முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதியின் தி.மு.க எம்.எல்.ஏவுமான அனிதா ராதாகிருஷ்ணன், கடந்த 14.05.2001 முதல் 31.03.2006 வரையிலான அ.தி.மு.க ஆட்சிக் காலத்தில் வீட்டுவசதி வாரியத்துறை அமைச்சராகப் பதவி வகித்தார். அப்போது வருமானத்துக்கு அதிகமாக சொத்துகள் சேர்த்ததாகக் கூறி, தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன், அவரது மனைவி ஜெயகாந்தி, மகன்கள் அனந்த பத்மநாபன், அனந்த ராமகிருஷ்ணன், அனந்த மகேஸ்வரன் மற்றும் அவரது சகோதரர்கள் சண்முகானந்தன், சிவானந்தன் என மொத்தம் 7 பேர் குற்றம் சாட்டப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கு தூத்துக்குடி முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் Spl.C.No.3/2019 என்ற எண்ணில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் அரசு தரப்பில் 79 சாட்சிகளும், எதிர்தரப்பில் 6 சாட்சிகளும் விசாரிக்கப்பட்டுள்ளனர். மேலும், அரசு தரப்பில் 312 ஆவணங்களும், எதிர்தரப்பில் 74 ஆவணங்களும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இருதரப்பு விசாரணைகளும் நிறைவடைந்தது.
இதற்கிடையே, இந்த வழக்கை மதுரையில் உள்ள பணமோசடி தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரி அமலாக்கத்துறை தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி தள்ளுபடி செய்தது.
இதனால், தூத்துக்குடி நீதிமன்றத்திலேயே சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்ந்து நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளதாகத் தகவல் வெளியானதால், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரின் நீதிமன்ற நிலை என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் எழுந்தது. இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி சுபா உத்தரவிட்டுள்ளார். அனிதா ராதாகிருஷ்ணனின் வழக்கு கடந்து வந்த பாதை குறித்து சில வழக்கறிஞர்களிடம் பேசினோம், “கடந்த 2001–2006 குற்றச்சாட்டு தொடர்பான காலகட்டம்.

2006-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை வழக்குப் பதிவு செய்தது. கடந்த 2017 டிசம்பர் 15-ம் தேதி குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன. 2019 Spl.C.No.3/2019 என்ற சிறப்பு வழக்காக விசாரணை நடைபெற்றது. 2025 அமலாக்கத்துறையும் பணமோசடி தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த 2026 ஆகஸ்ட் 5 வழக்கை மதுரை சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய அமலாக்கத்துறையின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இந்த நிலையில், இன்று (நவம்பர் 3-ம் தேதி) சொத்துக்குவிப்பு வழக்கில் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட 7 பேரையும் நீதிமன்றம் விடுவிக்கப்பட்டுள்ளனர்.” என்றனர்.
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன?
November 4, 2026
தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன?
November 4, 2026
பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா?
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026
Ukrainian strikes kill three in Russia’s Belgorod region
November 4, 2026
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
Democratic voters celebrate El-Sayed’s Michigan win in election ‘blue wave’
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026