இஸ்ரேலில் நேற்று முன்தினம் (அக்டோபர் 27) நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
2023-ம் ஆண்டு அக்டோபர் மாதம் நடந்த ஹமாஸ் தாக்குதல், ஈரான் போருக்குப் பின் நடக்கும் முதல் நாடாளுமன்றத் தேர்தல் இது.
இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட் களம் காண்கிறார்.
இழுப்பறியில் பெரும்பான்மை
இப்போது இஸ்ரேலில் 90 சதவிகித வாக்கு எண்ணிக்கை முடிந்துள்ளது. இஸ்ரேலில் வாக்குச்சீட்டு முறைதான் என்பதால், தேர்தல் முடிவு வெளியாவதில் தாமதமாகிறது.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசெட்டில் பெரும்பான்மை பெற குறைந்தபட்சம் 61 இடங்கள் தேவை. ஆனால், இதுவரை வெளியாகி உள்ள வாக்கு முடிவுகளில் எந்தக் கட்சியுமே பெரும்பான்மை பெறவில்லை. இழுபறி நிலை நீடித்துக்கொண்டே வருகிறது.

120 எண்ணிக்கைக் கொண்ட நெசெட்டில் நெதன்யாகுவின் கூட்டணி இதுவரை 53 சீட்டுகளைப் பெறும் என்றும், காடி ஐசன்காட்டின் கூட்டணி 48 சீட்டுகளைப் பெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு கட்சிகளுக்குப் பிறகு, அரபுக் கட்சிகளின் கூட்டணி 19 சீட்டுகளைப் பெறுவார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஆக, நெதன்யாகு, காடி ஐசன்காட் என யார் ஆட்சியைப் பெற விரும்பினாலும், இஸ்ரேலின் சிறுபான்மையினரின் பிரதிநிதிகளான அரபுக் கட்சிகளின் ஆதரவைப் பெற வேண்டியதாக இருக்கும் நிலை ஏற்படலாம்.
யார் இந்த அரபுக் கட்சிகள்?
அரபுக் கட்சிகள் என்பது இஸ்லாமியர்களை உள்ளடக்கியதாகும்.
இஸ்ரேலில் இஸ்லாமியர்கள் சமத்துவமின்மையையும், வன்முறைகளையும் தொடர்ந்து சந்தித்து வருகின்றனர். மேலும், அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவம் பெரிதாக இல்லை.
இஸ்ரேலில் பாலஸ்தீனப் பிரச்னை பெரிதாகத் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இவற்றிற்கு முற்றுப்புள்ளி வைப்பதே அரபுக் கட்சிகளின் நோக்கமாகும். இவற்றை முன்னிறுத்தியே தேர்தலைச் சந்தித்தனர்.
நெதன்யாகு விரும்பவில்லை
அரபுக் கட்சிகளின் ஆதரவை நெதன்யாகு பெறுவதற்கு அடிப்படையில் மூன்று பிரச்னைகள் உள்ளன.
ஒன்று, அவர்கள் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக இருக்கிறார்கள். இதுவே முதல் மற்றும் முக்கிய பிரச்னை நெதன்யாகுவிற்கு.

இரண்டாவது, ஈரான் போரை அமெரிக்காவுடன் முன்னெடுத்து வருகிறது இஸ்ரேல். அரபுக் கட்சிகளின் ஆதரவு பெற்றால், ஈரான் போரை முன்னெடுப்பதில் சிக்கல் வரும்.
மூன்றாவது, நெதன்யாகு வலதுசாரி சிந்தனை உடையவர். ‘இஸ்ரேல் இஸ்ரேலியர்களுக்கே’ என்கிற மனநிலை அவருக்கு இருக்கிறது. அதனால், அரபுக் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து, அவர்களுக்கு அரசியல் பிரதிநிதித்துவத்தைத் தர நெதன்யாகு விரும்பமாட்டார்.
மேலும், நேற்றே நெதன்யாகு அரபுக் கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்பதை அறிவித்துவிட்டார்.
காடி ஐசன்காட்டிற்கு சிக்கல்
சரி… அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைப்பது காடி ஐசன்காட்டிற்கு சாதகமா என்று பார்த்தால், அதுவும் இல்லை.
இஸ்ரேல் அரபு மக்களின் எண்ணிக்கை ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே. அரபுக் கட்சிகளுடன் கூட்டணி வைத்தால், இஸ்ரேல் மக்களிடம் காடி ஐசன்காட்டிற்குப் பின்னடைவு ஏற்படக்கூடும்.
அடுத்ததாக, அவரது சொந்தக் கூட்டணியில் இருக்கும் வலதுசாரி தலைவர்களே அரபுக் கட்சிகளின் கூட்டணியை விரும்பவில்லை.
இதனால், அரபுக் கட்சிகளின் கூட்டணியைப் பெறுவதில் காடி ஐசன்காட் தயக்கம் காட்டுகிறார்.
ஒருவர் ஆதரவே வேண்டாம் என்று சொல்லிவிட, இன்னொருவர் தயக்கம் காட்டினாலும், அரபுக் கட்சிகள் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கிறது.

அரபுக் கட்சிகளின் நிலைப்பாடு
அரபுக் கட்சிகளைப் பொறுத்தவரை நெதன்யாகு பிரதமராகத் தொடரக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கின்றனர். நெதன்யாகு பிரதமராகத் தொடருவதை மக்கள் விரும்பாததால் தான் தங்களுக்கு வாக்களித்திருக்கின்றனர் என்று கூறுகின்றனர்.
மேலும், அரபுக் கட்சிகள் ஆட்சியில் பங்குகூட கேட்கவில்லை. அவர்கள் இஸ்ரேலில் அரபு மக்களுக்கு எதிராக நடக்கும் குற்றம் மற்றும் வன்முறைகளுக்கு எதிராக நடவடிக்கைகள் வேண்டும்… அரபு மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும்… போன்ற கோரிக்கைகளை மட்டுமே முன்வைக்கின்றனர்.
நெதன்யாகு குற்றச்சாட்டு
நேற்று நெதன்யாகுவின் லிகுட் கட்சி, ‘இஸ்ரேல் தேர்தலில் அரபுக் கட்சிகள் வாக்குகளைத் திருடியுள்ளது. இதைத் தேர்தல் ஆணையம் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று குற்றம் சாட்டியுள்ளது.
அரபுக் கட்சிகளுடன் கூட்டணியே இருந்தது இல்லையா?
அரபுக் கட்சிகளுக்கு இவ்வளவு எதிராக இருக்கிறார்களே இருதரப்பும்… அரபுக் கட்சிகளின் ஆதரவுடன் இதுவரை இஸ்ரேலில் ஆட்சி அமைந்ததே இல்லையா என்று கேட்டால், 2021-ம் ஆண்டு கூட அது நடந்திருக்கிறது.
2021-ம் ஆண்டு நடந்த தேர்தலுக்குப் பிறகு, பென்னட்-யாயிர் லாபிட் அரசாங்கத்திற்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தது அரபுக் கட்சிகள். அது எட்டு அரசியல் கட்சிகளின் கூட்டணி அரசு ஆகும்.

இந்த எட்டு அரசியல் கட்சிகளுக்குமே, ‘நெதன்யாகுவை ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும்’ என்கிற ஒரு எண்ணத்தைத் தவிர, பொதுவான கொள்கை எதுவும் இல்லை. மேலும், அனைத்துக் கூட்டணிகளும் சேர்ந்து 61 இடங்களை மட்டுமே பெற்றிருந்தன.
இதனால், 2022-ம் ஆண்டு, இந்த ஆட்சி கலைந்து, இஸ்ரேலின் பிரதமராக நெதன்யாகுவே ஆட்சிக்கு வந்தார்.
இன்னொரு பக்கம், இதுவரை இஸ்ரேலின் வரலாற்றில் கூட்டணி இல்லாமல் ஆட்சி அமைந்ததே இல்லை.
இதனால், நெதன்யாகுவிற்கும், காடி ஐசன்காட்டிற்கும் கூட்டணி பிரச்னை இல்லை… அரபுக் கட்சிகளுடன் கூட்டணி என்பது தான் பிரச்னை.
மூன்று கோணங்கள்
ஒருவேளை, யாரும் பெரும்பான்மை பெறாத நிலையில், அரபுக் கட்சிகளுடன் கூட்டணியும் வைக்கவில்லை என்றால், இஸ்ரேலில் ஆட்சிக்கு இப்போது மூன்று ஆப்ஷன்கள் தான் உள்ளன.
> இன்னொரு பொதுத்தேர்தல் நடத்தப்படும்,
> எதிர்க்கட்சியிலிருந்து நெதன்யாகுவின் கூட்டணிக்குத் தாவும் எம்.பி.க்கள் மூலம் ஆட்சி அமைவது,
> ஒரு தேசிய ஒற்றுமை அரசை உருவாக்குவது ஆகும்.
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
'பிரஷர் ஏறி நொந்து போயிருக்கேன்!' – 20% கமிஷன் சர்ச்சை; கொதிக்கும் தவெக எம்.எல்.ஏ குழந்தைராணி!
November 4, 2026
"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்
November 4, 2026
KFC Reveals Official Avengers: Doomsday Menu 'Worthy' of Dr. Doom
November 4, 2026
The Budget-Friendly Flashforge Adventurer 5M 3D Printer Drops to a Mere $131 Ahead of Black Friday
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026
Get a Nintendo Switch 2 Console (USA Model) for $448 During the AliExpress Early Black Friday Sale
November 4, 2026