செங்கல்பட்டில் நேற்று(அக்.31) அதிமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்டு பேசிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, ”தற்போதைய ஆட்சியில் மின்சாரம் எப்போது வரும் எப்போது போகும் என்றே தெரியாத ஒரு அவல நிலை நீடித்து வருகிறது. மின்சாரத்தை தொட்டால்தான் கடந்த காலங்களில் மக்களுக்கு ஷாக் அடிக்கும். ஆனால் இந்த ஆட்சியில் மின்கட்டணத்தைக் கேட்டாலே மக்களுக்குத் தூக்கிவாரிப் போடும் அளவிற்கு ஷாக் அடிக்கிறது.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

நான் பேசி முடிக்கிற வரைக்குமாவது இந்த ஆட்சியில் மின்சாரம் தடைப்படாமல் இருக்க வேண்டும். நமது மாவட்டச் செயலாளர் மிகவும் உஷாராக இருக்கிறார். இந்தத் தறிகெட்ட ஆட்சியைப் பற்றி நன்றாகத் தெரிந்ததால், எதற்கும் எச்சரிக்கையாக இருக்கட்டும் என்று சொந்தமாக ஜெனரேட்டர் வசதி செய்து வைத்துள்ளார்.

மக்கள் நிம்மதி வேண்டி இறைவனைப் பிரார்த்திக்கச் சென்ற இடத்தில் கூட மின்சாரம் நிறுத்தப்படுகிறது. அதற்கு அடுத்த நாள் நாட்டின் துணை குடியரசுத் தலைவர் கோவிலுக்குச் சென்றபோது கூட இரண்டு முறை மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.

சட்டமன்றத்தில் மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல்குமார் அவர்கள் கடந்த திராவிட முன்னேற்ற ஆட்சியில் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது என்று கூறிவிட்டு, தற்போது அதற்குப் பதிலாக 41 ரூபாய் 50 காசுகளுக்கு மின்சாரம் கொள்முதல் செய்ய டெண்டர் கோரியது ஏன்?.

விஜய் - சிடிஆர் நிர்மல் குமார்
விஜய் – சிடிஆர் நிர்மல் குமார்

இது சுமார் 110 சதவீத விலை உயர்வு இல்லையா? மக்கள் வரிப்பணத்தில் இப்படி ஆயிரம் ஆயிரம் கோடிகளை வீணடிப்பது ஏன்?. மின்சாரத் துறையில் ஏற்கனவே 2 லட்சத்து 48 ஆயிரம் கோடி ரூபாய் கடன் தத்தளித்துக் கொண்டிருக்கும் வேளையில், இப்படித் தவறான நிதி மேலாண்மை மூலம் மக்களைத் துயரத்திற்கு உள்ளாக்கும் தற்போதைய அரசுக்கு, வரும் நாட்களில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள். அதிமுக மீண்டும் எழுச்சி பெறும்” என்று பேசியிருக்கிறார்.

More in TamilNews
"அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் 1 நாள் வேட்டி சட்டை அணியவேண்டும்"- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு "அனைத்து அரசு அலுவலர்களும் வாரத்தில் 1 நாள் வேட்டி சட்டை அணியவேண்டும்"- அமைச்சர் ராஜ்மோகன் அறிவிப்பு November 1, 2026 ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆகணும்.. டெல்லி ராம்லீலா நோக்கி இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி ஞானேஷ் குமார் பதவி விலகியே ஆகணும்.. டெல்லி ராம்லீலா நோக்கி இந்தியா கூட்டணி கட்சிகள் பேரணி November 1, 2026 ஆட்சி மாறிய பின்.. ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள்! தற்போதைய நிலவரம் என்ன? ஆட்சி மாறிய பின்.. ஆமை வேகத்தில் நடக்கும் மதுரை டைடல் பார்க் கட்டுமான பணிகள்! தற்போதைய நிலவரம் என்ன? November 1, 2026 டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..இன்று முதல் எகிறும் ரேட்! ஒரு குவாட்டர், ஃபுல் விலை எவ்வளவு? டாஸ்மாக் புதிய விலைப்பட்டியல் வெளியீடு..இன்று முதல் எகிறும் ரேட்! ஒரு குவாட்டர், ஃபுல் விலை எவ்வளவு? November 1, 2026 "டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் எனப் பெருமை பேசும் தவெக அரசு இதை செய்யுமா?" – எடப்பாடி பழனிசாமி "டாஸ்மாக் கடைகளில் அதிக வருமானம் எனப் பெருமை பேசும் தவெக அரசு இதை செய்யுமா?" – எடப்பாடி பழனிசாமி November 1, 2026 மத்திய அரசை கவிழ்க்க சதி! பகீர் கிளப்பிய ஜேபி நட்டா.. டெல்லி பேரணியால் ராகுல் காந்திக்கு வார்னிங் மத்திய அரசை கவிழ்க்க சதி! பகீர் கிளப்பிய ஜேபி நட்டா.. டெல்லி பேரணியால் ராகுல் காந்திக்கு வார்னிங் November 1, 2026

See all 642 in TamilNews →

Latest News

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *