போராட்டம் நடத்துவதற்காக ஓர் இடத்தைக் காலவரையின்றி யாரும் ஆக்கிரமிக்க முடியாது என்றும், போராட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட இடங்களில்கூட குறிப்பிட்ட காலக்கெடு நிர்ணயிக்கப்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக எதிர்க்கட்சிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மற்றும் ராம் லீலா மைதானத்தில் நடத்திய பிரமாண்டப் போராட்டங்கள் தொடர்பான வழக்கை விசாரித்தபோது, நீதிமன்றம் இத்தகைய கருத்தைத் தெரிவித்திருக்கிறது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தலைமை நீதிபதி சூர்யகாந்த், “ஒரு இடத்தை எல்லா நேரமும் நீங்கள் ஆக்கிரமித்துக் கொள்ள முடியாது. போராட்டம் நடத்த மற்றவர்களுக்கும் உரிமை உள்ளது. விவசாயிகள் அல்லது வழக்கறிஞர்கள் போன்ற மற்ற குழுவினர் எங்கே செல்வார்கள்? அனைவருக்கும் போராட உரிமை உண்டு” என்று குறிப்பிட்டார். திருவிழாக் காலங்களில் போராட்டங்களுக்குத் தடை விதிக்கக் கோரி வர்த்தக அமைப்புகள் தாக்கல் செய்த மனுமீது மத்திய அரசு மற்றும் பிற தரப்பினர் பதிலளிக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.
மத்திய அரசின் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, “போராட்டத்திற்கு யார் அழைப்பு விடுக்கிறார்களோ, அவர்களே அதன் விளைவுகளுக்கும் முழுப் பொறுப்பேற்க வேண்டும்” என்று வாதிட்டார். மேலும், “ஜூலை 20 அன்று நடந்த போராட்டத்திற்கு ஒரு நாள் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், போராட்டக்காரர்கள் அந்த இடத்தை ஆக்கிரமித்து, நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றனர். நாடாளுமன்றம் என்பது சாதாரண அரசியல் கட்டடம் அல்ல. நாடாளுமன்றத்தையும் உச்ச நீதிமன்றத்தையும் நோக்கி யாரும் பேரணி செல்ல முடியாது” என்றார்.
இந்தத் தொடர் போராட்டங்களால் தங்களது வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வர்த்தகர்கள் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. வர்த்தகர்கள் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோத்தகி, “போராட்டம் நடந்த பகுதிகளைச் சுற்றி சுமார் 50 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். அனைத்துக் கடைகளும் மூடப்பட்டிருந்தன; கன்னாட் பிளேஸ் பகுதி, மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிக் காணப்பட்டது” என்று குறிப்பிட்ட்டார்.
வர்த்தகர்களின் இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்ஸி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு, வர்த்தகர்களின் மனுவில், போராட்டத்தை ஏற்பாடு செய்த அமைப்புகளையும், கட்சிகளையும் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அப்போதுதான் இந்த விவகாரத்தில் நீதிமன்றம் ஒரு முடிவை எடுக்க முடியும் என்றும் தெளிவுபடுத்தியது.
உச்ச நீதிமன்றத்தின் இந்த தலையீட்டை அகில இந்திய வர்த்தகர்கள் கூட்டமைப்பின் (CAIT) பொதுச் செயலாளரும், எம்.பி-யுமான பிரவீன் கண்டேல்வால் வரவேற்றுள்ளார். “அமைதியான போராட்டத்திற்கான அடிப்படை உரிமைக்கும், குடிமக்கள் தங்கள் தொழிலைச் செய்து வாழ்வாதாரத்தை ஈட்டிக்கொள்ளும் உரிமைக்கும் இடையே ஓர் அரசியலமைப்புச் சமநிலையைப் பேண வேண்டியதன் அவசியத்தை உச்ச நீதிமன்றத்தின் கருத்துகள் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன” என்று அவர் கூறினார்.
வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் பெருமளவில் நீக்கப்பட்டது மற்றும் எஸ்.ஐ.ஆர் (SIR) முறைகேடுகள் தொடர்பாக காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி மற்றும் 12 எதிர்க்கட்சித் தலைவர்கள் தாக்கல் செய்த மனுமீது அக்டோபர் 15 அன்று தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரம் தொடர்பாகவே டெல்லியில் போராட்டங்கள் நடைபெற்றன. முன்னதாக, ஜந்தர் மந்தர் பகுதியிலிருந்து ‘போராட்டங்களுக்கான பிரத்யேக இடம்’ என்ற தகுதியை அரசு நீக்கி, ராம்லீலா மைதானம் உள்ளிட்ட மூன்று மாற்று இடங்களை அறிவித்திருந்தது.
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன?
November 4, 2026
தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?
November 4, 2026
பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா?
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026
Ukrainian strikes kill three in Russia’s Belgorod region
November 4, 2026
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
Democratic voters celebrate El-Sayed’s Michigan win in election ‘blue wave’
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026