நாடுகளுக்கே இந்த நிலை என்றால், தன்னுடைய பக்கத்து நாடும் தங்களுக்குச் சாதகமாகத் தான் இருக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் மனநிலை.
இதனால், பிரேசிலில் தங்களுக்குத் தோதான ஆட்சி அமைய வேண்டும் என்று நினைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.லுலா இடதுசாரி சிந்தனை உடையவர். மேலும், ட்ரம்ப்பின் அனைத்துச் செயல்பாடுகளுக்கும் ‘ஆமாம்’ போடாதவர். இதனால், லுலா பிரேசிலின் அதிபராகத் தொடரக்கூடாது என்று ட்ரம்ப் நினைத்தார்.
இதனால், ஃபிளாவியோ போல்சோனாரோவுக்கு ஆதரவு வழங்கினார். இவருக்குச் சாதகமாகத் தேர்தல் முடிவுகள் அமைய அமெரிக்கா டிஜிட்டல் தளத்தில் பல்வேறு வேலைகளைப் பார்த்ததாகக் கூறப்படுகிறது.

லுலா பேச்சு
இதை லுலாவே தனது வெற்றிப் பேச்சில், “இது நாட்டின் எல்லைகளைக் கடந்து டிஜிட்டல் தளங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட வெளிப்புறத் தலையீடுகளை நாம் முறியடிக்க வேண்டியிருந்த ஒரு தேர்தலாகும்.
இந்த நாடு யாரோ ஒருவரின் பின்வாசலாக மாறுவதை ஒருபோதும் சகித்துக்கொள்ளாது” என்று குறிப்பிட்டிருந்தார். இவர் இங்கே மறைமுகமாகச் சாடியது ட்ரம்பின் அமெரிக்க அரசாங்கத்தையே.
ஆனால், ட்ரம்பின் விருப்பத்தையெல்லாம் தாண்டி, லுலாவே பிரேசில் தேர்தலில் வெற்றி பெற்று அதிபராகத் தொடர்கிறார்.
போல்சோனாரோ குற்றச்சாட்டு
இந்தத் தேர்தலில் தோல்வியை ஃபிளாவியோ போல்சோனாரோவால் ஒத்துக்கொள்ள முடியவில்லை.
அதனால், தேர்தல் தினத்தன்று பிரேசில் உச்ச நீதிமன்றம் வாக்கு நேரத்தை இரண்டு மணிநேரம் அதிகப்படுத்தியதைச் சட்டத்திற்குப் புறம்பானது என்று ஃபிளாவியோ போல்சோனாரோ குற்றம் சாட்டுகிறார்.
கடந்த 25-ம் தேதி, பிரேசில் தேர்தலின் போது, ‘போக்குவரத்து எண்ணிக்கை குறைக்கப்பட்டிருக்கிறது. இதனால், பல வாக்காளர்கள் வாக்களிக்க வர முடியவில்லை’ என்று லுலா தரப்பு உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தது. இன்னொரு காரணமாக, அந்த நாளில் பிரேசிலில் மழை பெரிய அளவில் இருந்ததாலும் பலரால் வாக்களிக்க வர முடியவில்லை.
இதைக் கருத்தில் கொண்டு நீதிமன்றம் வாக்களிக்கும் நேரத்தை இரண்டு மணிநேரம் நீட்டித்தது.
இதைத் தான் ஃபிளாவியோ போல்சோனாரோ சட்டத்திற்குப் புறம்பானது என்றும், இது லுலாவிற்குச் சாதகமாக அமைந்துவிட்டது என்றும் கூறுகிறார்.

‘நானே அதிபர்..!’ – போல்சோனாரோ
நேற்றுக்கூட (அக்டோபர் 28), ‘நான் தான் பிரேசிலின் அதிபர்’ என்று அறிவித்துக்கொண்டு லுலா அரசு தேர்தலில் வெற்றிபெற அரசியல் முறைகேடுகளைச் செய்தது என்று அறிக்கை வெளியிட்டிருக்கிறார் ஃபிளாவியோ போல்சோனாரோ.
ஆனால், இந்த அறிக்கையை அமெரிக்காவில்தான் வெளியிட்டிருக்கிறார் என்பதுதான் ட்விஸ்ட்.
போல்சோனாரோ மீது ஊழல், மோசடி போன்ற புகார்கள் உள்ளன. இதனால், அவரது பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று முன்பு உத்தரவிடப்பட்டிருந்தது.
இதிலிருந்து தப்பிக்க, தன்னுடைய இத்தாலிய பாஸ்போர்ட் மூலம் அமெரிக்காவிற்குச் சென்றுள்ளார் போல்சோனாரோ.
ட்ரம்ப் அரசாங்கமும் அவருக்கு அடைக்கலம் கொடுத்துள்ளது.
என்னதான் போல்சோனாரோ தன்னைத் தானே பிரேசில் அதிபர் என்று அறிவித்துக்கொண்டாலும், ஜனநாயக முறைப்படித் தேர்ந்தெடுக்கப்பட்ட லுலா தான் பிரேசிலின் அதிபர் .
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன?
October 30, 2026
கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
October 30, 2026
நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்!
October 30, 2026
என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார்
October 30, 2026
அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக – அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள்
October 30, 2026
நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்!
October 30, 2026
Yorkshire Water boss resigns after firm downgraded
October 30, 2026
Sourav Ganguly vs Doosra: Why the former India captain approached Delhi HC over his portrayal in the film | Explained
October 30, 2026
Fiscal deficit rises to ₹7.14 trillion or 42.1% of FY27 target in first six months
October 30, 2026
What we know about Binance's $6.3bn hack
October 30, 2026
Government’s paddy procurement hit by weather woes, storage constraints
October 30, 2026
Google value plunges by $500bn as its own AI search hits ad sales
October 30, 2026