முன்னாள் மத்திய அமைச்சர் சரத்பவார் இரண்டு நாள்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்டு புனே ரூபி ஹில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கிருந்து நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சரத்பவாரிடம் பிரதமர் நரேந்திர மோடி போன் மூலம் உடல் நலம் குறித்து விசாரித்துள்ளார்.

இது குறித்து சரத்பவாருக்கு மிகவும் நெருக்கமான குடும்ப நண்பர் வித்தல் மணியார் அளித்த பேட்டியில், “பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் அழைத்து, சரத்பவாரிடம் உடல்நலம் குறித்து விசாரித்தார். அவர் சாஹேபிடம் மிகுந்த அன்போடும் மரியாதையோடும், ‘சாஹேப்(பவார்), தயவுசெய்து முழுமையாக ஓய்வெடுங்கள். சுப்ரியா இப்போது தயாராக இருக்கிறார். சுப்ரியாவும் நாங்களும் நாட்டைப் பார்த்துக்கொள்கிறோம்.

நீங்கள் ஓய்வெடுங்கள். இது எனது வேண்டுகோள்’ என்று கூறினார். அதற்கு, ‘நான் ஓய்வெடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் அனைவரும் இருக்கும்போது, ​​நாட்டைப் பற்றி எனக்கு எந்தக் கவலையும் இல்லை.

சுப்ரியா

நீங்கள் தொடர்ந்து பணியாற்றுங்கள்’ என்று சாஹேப் அவரிடம் கூறினார். தனது உடல்நலம் குறித்து விசாரித்ததற்கு சாஹேப் அவருக்கு நன்றி தெரிவித்தார்” என்று மணியார் கூறினார்.

மகாராஷ்டிராவின் வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சரத்பவார் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்த போது அவருக்கு இருமல் மற்றும் நெஞ்சு வலி போன்ற காரணங்களால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பாராமதி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான சுலே, தனது தந்தைக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடைபெற்று வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் முன்னதாகத் தெரிவித்திருந்தார்.

நரேந்திர மோடி சரத்பவாரிடம் பேசி இருப்பது மரியாதை நிமித்தமான உரையாடல் என்ற போதிலும், இந்த உரையாடல் மகாராஷ்டிராவின் அரசியல் சூழல் குறித்த பல்வேறு ஊகங்களுக்கு வழிவகுத்துள்ளது.

இதில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் இரு அணிகளின் இணைப்பு மற்றும் சரத் பவாரின் தரப்பு பாஜகவுடன் இணையும் சாத்தியக்கூறுகளும் அடங்கும். மேலும், சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலே, மோடியின் அமைச்சரவையில் இடம்பெறக்கூடும் என்ற பேச்சும் பல மாதங்களாகவே அடிபட்டு வருகிறது.

இதற்கிடையில், மறைந்த அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அடங்கிய குழுவினர், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவைச் சந்தித்துப் பேசினர். அப்போது, ​​சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகனும் மாநிலங்களவை உறுப்பினருமான பார்த் பவார் ஆகியோர் தன்னிச்சையாக முடிவுகளை எடுப்பது குறித்து அவர்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்தச் சந்திப்பின்போது சுனேத்ரா பவார் மற்றும் அவரது மகன்களான பார்த்த், ஜே ஆகியோர் கலந்துகொள்ளாதது அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.

சரத்பவார், புனே மருத்துவமனையில் சிகிச்சை முடிந்து மும்பை பிரீச் கேண்டி மருத்துமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை சுப்ரியா சுலே தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

More in TamilNews
'ராமாயணா' திரைப்படம் குறித்து இந்திய, சர்வதேச விமர்சகர்கள் சொல்வது என்ன? 'ராமாயணா' திரைப்படம் குறித்து இந்திய, சர்வதேச விமர்சகர்கள் சொல்வது என்ன? November 5, 2026 நம்பவே முடியாத காட்சி.. உடல் முழுக்க டாலர் நோட்டுகளுடன் சாலையில் ஓடிய ஆடு! அடுத்து நடந்தது என்ன? நம்பவே முடியாத காட்சி.. உடல் முழுக்க டாலர் நோட்டுகளுடன் சாலையில் ஓடிய ஆடு! அடுத்து நடந்தது என்ன? November 5, 2026 தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்? தேர்தல் தோல்விக்கு பிறகு உலகை தனது நடவடிக்கைகளால் திரும்பி பார்க்க வைக்க டிரம்ப் என்ன செய்யக்கூடும்? November 5, 2026 'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்': கலங்கும் காசிமேடு மீனவ குடும்பங்கள் – தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது ஏன்? 'ஆந்திராவில் கரை ஒதுங்கிய 8 உடல்கள்': கலங்கும் காசிமேடு மீனவ குடும்பங்கள் – தேடுதல் பணியில் தாமதம் ஏற்பட்டது ஏன்? November 5, 2026 உளுந்தூர்பேட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை! பட்டாசு, புத்தாடைகள் விற்பனை பாதிப்பு! உளுந்தூர்பேட்டையில் கொட்டித் தீர்த்த கனமழை! பட்டாசு, புத்தாடைகள் விற்பனை பாதிப்பு! November 5, 2026 ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ராமாயணா எப்படி உள்ளது? ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் நடித்துள்ள ராமாயணா எப்படி உள்ளது? November 5, 2026

See all 600 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *