தமிழகம் முழுவதும் அரசே மணல் குவாரிகளை நடத்தி வந்தது. மணல் குவாரிகளில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிகளவில் மணல் எடுத்த குற்றச்சாட்டின் பேரில் அமலாக்கத்துறை குவாரிகளில் அதிரடி சோதனை நடத்தியது. இதுதொடர்பாக வழக்கும் பதிவு செய்யப்பட்டது. அதனால் கடந்த மூன்று ஆண்டுகளாக மணல் குவாரிகள் செயல்படவில்லை. அதனால் கட்டுமானத்துக்கு எம் சான்ட்டை மட்டுமே பயன்படுத்திவருகின்றனர். தற்போது எம். சான்ட்டின் விலையும் பல மடங்கு அதிகரித்திருக்கிறது. அதனால் மீண்டும் மணல் குவாரிகளை திறந்து முறைகேடுகளின்றி இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு மணல் லாரிகள் உரிமையாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி, முதல்வர் விஜய், நீர்வளத்துறை அமைச்சர் உள்ளிட்டவர்களுக்கு கோரிக்கை மனு கொடுத்திருக்கிறார். அதுதொடர்பாக சம்மேளனத்தின் சார்பிலும் கவனஈர்ப்பு போராட்டமும் நடத்தப்பட்டிருக்கிறது.

இதுகுறித்து சம்மேளனத்தின் தலைவர் செல்ல ராஜாமணி கூறுகையில், “தமிழகம் முழுவதும் செயல்பட்டு வந்த மணல் குவாரிகள் 2023-ம் ஆண்டுடன் மூடப்பட்டன. அதனால் மணல் குவாரிகளை நம்பியே இருந்த 55 ஆயிரத்துக்கு மேற்பட்ட மணல் லாரிகள் ஓடாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த லாரிகள், மணல் லோடுகளுக்காகவே பயன்படுத்தப்படக்கூடியவை. அதனால் வேறு எந்த லோடுகளும் இந்த லாரிகள் மூலம் கொண்டுச் செல்ல முடியாது. மணல் குவாரிகள் மூடப்பட்டதால் லாரி உரிமையாளர்களும் டிரைவர்களும் அவர்களின் குடும்பத்தினரின் வாழ்வாதாரமும் முற்றிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. கடன் மூலம் லாரிகளை வாங்கியவர்கள் இஎம்ஐ செலுத்த முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள்.
அரசு நடத்திய மணல் குவாரிகளில் ஒரு யூனிட் மணல் விலை 2650 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. மணல் குவாரிகள் மூடப்பட்டதால் கட்டுமான பணிகளுக்கு எம்.சான்ட்களையே நம்பியிருக்க வேண்டிய சூழல் உள்ளது. அதனால் ஒரு யூனிட் எம்.சான்ட் 5,000 ரூபாய் வரை விற்கப்படுகிறது. எம்.சான்ட்களை நடத்தும் குவாரி உரிமையாளர்களில் சிலர் போலி பில் மூலம் முறைகேடுகளில் ஈடுபடுகின்றனர். அதனால் எம்.சான்ட்களை எடுத்துச் செல்லும்போது வருவாய்துறை, காவல்துறையினரிடம் சிக்க வேண்டிய சூழல் இருக்கிறது. மேலும் எம்.சான்ட்டின் விலை அதிகமாக இருந்தாலும் மணல் போல உறுதியாக கட்டிடங்கள் இருப்பதில்லை. மணலுக்கு மாற்றாகத்தான் எம்.சான்ட் கொண்டு வரப்பட்டது. தற்போது எம். சான்ட்டை இயற்கை வளங்களை அழித்துதான் தயாரிக்கிறார்கள். அதனால் இயற்கை வளம் அழிக்கப்படுவதோடு சுற்றுச்சூழல் மாசும் ஏற்படுகிறது. எனவே எம்.சான்ட்டுக்கு மாற்றாக மணல் குவாரிகளை திறக்க அரசு முன்வர வேண்டும். அதே நேரத்தில் முறைகேடுகள் இல்லாமல் மணல் குவாரிகளை அரசே நடத்த வேண்டும்.
இதுதவிர மேட்டூர் உள்ளிட்ட அணைகள் தூர்வாரி பல ஆண்டுகளாகிவிட்டன. அந்த அணைகளை தூர்வாரினால் பல லட்சம் யூனிட் மணல் கிடைக்கும். இதன்மூலம் மேட்டூர் உள்ளிட்ட அணைகளில் நீர்தேக்கத்தையும் அதிகரிக்கலாம். முறைகேடுகள் இல்லாமல் அரசே மணல் குவாரிகளை நடத்தினால் அரசுக்கு ஒவ்வொரு மாதமும் பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கும். ஆனால் தற்போது தமிழகத்தில் சில இடங்களில் மணல் கொள்ளைகள் நடக்கின்றன. இதனால் அரசுக்கு பல லட்சம் ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுகிறது. அதைத் தடுக்க மணல் குவாரிகளை அரசே நடத்த வேண்டும். அதன்மூலம் மணல் லாரி உரிமையாளர்களும் இந்தத் தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். ஏற்கெனவே திருச்சியில் அரசின் கவனத்தை ஈர்க்க அறவழியில் போராட்டத்தை நடத்தினோம். முதல்வர் விஜய்க்கும் நீர்வளத்துறை அமைச்சருக்கும் அரசு செயலாளர்களுக்கும் மணல் குவாரிகளை திறக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்திருக்கிறோம். அதற்கு அரசு செவிசாய்க்கவில்லை என்றால் தமிழகம் முழுவதும் எங்கள் சம்மேளனத்தின் சார்பில் மிகப்பெரியளவில் போராட்டம் நடத்தப்படும்” என்றார்.
Dharmapuri murder: கஞ்சா போதையில் தாயை கொன்றாரா தருமபுரி தேவராஜ்? போலீஸார் பரபரப்பு விளக்கம்
October 31, 2026
பள்ளிக்குள் 10ம் வகுப்பு மாணவியை மின்சார ரம்பத்தால் வெட்டிய இளைஞர்.. காதலிக்க மறுத்ததால் கொடூரம்?
October 31, 2026
உயிரை கையில் பிடித்துக்கொண்டு பயணம்! இந்தியர்களுக்கு தொடரும் சோகம்! எப்போது முடியும் பிரச்சனை?
October 31, 2026
தர்காவுக்குள் அப்படி என்ன பதுங்கியிருந்தது?.. 12 அடி நீள மலைப்பாம்பால் தென்காசியில் பரபரப்பு
October 31, 2026
உளுந்தூர்பேட்டை ரேஷன் அரிசியில் நெளிந்த புழுக்கள்.. லாரியையே சிறைபிடித்த கள்ளக்குறிச்சி மக்கள்
October 31, 2026
போலாந்தில் வெடித்த பிரச்சனை! ஐரோப்பாவை ஆட்டுவிக்கும்.. போராட்டங்கள்!
October 31, 2026
WTC 2027 புள்ளி பட்டியல்: தென்னாப்பிரிக்கா எதிரான டெஸ்ட் தொடர் தோல்வி.. ஆஸ்திரேலிய அணி சரிவு
October 31, 2026
Massive Gen Z protests sweep cities across Germany
October 31, 2026
AUS vs SA: தென்னாப்பிரிக்கா வரலாற்று சாதனை.. 3வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரை வென்றது
October 31, 2026
Ukraine news: Evacuees from Russian-occupied Oleshky reach Kyiv-controlled territory
October 31, 2026
Bute House protested by environmental campaigners
October 31, 2026