நீலகிரி மாவட்டம் கூடலூரைச் சேர்ந்த முகமது நசீஃப், த.வெ.க-வின் மாவட்ட மண்டல இணைச் செயலாளராகப் பதவி வகித்து வந்திருக்கிறார். அதேபோல, கூடலூர் அருகிலுள்ள எருமாடு பகுதியைச் சேர்ந்த நௌஃபல், தி.மு.க- வின் மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளராக உள்ளார். இந்த இருவரும் ஒன்று சேர்ந்து எம்.டி.எம்.ஏ போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு கேரள போலீஸில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள். ஆளுங்கட்சி செல்வாக்கைப் பயன்படுத்தி வயநாடு முழுவதும் தங்குதடையின்றி பிசினஸில் இறங்கி அடித்திருக்கிறார்கள்.

பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து உயர் ரக போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த இவர்களிடமிருந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களை பறிமுதல் செய்ததுடன், விற்பனைக்கு பயன்படுத்திய த.வெ.க கொடியுடனான வாகனத்தையும் பறிமுதல் செய்திருக்கிறது கேரள காவல்துறை. த.வெ.க, தி.மு.க என இரண்டு கட்சிகளும் இருவரையும் கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது.
கடந்த அக்.24-ம் தேதி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரிலுள்ள மருதுபாண்டியர்களின் நினைவிடத்தில், த.வெ.க சார்பில் நடைபெற்ற அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் உட்கட்சிப் பிரச்னை வெடித்திருக்கிறது. அமைச்சர்கள் நிர்மல்குமார், டி.கே.பிரபு, முகமது பர்வேஸ், மதன் ராஜா ஆகியோர் நினைவிடத்துக்கு அஞ்சலி செலுத்த வருகிறார்கள் என முன்பே தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அமைச்சர்கள் வருவதற்கு முன்பாகவே சிவகங்கை த.வெ.க எம்.எல்.ஏ குழந்தைராணி தன் தலைமையிலான படையுடன் வந்து மருதுபாண்டியர் சிலைகளுக்கு மாலை அணிவித்திருக்கிறார்.

மாவட்ட பொறுப்பு அமைச்சர் டி.கே பிரபு நிகழ்ச்சிகளை தொடர்ச்சியாக புறக்கணித்துவரும் நிலையில், அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற நிகழ்வுகளிலும் குழந்தை ராணி தனி ஆவர்த்தனம் நடத்தியதாக சொல்கிறார்கள் விவரமறிந்தவர்கள். ‘நானே அமைச்சராக வேண்டியவர்தான்… நான் அமைச்சர்களுக்கு பின்னால் வரணுமா…’ என சகாக்களிடம் குமுறியிருக்கிறார் குழந்தை ராணி. ‘நான்கு அமைச்சர்கள் வந்திருந்தும் இப்படி நடந்துக் கொள்கிறாரே’ என கொதித்துவிட்டார்களாம் மாண்புமிகுக்கள்.
தனியார் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதில் லஞ்சம் பெற்றதாக பதிவான வழக்கில், முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். கைது செய்யப்பட்டு எழும்பூர் சி.சி.பி அலுவலகத்தில் 4 மணி நேரம் இருந்தார் அன்பில். அப்படியிருந்தும், சென்னைக்குள் இருக்கும் முன்னாள் அமைச்சர்களோ, மா.செ-க்களோ யாரும் கமிஷ்னர் ஆபிஸ் பக்கம் தலைக்காட்டவில்லை. அதிகபட்சம் 50 உடன்பிறப்புகள் கூடியிருப்பார்கள்.

ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்ட போதுதான் சேகர் பாபுவும் கலாநிதி வீராசாமியும் சவுண்டுவிட்டுக் கொண்டு சென்றிருக்கிறார்கள். முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் கைதான விவாகரம் உடன்பிறப்புகள் மத்தியில் எந்த கொதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் நிதர்சனம். ‘கடந்த ஆட்சியில் கட்சிக்காரருக்கு எந்தவொரு உதவியும் செய்யாத ஒரே அமைச்சர் அன்பில்தான். இந்த கைதுக்கு உகந்த ஆள்தான் அவர்’ என மாவட்டச் செயலாளர்களே பேசிக்கொள்ளும் சூழல்தான் கட்சிக்குள் இருக்கிறது.
முத்துராமலிங்கத் தேவர் குரு பூஜையில் பங்கேற்க முதல்வர் விஜய் பசும்பொன் செல்வார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பசும்பொன் பயணத்துக்கு ‘நோ’ சொல்லிவிட்டது முதல்வர் அலுவலகம். அதற்கு மாற்றாக, சென்னை நந்ததனத்திலுள்ள தேவர் சிலைக்கு முதல்வர் விஜய் மாலை அணிவிப்பார் எனச் சொல்லப்படுகிறது.
முதல்வர் பசும்பொன் செல்லாத நிலையில் தி.மு.க தலைவர் மு.ஸ்டாலின், அ.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என இரண்டு கட்சித் தலைவர்களும் பசும்பொன் செல்கின்றனர்.

‘முதல்வர் பசும்பொன் வரமாட்டாரா.. இடைத்தேர்தலில் முறுங்கக்காய் பறிப்பவர்.. தேவருக்கு மரியாதை செலுத்த மாட்டாரா..’ என திரி கொளுத்தித் தொடங்கிவிட்டது எதிர் தரப்பு. ‘மறைந்த தலைவர்களின் குரு பூஜையில் பங்கேற்பது தனிப்பட்ட சமூகத்துக்கான நிகழ்வாகவே பார்க்கப்படுகிறது. அந்த கோணத்தில் இமானுவேல் சேகரனார் குருபூஜையை தவிர்த்த முதல்வர் விஜய், தற்போது பசும்பொன் செல்வதையும் தவிர்த்திருக்கிறார்’ என்கிறார்கள் த.வெ.க தரப்பில்.
முதல்வருக்கு பதிலாக அமைச்சர் நிர்மல்குமார் உள்ளிட்டவர்களின் டீம் பசும்பொன் செல்லவிருக்கிறது என்கிறார்கள் விவரமறிந்தவர்கள்.
முதல்வர் விஜய் தாராபுரம் பிரசாரத்துக்கு வருகை தந்த சமயத்தில், தன்னை த.வெ.க-வில் இணைத்துக் கொண்டார் அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் செம்மலை. கட்சியில் இணைந்துவிட்டாலும் அவர் எதிர்பார்த்த வரவேற்பும் மரியாதையும் த.வெ.க-வில் கிடைக்கவில்லை. அமைச்சர் செங்கோட்டையன் தவிர வேறு எவரிடமும் பேச முடியவில்லையாம். கட்சிக்குள் செல்வாக்கை உருவாக்கிக் கொள்ளும் விதமாக, சேலம் அ.தி.மு.க நிர்வாகிகளை த.வெ.க-வில் இணைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறாராம் செம்மலை.

மேலும் மாநிலம் முழுவதும் தனது தெரிந்த பேச்சாளர்கள், ஓரம்கட்டப்பட்ட நிர்வாகிகளையும் த.வெ.க-வுக்கு இழுக்க முயற்சிக்கிறாராம். இவற்றை உன்னிப்பாக கவனித்துவரும் சேலம் பொறுப்பு மாவட்ட அமைச்சர் தமிழன் பார்த்திபன். ‘அவர் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்.. சேலம் மாவட்டத்துக்குள் அவருக்கு எந்த முக்கிய பொறுப்பும் கிடைக்காது. அவர் அழைத்து வருபவர்களுக்கா பதவி கிடைத்துவிடப் போகிறது..?’ என நகையாடுகிறாராம்.
ஆகையால், செம்மலை திக்கு தெரியாமல் நிற்கிறார்!
ராணிப்பேட்டையில் அதிர்ச்சி.. வீட்டில் தனியாக இருந்த மாணவி செய்த காரியம்.. நடந்தது என்ன?
October 30, 2026
கள்ள உறவால் தாம்பத்தியத்துக்கு மறுத்த மனைவி.. விவாகரத்து கோரிய கணவருக்கு நீதிமன்றம் போட்ட உத்தரவு
October 30, 2026
நெதன்யாகுவை காலி செய்த இஸ்ரேலிய இளைஞர்கள்! ஆனாலும், தீர்வு கிடைக்கல! தேர்தலில் ஏற்பட்ட பெரும் குழப்பம்!
October 30, 2026
என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார்
October 30, 2026
அம்பாசமுத்திரத்தில் சீமானை ஏன் திமுக – அதிமுக பொதுவேட்பாளராக ஏற்க வேண்டும்! அதிர வைக்கும் காரணங்கள்
October 30, 2026
நெதன்யாகு வேண்டாம்.. இஸ்ரேலில் வெடித்த போராட்டம்.. தேர்தல் முடிவுக்கு நடுவே கொந்தளிக்கும் மக்கள்!
October 30, 2026
Hear Glen Hansard’s Posthumously Released Pogues Cover Honoring Shane MacGowan
October 30, 2026
Dropkick Murphys Singer Interviews Bruce Springsteen, Joan Baez, Chuck D for New Video Series
October 30, 2026
Blue Wave Likely: 12 Seats Shift Left As Democrats Could Have Largest Majority Since 2009
October 30, 2026
How Travel Can Be an Antidote to Optimization Culture
October 30, 2026
World’s Biggest Humanoid Robot Maker Wants To Change How We Measure Robot Work
October 30, 2026
Could Your Existing Business Qualify You To Get A U.S. E-1 Work Visa?
October 30, 2026