காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி தனது புதிய நினைவுக்குறிப்பு நூலான ‘பிலாங்கிங்: எ ஜர்னி ஆஃப் லவ்’ (Belonging: A Journey Of Love) என்ற புத்தகத்தை நேற்று வெளியிட்டார். அதில் தனது அரசியல் பயணம் மற்றும் தனது தனிப்பட்ட பயணம் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.
அவர் தனது புத்தகத்தில் பிரதமர் நரேந்திர மோடியுடனான நட்பு மற்றும் தொடர்பு குறித்து தெரிவித்துள்ள கருத்தில், “இன்றுவரை, அவருடன் எனக்கு நடைமுறையில் எந்தவிதமான உண்மையான தொடர்பும் இல்லை. நாடாளுமன்றக் கூட்டத்தொடர் முடிவடையும் தருணங்களில், முக்கியக் கட்சிகளின் தலைவர்கள் வழக்கமாக சபாநாயகரின் அறையில் கூடும்போது, நாங்கள் சந்தித்துக்கொள்வோம்.
அது மிகவும் சிறிய அறை, அங்கு பொதுவாகப் பலர் இருப்பார்கள். ஆனால், அவர் எனக்கு நேராக வரும்போது, நாங்கள் ஒருவருக்கொருவர் முறைப்படியான நமஸ்தே தெரிவித்துக்கொள்வோம். அவர் பெரும்பாலும் பார்வையைத் திருப்பிக்கொள்வார். கண்களை நேருக்கு நேர் சந்திப்பதைத் தவிர்த்துவிடுவார்.

நாடாளுமன்றத்தில் பேசும்போது, பொதுக்கூட்டங்களில் பேசுவது போன்றே சில சமயங்களில் அவர் மிகவும் தரக்குறைவான மொழியைப் பயன்படுத்துகிறார். பெரும்பாலும், எதிர்க்கட்சியினரை அவர் கடுமையாகச் சாடுகிறார். அவரது இந்தச் செயலை ஒரு கடுமையான வசைமாரி என்றுதான் சொல்ல வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
அதேசமயம் மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயுடனான தொடர்பு குறித்து கூறும் அவரைப் பற்றி வேறு மாதிரி குறிப்பிட்டுள்ளார். அவர் வாஜ்பாய் குறித்து தெரிவித்துள்ளதாவது: ”2001-ஆம் ஆண்டு நாடாளுமன்றத்தின் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டபோது, வாஜ்பாய் குறித்துதான் கவலைப்பட்டேன்.
தாக்குதல் நடந்தவுடன் எனக்கு முதலில் தோன்றியது பிரதமரின் பாதுகாப்பு குறித்த கவலைதான். எனவே, உடனடியாக அவருக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்தேன். நானும் அவரும் ஏறக்குறைய ஒரே நேரத்தில்தான் மக்களவையிலிருந்து வெளியேறினோம் என்றும், அவர் பாதுகாப்பாக வீட்டில்தான் இருக்கிறார் என்றும் அவர் கூறியபோது எனக்கு நிம்மதி ஏற்பட்டது. பின்னர், நான்தான் அவருக்கு முதலில் அழைப்பு விடுத்தேன் என்பதை அவர் தனது சக ஊழியர்களிடம் பாராட்டுடன் குறிப்பிட்டதாக அறிந்தேன்.
சில மாதங்களுக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கவனித்தபோது, பிரதமர் வாஜ்பாய் உடல்நலம் குன்றி, மிகவும் முதுமையடைந்தவராகத் தெரிந்தார். அவரது கட்சியினரிடையே இது குறித்துப் பேச்சுகள் அடிபட்டன. விரைவில் ‘டைம்’ (Time) இதழில் அவரது உடல்நலக் குறைபாடுகள் குறித்த கட்டுரை ஒன்றும் வெளியானது. நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற்ற அந்தப் பாராளுமன்றக் கூட்டுக்கூட்டத்தில் பேசும்போது நான் சற்று எல்லை மீறிவிட்டேனோ என்று தோன்றியது. அவர் ஒரு மூத்த தலைவர்.
நாங்கள் வெவ்வேறு கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், அவர் நாட்டின் பிரதமர். அவரை விமர்சிக்கும்போது நான் இன்னும் நிதானமாக இருந்திருக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு காலத்தில் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் நெருங்கிய நண்பரான நடிகர் அமிதாப் பச்சனின் பெயர் புத்தகத்தில் மூன்று முறை மட்டுமே வருகிறது. அவரது மனைவி ஜெயா பச்சன் பற்றி குறிப்பிடவே இல்லை.
அறுந்து போன அமிதாப் உறவு
ராஜீவ் காந்தியின் படுகொலைக்குப் பிறகு அமிதாப் பச்சனுடனான ராஜீவ் காந்தி குடும்ப உறவு நின்று போனதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேசமயம் சோனியா காந்தி, அமிதாப் பச்சனின் பெற்றோர்களான இந்தி கவிஞர் ஹரிவன்ஷ் ராய் பச்சன் மற்றும் தேஜி பச்சன் ஆகியோரைப் பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார். அவர் 1968 இல் முதன்முதலில் இத்தாலியில் இருந்து இந்தியா வந்தபோது ஹரிவன்ஷ் ராய் பச்சன் வீட்டில் தங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார். சோனியா காந்தி நோய்வாய்ப்பட்டபோது தேஜி பச்சன் அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டார்.
மேலும், பிறந்த சில மணி நேரங்களிலேயே தனது முதல் மகனை இழந்த சோனியா காந்திக்கு ஒரு நாய்க்குட்டி உட்பட, பல பரிசுகளைப் பல ஆண்டுகளாக வழங்கினார். டெல்லியில் சோனியா காந்தியின் ஆரம்ப நாட்களில், ஹரிவன்ஷ் ராய் பச்சன் அவருக்கு அவ்வப்போது இந்திப் பாடங்களையும், சிறந்த அறிவுரைகளையும் வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
Kia-வின் ரூ.18,750 கோடி பிரம்மாண்ட ஆலை ஆந்திராவுக்குப் போனது! மீண்டும் வாய்ப்பை இழந்த தமிழ்நாடு
November 12, 2026
மதுரை தனிஷ்க் நகைக் கடையில் கல் வைக்காத நகைகள் கொள்ளை! சிங்கிளாக வந்து சாவகாசமாக திருடிய கொள்ளையன்
November 12, 2026
தப்பு செய்த 2 எம்எல்ஏக்களுக்கு தீபாவளி பரிசு தந்த "ஸ்ட்ரிக்ட் ஆபிஸரு"! விஜய் மீது ஸ்டாலின் காட்டம்
November 12, 2026
செய்தியாளர்கள் இல்லாமலேயே வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்ட கள்ளக்குறிச்சி ஆட்சியர்பத்மஜா!
November 12, 2026
தென்காசியில் ரோட்டில் கிடந்த கால் கிலோ தங்கம்.. அப்படியே போலீசிடம் ஒப்படைத்த முதியவர்! நெகிழ்ச்சி
November 12, 2026
கள்ளக்குறிச்சி விஷயத்தில்.. தவெக எம்எல்ஏவுக்கு எதிராக ஒன்று சேர்ந்த திமுக, அதிமுக!
November 12, 2026
Hundreds of streaming services and nothing to watch
November 12, 2026
ICC proposes greater control over T20 franchise leagues
November 12, 2026
IND U19: ஆர்யவீர் சேவாக், கேப்டன் லக்ஷ்யா அதிரடி.. ஆப்கானிஸ்தானை வீழ்த்தி பைனல் சென்ற இந்தியா
November 12, 2026
‘Night Vision’ Is a DIY Film About a Mysterious Video Camera, Told in Dream Logic and With ‘Blair Witch Project’ Vibes
November 12, 2026
Sam Levy, Jamie Ramsay Offer Advice to Up-and-Coming Cinematographers: “What You Guys Do Lives Forever”
November 12, 2026
McIlroy boosts Race to Dubai hopes as Luiten grabs shock lead
November 12, 2026