இணையப் பயன்பாடு அதிகரித்து வரும் நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் வெறும் ரூ.15-க்கு 24 மணி நேரம் அன்லிமிடெட் 5G டேட்டா வழங்கும் புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

பொதுவாக கூடுதல் டேட்டா தேவைப்படும் வாடிக்கையாளர்கள் குறிப்பிட்ட ஜிபி அளவிலான டேட்டா பேக்குகளை ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும். ஆனால், இந்தப் புதிய திட்டத்தில் 24 மணி நேரத்திற்குள் ஜியோவின் True 5G நெட்வொர்க்கில் அன்லிமிடெட் டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.

யாரெல்லாம் பயன்படுத்தலாம்?

இந்தச் சலுகையைப் பயன்படுத்த 5G வசதியுள்ள ஸ்மார்ட்போன் வைத்திருக்க வேண்டும். மேலும், ஜியோவின் 5G நெட்வொர்க் கிடைக்கும் பகுதியில் இருக்க வேண்டும். இது டேட்டா ஆட்-ஆன் பேக் என்பதால், ஏற்கெனவே செயல்பாட்டில் இருக்கும் அடிப்படை ரீசார்ஜ் திட்டமும் தேவைப்படலாம்.

நீண்ட கால ரீசார்ஜ் திட்டம்…

மேலும், ஜியோ நிறுவனம் நீண்டகால ரீசார்ஜ் விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக ரூ.10,000-க்கு மூன்று ஆண்டுகள் செல்லுபடியாகும் புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் தினமும் 2.5 ஜிபி அதிவேக டேட்டா, அன்லிமிடெட் 5G டேட்டா, அன்லிமிடெட் வாய்ஸ் கால், தினமும் 100 SMS ஆகியவை கிடைக்கும். கூடுதலாக JioHotstar Mobile + Hollywood சந்தா, 12 மாதங்களுக்கு Canva Pro Lite சந்தா மற்றும் 50 ஜிபி JioAICloud சேமிப்பக வசதியும் வழங்கப்படுகிறது.

Jio

ஒரே முறை ரீசார்ஜ் செய்து மூன்று ஆண்டுகள் பயன்படுத்த விரும்புபவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், ரூ.10,000-ஐ ஒரே தவணையில் செலுத்த வேண்டியிருப்பதால் அனைவருக்கும் இது ஏற்றதாக இருக்காது. இந்தத் திட்டம் நவம்பர் 7 முதல் தொடங்கவுள்ளது

எங்கே ரீசார்ஜ் செய்யலாம்?

MyJio செயலி, Jio.com இணையதளம், ரிலையன்ஸ் ரீடெயில் கடைகள் மற்றும் பிற ரீசார்ஜ் தளங்கள் மூலம் இந்தத் திட்டத்தைப் பெறலாம்.

குறைந்த செலவில் ஒருநாள் முழுவதும் அதிக டேட்டா தேவைப்படுபவர்களுக்கு இந்தத் திட்டம் பயனுள்ளதாக இருக்கும். இருப்பினும், 4G நெட்வொர்க்கில் இதே அன்லிமிடெட் 5G சலுகை கிடைக்காது என்பதைப் பயனர்கள் கவனிக்க வேண்டும்.

See all 161 in Technology →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *