அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தவெக அரசைக் கண்டித்து தனது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார்.

அப்பதிவில், “வெளிசந்தையில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், வட மாநிலங்களில் இருந்து வெங்காயம் கொள்முதல் செய்யப்பட்டு நியாய விலைக்கடைகள் மூலம் குறைந்த விலைக்கு விற்கப்படும் என்று வார்த்தை ஜாலம் காட்டியது தவெக அரசு.

இந்நிலையில் கடந்த வாரம் சுமார் 250 டன் வெங்காயம் வட மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்பட்டு, சரக்கு ரயில் மூலமாக சென்னைக்குக் கொண்டு வரப்பட்டு, கொருக்குப்பேட்டையில் உள்ள கிடங்கில் மற்ற மாவட்டங்களுக்கு அனுப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 3 நாட்களாக இந்த வெங்காயம் லாரிகளில் இருந்து கீழே இறக்கப்படாததால் அத்தனையும் அழுகி வீனாகி வருவதாக செய்திகள் தெரிய வருகிறது.

வெங்காயம்
வெங்காயம்

250 டன் அழுகிய வெங்காயத்துடன் கடந்த 3 நாட்களாக 10 லாரிகளும் அங்கேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுகிறது.

இதுமட்டுமன்றி, #NAFED மூலம் நான்காம் கட்டமாக கொள்முதல் செய்து வரவழைக்கப்பட்ட 450 டன் வெங்காயம் தரமில்லாமல் இருந்ததால் பெற்றுக்கொள்ளவில்லை என்று தமிழக அரசும், தங்களுக்குத் திருப்பி அனுப்பப்படவில்லை என்று #NAFED தரப்பிலும் கூறப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வருகின்றன.

அதாவது, தமிழகத்திற்கு வந்த 450 டன் வெங்காயத்தைக் காணவில்லை! குழப்பத்தில் உருவாகி, குழப்பத்திலேயே நாட்களைக் கடத்தும் இந்தத் திக்குத் தெரியாத தவெக ஆட்சியால் பாதிக்கப்படுவது தமிழக மக்கள்தான்!

இது என்ன சினிமாவா, Take சரியில்லை என்றால் Cut சொல்லிவிட்டு அடுத்த Take-ல் பார்த்துக்கொள்ளலாம் என்று கடந்து போவதற்கு? ஆட்சி! மக்கள் நலன், மக்கள் வரிப்பணம் சம்மந்தப்பட்டது!

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

அத்தியாவசியப் பொருளை எப்படி கையாள்வது என்பது கூட தெரியாமல், விலைவாசி உயர்வின் Seriousness புரியாமல், Lethargic-ஆக செயல்படும் ஆச்சரியக்குறி அரசுக்கு எனது கடும் கண்டனம்.

விலைவாசி கட்டுப்பாட்டிற்கான வழிமுறைகளைக் கவனத்துடன் செயல்படுத்த வேண்டும் என இந்த அரசை வலியுறுத்துகிறேன்” என்று தெரிவித்திருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம் முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம் November 4, 2026 இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி November 4, 2026 "அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி "அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி November 4, 2026 சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன? சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாக குழு: உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை – பின்னணி என்ன? November 4, 2026 தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன? தேர்தல் தோல்விக்கு சொந்த கட்சியினரை விமர்சித்த டிரம்ப் எதிர்க்கட்சியை பாராட்டி கூறியது என்ன? November 4, 2026 பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா? பச்சை பால் குடிப்பதால் உண்மையில் நன்மைகள் கிடைக்குமா? அது பாதுகாப்பானதா? November 4, 2026

See all 611 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *