கடந்த சில மாதங்களாக, பொருளாதார வளர்ச்சியில் பின்தங்கியுள்ளது தமிழ்நாடு. இதைச் சுட்டிக்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு.

“பொருளாதார வளர்ச்சியில் இந்தியாவின் முதன்மையான மாநிலங்களில் ஒன்றாக இருந்த தமிழ்நாடு தவெக ஆட்சியில் தொடர்ந்து சரிவைச் சந்தித்துக் கொண்டிருப்பது கவலை அளிக்கிற்து.

அக்டோபர் மாத ஜிஎஸ்டி வரி வருவாயில், கேரளா 23%, ஆந்திரா 24%, கர்நாடகா 18%, தெலுங்கானா 14% என அண்டை மாநிலங்கள் இரட்டை இலக்கத்தில் வளர, தமிழ்நாடு வெறும் 3% வளர்ச்சியோடு பின்தங்கியுள்ளது.

தமிழ்நாட்டில் இறக்குமதி செய்யப்படும் சில முக்கிய பொருட்களில் இருந்து பெறப்படும் வரியால், மாநிலத்தின் மொத்த வரிவருவாயில் ஓரளவு உயர்வு காணப்பட்டாலும், நமது சொந்த உற்பத்தியின் மூலம் ஈட்டப்படும் வரி வருவாய் குறைந்தே வருகின்றது.

இது மாநிலத்தில் நிலவும் ஒட்டுமொத்த பொருளாதார தேக்க நிலையின் அளவீடாகக் கருதப்படவேண்டியது என்பதனை தவெக அரசிற்குச் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

எனவே, இறக்குமதி ஆகும் பொருட்களின் மீதான வருவாயை மட்டும் நம்பியிராமல், நமது சொந்த உற்பத்தியினைப் பெருக்கி வெளிமாநிலங்களுக்கும் வெளிநாடுகளுக்கும் விற்பனையை அதிகரிக்கவும்,

அதன் வாயிலாக தமிழ்நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரத்தையும் நமது இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளையும் உயர்த்துவதற்குமான வழிவகைகளை தவெக அரசு உடனடியாகக் காண வேண்டுமெனவும் வலியுறுத்துகின்றேன்”. என்றார்.

More in TamilNews
நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் நல்ல சரக்கு இல்லை.. எம்ஆர்பி விலையும் இல்லை.. டாஸ்மாக் தனியார் மயம்? அமைச்சர் கூறிய பாயிண்ட் November 2, 2026 பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் பட்டியலினத்தவர் மண்டியிட்டு மன்னிப்பு கேட்டாரா? வைரலாகும் வீடியோ! கள்ளக்குறிச்சி காவல் துறை விளக்கம் November 2, 2026 விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு விவாகரத்தான பெண்ணிடம் ஆபாசமாக பேசிய ஆட்டோ டிரைவர் கைது! ஆம்பூரில் பரபரப்பு November 2, 2026 "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க" – முதல்வர் வாகனத்தை மறித்த சிறுவர்கள்! என்ன நடந்தது? "விஜய் மாமா காப்பாத்துங்க.. ஊரையே இடிக்குறாங்க" – முதல்வர் வாகனத்தை மறித்த சிறுவர்கள்! என்ன நடந்தது? November 2, 2026 ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வரலாறு படைக்கும் தமிழ் நூல்: 'ஷார்ஜாவின் சிற்பி' புத்தக வெளியீட்டு விழா ஷார்ஜா புத்தக கண்காட்சியில் வரலாறு படைக்கும் தமிழ் நூல்: 'ஷார்ஜாவின் சிற்பி' புத்தக வெளியீட்டு விழா November 2, 2026 சென்னை டூ குமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள்.. தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே.. புக்கிங் எப்போது? சென்னை டூ குமரி, தென்காசிக்கு சிறப்பு ரயில்கள்.. தீபாவளிக்கு இன்ப அதிர்ச்சி தந்த தெற்கு ரயில்வே.. புக்கிங் எப்போது? November 2, 2026

See all 618 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *