Qகோவை பெரியார் அறிவுலகத்தில் உண்மைக்கு முரணான கருத்துகளைக் கொண்ட புத்தகங்கள் அதிக விலை கொடுத்து வாங்கப்பட்டுள்ளது தமிழ்நாடு முழுவதும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இதை எழுத்தாளர் பெருமாள் முருகன் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளார்.

பெரியார் அறிவுலக நூல் மோசடி குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

“நூலகத்தில் வரலாற்றுப் பிழைகள் மலிந்த நூல்கள் : விசாரணை ஆணையம் அமைத்து உண்மை கண்டறிய வேண்டும்! தமிழ்நாடு அரசுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேண்டுகோள்!

கோவை பெரியார் அறிவுலகம்
கோவை பெரியார் அறிவுலகம்

கோவையில் அண்மையில் முதல்வர் ஜோசப் விஜய் அவர்களால் திறந்து வைக்கப் பெற்ற ‘பெரியார் அறிவுலகம்’ என்னும் நூலகத்தில் இடம்பெற்றுள்ள பல நூல்கள் போலியானவை எனக் கண்டறியப்பட்டுள்ளது.

எழுத்தாளர் பெருமாள் முருகன் அவர்கள் அந்த நூலகத்தை நேரில் சென்று பார்வையிட்டதில் அவர் இதனைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளாகி மனம் நொந்து தனது இணையத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

பேரதிர்ச்சி

சான்றுக்குச் சில நூல்களைக் குறிப்பிட்டு நூல்களைக் கொள்முதல் செய்ததில் எத்தகைய முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தியுள்ளார். இது மிகுந்த பேரதிர்ச்சியை அளிக்கிறது.

போலி நிறுவனங்களின் பெயரால் தரமில்லாத நூல்களைக் கூடுதலான விலைக்குக் கொள்முதல் செய்ததால் பெரிய அளவில் ஊழல் நடந்திருக்கிறது என ஊகிக்கும் அதே வேளையில்,

வரலாற்றுப் பிழைகள் மலிந்த மிகவும் கீழான நூல்களை நூலகங்களில் வைத்திருப்பது புதிய இளைய தலைமுறையினரைப் பாழாக்கும் மிக மோசமான மன்னிக்க முடியாத பெருங்குற்றம் ஆகும். இது தீராத ஆத்திரத்தையும் பெருங்கவலையையும் அளிக்கிறது.

திருமாவளவன் அறிக்கை
திருமாவளவன் அறிக்கை

விசாரணை ஆணையம் அமையுங்கள்

இதன்பின்னணியில் உள்ள உண்மையைக் கண்டறிந்து தொடர்புடையோர் யாவரையும் சட்டத்தின் முன் நிறுத்திக் கடும் தண்டனை அளித்திட அரசு உரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும் எனத் தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறோம்.

பெரியார் அறிவுலகம் உள்ளிட்ட அரசுக்கான பொதுநூலகங்களில் இடம்பெற்றுள்ள நூல்களின் உள்ளீட்டுக்கான தரம் எத்தகையது என்பதைக் கண்டறியவும்;

போலி நிறுவனங்களின் மூலம் நடந்துள்ள ஊழல் முறைகேடுகளைக் கண்டறிந்து தொடர்புடையோரைத் தண்டிக்கவும் ஏதுவாகத் தமிழ்நாடு அரசு உடனடியாக ‘விசாரணை ஆணையம்’ ஒன்றை அமைத்திட வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறோம்.”

More in TamilNews
'பெண்கள் வெட்கத்தையும் மானத்தையும் இழந்தனர்' – கொடிய சப்பானியா பஞ்சம் குறித்து வரலாற்றில் என்ன பதிவாகியுள்ளது? 'பெண்கள் வெட்கத்தையும் மானத்தையும் இழந்தனர்' – கொடிய சப்பானியா பஞ்சம் குறித்து வரலாற்றில் என்ன பதிவாகியுள்ளது? November 10, 2026 இரான், நெதன்யாகு என காடி ஐசென்கோட் முன்னுள்ள 8 முக்கிய சவால்கள் இரான், நெதன்யாகு என காடி ஐசென்கோட் முன்னுள்ள 8 முக்கிய சவால்கள் November 10, 2026 பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! பவன் கல்யாண் விவாகரத்து.. 3வது மனைவி அன்னா லெஷ்னேவாவை பிரிய முடிவெடுத்துள்ளதாக அறிவிப்பு! November 9, 2026 டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! டென்ஷன் ஆன விஜய்.. ஒருத்தர் விடாமல் எல்லோரும் சென்னைக்கு வாங்க.. தவெக MLA-க்களுக்கு பறந்தது உத்தரவு! November 9, 2026 கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! கழிவுநீர் தொட்டியில் விஷவாயு தாக்கி 3 பேர் பலி.. ஓசூர் அருகே டாடா நிறுவனத்தில் சோகம்! November 9, 2026 “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! “அமெரிக்க இடைத்தேர்தல் நேர்மையாக நடந்ததா?” – டிரம்ப் கிளப்பிய சந்தேகம்.. நிலைப்பாட்டில் ட்விஸ்ட்! November 9, 2026

See all 649 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *