ஈரான் போர் தொடங்கியதிலிருந்து கச்சா எண்ணெய் விலை ஏறுமுகத்திலேயேதான் இருக்கிறது.
தற்போது சர்வதேச சந்தையில் ஒரு பீப்பா WTI எண்ணெய் 104 டாலருக்கும், Brent கச்சா எண்ணெய் 112 டாலருக்கும் வர்த்தகமாகிக் கொண்டிருக்கிறது.
நவம்பர் 3-ம் தேதி நெருங்குகிறது (இந்தத் தேதிக்குப் பின், அமெரிக்கா மீது தாக்குதல் நடத்தப்படும் என்று முன்பு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்திருந்தார்). அமெரிக்கா, ஈரான் இரு நாடுகளும் சமாதானத்தை நோக்கி நகரவில்லை என்றுதான் தற்போதைய சூழல்கள் காட்டுகின்றன – இதனால், கச்சா எண்ணெய் விலை இன்னும் அதிகமாவதற்கான வாய்ப்புகள்தான் உள்ளன.

ஐரோப்பாவிற்கு 100 பில்லியன் யூரோ செலவு
இந்த நேரத்தில் ஜெர்மனியின் சான்சலர் மெர்ஸ் ஈரான் போர் குறித்து, “கடந்த எட்டு மாதங்களில், ஈரான் மோதலால் ஏற்பட்ட எரிசக்தி விலை உயர்வின் காரணமாக மட்டுமே, ஐரோப்பாவிற்கு மட்டும் 100 பில்லியன் யூரோவிற்கும் அதிகமான செலவு ஏற்பட்டுள்ளது.
இந்த மோதலின் விளைவாக எரிசக்தி விலை உயர்ந்ததால், ஐரோப்பாவில் உள்ள வணிகங்களும் நுகர்வோரும் 100 பில்லியன் யூரோவிற்கும் அதிகமாகக் கூடுதலாகச் செலுத்தியுள்ளனர்.
இந்த மோதலை எவ்வளவு விரைவாக முடிவுக்குக் கொண்டுவர முடியுமோ அவ்வளவு விரைவாக முடிவுக்குக் கொண்டுவருவதில் நமக்கு மகத்தான பொருளாதார நலன் உள்ளது” என்று பேசியுள்ளார்.
மத்திய கிழக்கிற்கு பிரச்னை
ரஷ்யா-உக்ரைன் போர் காரணமாக, ஐரோப்பிய நாடுகள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதில்லை. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அவர்கள் கணிசமாக எண்ணெய் இறக்குமதி செய்து வருகின்றனர்.
ஆனால், ஈரான் போர் காரணமாக வழக்கமான எண்ணெய் சப்ளை அவர்களுக்குக் கிடைப்பதில் சிக்கல். மேலும், அமெரிக்கா, நார்வே, பிரேசில், ஐக்கிய ராஜ்ஜியம் ஆகிய நாடுகளிலிருந்து இறக்குமதி செய்தாலும், கச்சா எண்ணெய் விலை உலக அளவிலேயே அதிகமாக இருப்பதால், ஐரோப்பிய நாடுகள் மெர்ஸ் சொல்வதுபோல பாதிப்பைச் சந்தித்து வருகின்றன.

அராக்சி பதிவு
மெர்ஸின் இந்தப் பேச்சுக்குப் பதிலடி தருவதுபோல, ஈரானின் வெளியுறவுத் துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி தனது எக்ஸ் பக்கத்தில், “கடந்த ஆண்டு ஈரான் மீது இஸ்ரேல்-அமெரிக்கா குண்டுவீச்சைத் தொடங்கியபோது, அதை மெர்ஸ் பெரிதும் பாராட்டி வரவேற்றார்.
‘ஐரோப்பாவின் வேலையை அவர்கள் செய்கிறார்கள்’ என்று தம்பட்டம் அடித்தார்.
எங்கள் மக்களுக்குத் தீங்கு செய்யத் துணியும் எதிரிகளுக்கு ஈரானின் வலிமைமிக்க ஆயுதப் படைகள் வழங்கப்போகும் அதிர்வை ஏற்படுத்தும் பதிலடியுடன் ஒப்பிடும்போது, இந்த 100 பில்லியன் யூரோ எல்லாம் ஒன்றுமே இல்லை!
சிவப்புக் கோடுகள் என்பதெல்லாம் இனி கடந்த காலக் கதையாகிவிட்டது!” என்று பதிவிட்டுள்ளார்.
உலக நாடுகளின் நிலை
ஐரோப்பாவிற்கு இந்த நிலை என்று மெர்ஸ் ஓபனாகக் கூறிவிட்டார். ஆனால், கிட்டத்தட்ட அனைத்து உலக நாடுகளின் நிலையும் இதுதான்.
ஈரான் போர் தொடர்ந்து கச்சா எண்ணெய் விலை இனியும் அதிகரித்தால் உலக அளவில் நிலைமை மிகவும் மோசமாகக் கூடும்.
கச்சா எண்ணெயைப் பொருளாதாரத்தின் உயிர்நாடி என்று சொல்லலாம். ஏற்றுமதி, இறக்குமதிகளிலிருந்து, நுகர்வோரிடம் ஒரு பொருள் அல்லது சேவை சென்று சேர்வதற்கு பெட்ரோல், டீசல் மிக மிக முக்கியம்.
இதன் சப்ளை குறையும்போது, பெட்ரோல், டீசல் விலை தானாக உயரும். இவை உயரும்போது, நுகர்வோரிடம் சேரும் பொருள் மற்றும் சேவையின் விலையும் அதிகரிக்கும்.
ஐரோப்பிய நாடுகளில் இப்போது போராட்டங்கள் வெடித்திருக்கின்றன. இந்த நேரத்தில் இன்னும் பணவீக்கம் கூடினால், அந்த நாடுகளின் அரசு என்னவாகும்?

இந்தியா..!
நம் நாட்டிற்கு வந்தால், ஜி.டி.பி கணிப்பு, ஜி.எஸ்.டி வருமானம் போன்ற பொருளாதாரப் புள்ளிவிவரங்கள் பாசிட்டிவாகவே உள்ளன. ஆனால், பணவீக்கம் அதிகரித்துக்கொண்டே போனால், மக்கள் அதை எப்படி சமாளிப்பார்கள் என்பதைக் கவனிக்க வேண்டும்.
ஏனெனில் பணவீக்கம்தான் உயருகிறதே தவிர, மக்களின் வருமானம் உயரவில்லை. பொதுவாக ஆயுத பூஜை சமயங்களில், இந்தியாவில் வாகனங்களின் விற்பனை அதிகமாக இருக்கும்.
ஆனால், கடந்த நவராத்திரியின் போது, 2025-ம் ஆண்டை விட, ரீடெயில் வாகனங்களின் விற்பனை 6.52 சதவிகிதம் சரிந்துள்ளது. (வாகன விற்பனையாளர் சங்கங்களின் கூட்டமைப்பு தரவுகளின் படி)
இதற்குப் பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், மக்களின் வாங்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது என்பதற்கான சாட்சியும் இது.
போர் முடியாமல் ஈரான் ஹார்முஸைத் திறப்பதாக இல்லை. சமீபத்திய பாதுகாப்புக் கூட்டத்தில் கூட, ஈரானின் உச்சத் தலைவர் மொஜ்தபா காமேனி தங்களுடைய நாட்டின் நலனுக்காக ஹார்முஸைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க அறிவுறுத்தியிருக்கிறார்.
இதனால், உலக நாடுகளின் பொருளாதாரம் அடிபடாமல் இருக்க, ஈரான் போர் நிறுத்தத்தைத் தவிர, வேறு வழி எதுவும் இல்லை!
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
The Best Airbnbs in Colorado, Including a Ski-In Chalet and a Cliffside Cabin
November 4, 2026
Qualcomm is betting big on data centers as smartphone sales sink
November 4, 2026
Donna Kelce On Staying Married: she stayed together for the kids; and juggled being a major breadwinner
November 4, 2026
10 Magical Christmas Traditions Around the World
November 4, 2026
This Train Offers a Front-Row Seat to One of Colorado’s Greatest Natural Wonders
November 4, 2026
WWE Crown Jewel 2026: Guide lists timings and streaming; Sami Zayn vs Roman Reigns headlines
November 4, 2026