இந்த வாரத்தின் தொடக்கத்தில் தேனி தேக்கம்பட்டி துணைச் சிறையிலிருந்து 17 விசாரணைக் கைதிகள் தப்பி ஓடினர். நேற்று கோவையிலிருந்து ராகவன் என்னும் விசாரணைக் கைதி தப்பி ஓடியுள்ளார். இவர்களைப் போலீசார் தேடி வருகின்றனர்.

இந்தச் சம்பவங்களுக்கு கண்டனம் தெரிவித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“இந்தச் சோப்ளாங்கி ஆட்சியில் புழல், தேனியைத் தொடர்ந்து கோவை மத்தியச் சிறையிலிருந்தும் ஒரு கைதி தப்பிச் சென்றுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் பதிவு
உதயநிதி ஸ்டாலின் பதிவு

அடுத்து பாளையங்கோட்டையா? சேலமா? எனக் கைதிகள் inky pinky ponky போட்டுத் தப்பிச் செல்லும் அளவுக்கு Dummy முதலமைச்சரின் ஆட்சி லட்சணம் இருக்கிறது.

தோல்விப் பயத்தில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளுக்கு முதலமைச்சர் ஓடுகிறார். மறுபுறம் கைதிகளோ, இது கையாலாகாத அரசு எனத் தெரிந்துகொண்டு சிறையிலிருந்து ஓட்டம் எடுக்கின்றனர்.

இனி பணியிடமாற்றம், சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என்றால் முதலமைச்சர் தன்னைத்தானேதான் செய்துகொள்ள வேண்டும்.

‘மெத்’ அரசின் மெத்தனப் போக்கால் தமிழ்நாட்டு மக்களின் பாதுகாப்பு தொடர்ந்து கேள்விக்குறியாகி வருவதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.” என பதிவிட்டுள்ளார்.

See all 681 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *