கடந்த வாரம் இஸ்ரேலில் நாடாளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகிவிட்டன.
இஸ்ரேல் நாடாளுமன்றமான நெசட்டில் பெரும்பான்மை பெற 61 இடங்கள் தேவை. ஆனால், எந்தக் கட்சியும் பெரும்பான்மையைப் பெறவில்லை.
இஸ்ரேலின் தற்போதைய பிரதமர் நெதன்யாகுவின் கூட்டணிக்கு 53 இடங்களும், அவரை எதிர்த்து நின்ற இஸ்ரேலின் முன்னாள் ராணுவத் தளபதி காடி ஐசன்காட்டின் கூட்டணிக்கு 48 இடங்களும் கிடைத்துள்ளன.
எந்தக் கட்சியும் பெரும்பான்மை பெறாததால், இஸ்ரேலில் இன்னும் புதிய ஆட்சி அமையவில்லை. இதனால், தற்போதைக்கு நெதன்யாகுவே இஸ்ரேலின் பிரதமராகத் தொடர்கிறார்.

அரபுக் கட்சிகளின் ஆதரவு..?
நெதன்யாகு, காடி ஐசன்காட் இருவரில் யார் அரபுக் கட்சிகளின் கூட்டணியைப் பெற்றாலும் ஆட்சி அமைத்துவிடலாம். நெதன்யாகுவிற்கு ஆதரவு தர அரபுக் கட்சிகள் விரும்பவில்லை. அவருமே அந்தக் கூட்டணியுடன் ஆட்சி அமைக்கமாட்டேன் என்று அறிவித்துவிட்டார்.
அரபுக் கட்சிகள் காடி ஐசன்காட்டிற்கு ஆதரவு தரத் தயாராக இருக்கின்றன. ஆனால், இவர்களின் ஆதரவைப் பெற்றால், இஸ்ரேல் மக்களின் அதிருப்தியையும், சொந்தக் கூட்டணிக்குள்ளேயே விரிசலைச் சந்திக்க நேரிடும் என்று காடி ஐசன்காட்ட் இந்த ஆப்ஷனை ஒதுக்கித் தள்ளிவிட்டார்.
இந்த நிலையில், இஸ்ரேலுக்கு இப்போது மூன்று சாய்ஸ்கள் உள்ளன.
> இன்னொரு பொதுத்தேர்தல் நடத்தப்படுவது,
> எதிர்க்கட்சியிலிருந்து நெதன்யாகுவின் கூட்டணிக்குத் தாவும் எம்.பி.க்கள் மூலம் ஆட்சி அமைப்பது,
> ஒரு தேசிய ஒற்றுமை அரசை உருவாக்குவது.

நெதன்யாகு அழைப்பு
இதையடுத்து நேற்று நெதன்யாகு இஸ்ரேலில் இருக்கும் சக கட்சிகளுக்குத் தனது எக்ஸ் பக்கத்தில் அழைப்பு விடுத்துள்ளார்…
“பயங்கரவாதத்தை ஆதரிக்கும் மற்றும் யூத நாட்டின் இருப்பையே நிராகரிக்கும் ‘ராஆம்’ (Ra’am) மற்றும் ‘ஜாயிண்ட் லிஸ்ட்’ (Joint List) ஆகிய கட்சிகளை நம்பி இருக்கும் ஒரு அரசை இஸ்ரேல் மக்கள் விரும்பவில்லை.
முதல் நாளிலிருந்தே, ஒரு தேசிய அரசை அமைப்பதற்காக எங்களது கரங்கள் நீட்டப்பட்டே உள்ளன.
யூத பொதுமக்களில் பெரும்பான்மையினர், மிகப்பெரிய கட்சியாக லிகுத்தையும், அடுத்த அரசை வழிநடத்த பிரதமராக என்னையும்தான் தேர்ந்தெடுத்துள்ளனர்.
எங்களது கூட்டாளிகளுடனும், பயங்கரவாதத்தை ஆதரிக்காமல் எங்களுடன் இணைய விரும்பும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து ஒரு பரந்த அரசை அமைக்க நாங்கள் விரும்புகிறோம்.
இதுகுறித்துப் பேச்சுவார்த்தை நடத்த நான் தயாராகவே இருக்கிறேன்.”
இவரது அழைப்புக்கு யாராவது செவிசாய்ப்பார்களா என்பதைப் பார்ப்போம்.
"தமிழக அரசு நிலைப்பாட்டில் மாற்றமில்லை தானே.." கரூர் கூட்ட நெரிசல் வழக்கு.. உச்ச நீதிமன்றம் கேள்வி!
November 4, 2026
ஞானேஷ் குமாருக்கு சிக்கல்.. ரூ. 2 கோடி லஞ்சம்.. மலேசிய இன்ஜினியர் தற்கொலை.. தீவிரமடையும் விசாரணை
November 4, 2026
ஜென்ம நட்சத்திர பலன்கள் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
இன்றைய பஞ்சாங்கம் – நவம்பர் 5 2026 வியாழக்கிழமை
November 4, 2026
"ஆம்னி பஸ்கள் தீபாவளிக்கு அதிக கட்டணம் வசூலித்தால்.. பண்டிகை முடிந்து நடவடிக்கை!" அமைச்சர் வார்னிங்
November 4, 2026
டிரம்ப்பிற்கு எதிராக திரும்பும் துணை அதிபர் வேன்ஸ்! "அவரது" முடிவுகளே தோல்விக்கு காரணம் என பாய்ச்சல்
November 4, 2026
The Best Airbnbs in Colorado, Including a Ski-In Chalet and a Cliffside Cabin
November 4, 2026
Qualcomm is betting big on data centers as smartphone sales sink
November 4, 2026
10 Magical Christmas Traditions Around the World
November 4, 2026
This Train Offers a Front-Row Seat to One of Colorado’s Greatest Natural Wonders
November 4, 2026
17 better ways Elon Musk could have wasted $446 million
November 4, 2026
WoW: Forever’s First New Legendary Weapon Revealed
November 4, 2026