சிவகங்கையில் VB-G RAM G வேலைவாய்ப்புத் திட்டத்தின் ஒப்பந்தத்தில் தவெக எம்.எல்.ஏ 20% கமிஷன் கேட்பதாக, பஞ்சாயத்தில் பணிகளை எடுத்து செய்யும் ஒப்பந்தத்தாரர்கள் குற்றஞ்சாட்டியிருக்கின்றனர். அந்தக் குற்றச்சாட்டை மையமாக வைத்து டிடிவி தினகரனும் தவெக அரசுக்கு கண்டனம் தெரிவித்திருக்கிறார். இந்த சர்ச்சைக் குறித்துப் பேச சிவகங்கை தவெக எம்.எல்.ஏ குழந்தைராணியை தொடர்புகொண்டோம்.
‘

‘ஆதாரமே இல்லாம மனசு நொந்து போற மாதிரி பேசுறாங்க சார்…பிபி, சுகர்லாம் ஏறிப் போயி டாக்டர் உடம்பு முழுக்க எல்லா செக் அப்பும் எடுக்க சொல்லிட்டாரு. நொந்து போயி உட்காந்து இருக்கேன்’ என ஆதங்கத்தோடு பேசுகிறார் குழந்தை ராணி.
லோக்கல் டெண்டர்களில் நீங்கள் 20% கமிஷன் கேட்பதாக… (கேள்வியை முடிக்கும் முன்பே படபடவென கொந்தளிக்க தொடங்கினார்…)
நான் யாரிடம் கமிஷன் கேட்டேன்? அதற்கு ஆதாரம் இருக்கிறதா? நான் ஒப்பந்தத்தாரர்கள் யாரிடமும் பேசவில்லையே. பிறகு எப்படி 20% கமிஷன் கேட்டேன் என சொல்கிறார்கள். நான் தூய கரங்களுக்கு சொந்தக்காரி. எங்களின் தலைவர் தளபதி விஜய்யை பார்த்து வளர்ந்தவர்கள் நாங்கள். ஒரு நல்லாட்சியை எங்கள் தலைவர் கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு பெண் மேல் இவ்வளவு காழ்ப்புணர்ச்சி ஏன்? எதவாது பிரச்னை என்றால் நேருக்கு நேர் மோதுங்கள்.

ஆதராமில்லாத குற்றச்சாட்டுகளால் மனம் நொந்து போயிருக்கிறேன். திமுகக்காரர்கள் வேண்டுமென்றே பழி போடுகின்றனர். என்னுடைய கஷ்டத்தை வெளியில் சொல்ல முடியவில்லை, வேதனையாக இருக்கிறது.
உங்கள் கட்சிக்காரர்களுக்குதான் டெண்டர் என மறைமுக உத்தரவு போட்டிருக்கிறீர்களாமே?
இப்போது எல்லாமே ஓப்பன் டெண்டர்தான். எல்லா நடைமுறைகளும் ஆன்லைனில் வெளிப்படையாகத்தான் நடக்கிறது. கடந்த 2 வருடமாக எங்கள் கட்சி பிள்ளைகள் எந்த வேலையும் எடுக்கவில்லையே. இப்போது எங்கள் கட்சிக்காரர்கள் சின்னச்சின்ன வேலைகளை நியாயமான நடைமுறைப்படி எடுத்து செய்யக்கூடாதா? 20-30 வருடங்களாக ஒப்பந்தத்தில் தின்று கொழுத்த திமுக – அதிமுக ஒப்பந்தத்தாரர்கள் அதை பொறுக்காமல் பழி போடுகின்றனர். ஒரு பெண் மீது இப்படி அவதூறு பரப்பும் முன் யோசித்து செயல்படுங்கள்.
டிடிவி தினகரன் உங்களை விமர்சித்திருக்கிறாரே?
டிடிவி தினகரன் ஒரு கட்சித் தலைவர். லோக்கலில் விசாரித்து உண்மை என்னவென்பதை அறிந்து அவர் அறிக்கை வெளியிட்டிருக்க வேண்டும். ஒரு பெண் அரசியலுக்கு வருவதே பெரிய விஷயம். ஒரு பெண் மீது விமர்சனம் வைக்கும் முன் யோசித்து வையுங்கள். ஆண்டவன் இருக்கான். அபாண்டமா எதுவும் பேசாதீங்க

கட்சித் தலைமை உங்களிடம் விளக்கம் கேட்டதா?
எங்களைப் பற்றி எங்களின் கட்சித் தலைமைக்கு நன்றாக தெரியும். ஆதாரமில்லாத இந்த அவதூறைப் பற்றி தலைமை எதுவும் கேட்கவில்லை.
முகாந்திரமே இல்லையெனில், உங்கள் மீது திட்டமிட்டே அவதூறு பரப்பப்படுகிறது என்கிறீர்களா?
சிவகங்கை திமுகவினர் செய்யும் வேலை. தவெகவை அவர்களால் நேரடியாக எதிர்கொள்ள முடியவில்லை. என்னுடைய வளர்ச்சி அவர்களுக்கு பிடிக்கவில்லை. ஊருக்குள் எனக்கு நல்லப் பெயர் இருக்கிறது. அதை கெடுக்க என்ன செய்ய வேண்டுமென யோசித்து கற்பனையாக ஒரு கதையை கட்டுகிறார்கள். குற்றஞ்சாட்டுகிறவர்கள் யாரும் ஏன் ஆதாரத்தை கொடுக்கவில்லை? இதற்கு முன்பும் இப்படித்தான் நகராட்சிக் கூட்டத்தில் யதேச்சையாக ஒரு இருக்கையில் உட்கார்ந்தேன். உடனே கமிஷனரின் இருக்கையில் அமர்ந்த எம்.எல்.ஏ என சர்ச்சையை கிளப்பிவிட்டார்கள். முழுக்க முழுக்க காழ்ப்புணர்ச்சியால்தான் இப்படி அவதூறு செய்கின்றனர்.
மறுபடியும் ‘ஆண்டவன் இருக்கான். அபாண்டமா யாரும் பேசாதீங்க’ எனக் கூறி முடித்தார்.
முகேஷ் அம்பானி உலகப் பணக்காரர்.. திவாலாகும் அனில் அம்பானி? உலகமே அறிய வேண்டிய அண்ணன் தம்பி பாடம்
November 4, 2026
"அங்கிள் விஜய் அவர்களே, இது சாதாரண ஆபீஸ் வேலை கிடையாது!" – மு.க. ஸ்டாலின் தாக்கு!
November 4, 2026
இனி இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியில் சீறிப்பாயலாம்.. 4 நாடுகளுக்கு மட்டும் ஈரான் அனுமதி
November 4, 2026
"அலறும் ஈரான்".. இந்தியா உள்பட 4 நாடு கப்பல்களுக்கு மட்டும் ஹார்முஸ் சந்தியில் அனுமதி ஏன்? பின்னணி
November 4, 2026
“ஒரே நாடு, ஒரே தேர்தல் என்ற தலைப்பில் விதிகளுக்குப் புறம்பாக கல்லூரி நிகழ்வு…" – சு.வெங்கடேசன்
November 4, 2026
அமெரிக்க செனட் வரலாற்றில் புதிய அத்தியாயம்; முதல் முஸ்லிம் உறுப்பினராக அப்துல் எல்-சயீத்!
November 4, 2026
KFC Reveals Official Avengers: Doomsday Menu 'Worthy' of Dr. Doom
November 4, 2026
The Budget-Friendly Flashforge Adventurer 5M 3D Printer Drops to a Mere $131 Ahead of Black Friday
November 4, 2026
Watch: PM and Ed Miliband play steel drums in Antigua
November 4, 2026
Photos: Iran marks US embassy takeover with rallies against US, Israel
November 4, 2026
Get a Nintendo Switch 2 Console (USA Model) for $448 During the AliExpress Early Black Friday Sale
November 4, 2026