தி.மு.க அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இன்று (12.11.2026) தமிழ்நாடு அரசின் காவல்துறை தலைமை இயக்குநர் (DGP) அவர்களை நேரில் சந்தித்து, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் திருமதி ஜே.இ. பத்மஜா, இ.ஆ.ப., அவர்களுக்கு பாலியல் தொல்லை அளித்தல், ஆபாசமான மின்னணுச் செய்திகளை அனுப்புதல்,
அரசு ஊழியரை மிரட்டுதல் மற்றும் அவரது இல்லத்திற்குள் அத்துமீறி நுழைதல் ஆகிய குற்றச்சாட்டுகள் தொடர்பாக, கள்ளக்குறிச்சி சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் திரு சி. அருள் விக்னேஷ் (தமிழக வெற்றிக் கழகம்) மீது FIR) பதிவு செய்யவும், நியாயமான, சுதந்திரமான விசாரணை நடத்தவும் புகார் மனு அளித்திருக்கிறார்.

அந்தப் புகார் மனுவில்…
குற்றச்சாட்டுகள்
ஆளும் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ், அரசு ரீதியான தொடர்பு மூலம் கிடைத்த மாவட்ட ஆட்சியரின் கைபேசி எண்ணிற்கு வாட்ஸ்அப் வழியாக ஆபாசமான மற்றும் பாலியல் ரீதியான செய்திகளை அனுப்பியதாகவும், நேரிலும் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும் ஊடகங்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் அறிக்கைகள் மூலம் தெரியவந்துள்ளது. மேலும், முன் அனுமதியின்றி மதுபோதையில் ஆட்சியரின் அரசு இல்லத்திற்குள் நுழைந்து தொல்லை அளித்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சட்டப் பிரிவுகள்
இச்செயல்கள் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) பிரிவுகள் 75 (பாலியல் தொல்லை), 78 (பின்தொடர்தல்), 79 (பெண்ணின் கண்ணியத்தை அவமதித்தல்), 329, 333 (அத்துமீறி நுழைதல்), 351 (மிரட்டல்), 221, 224 (அரசு ஊழியரைத் தடுத்தல்) மற்றும் தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 67, தமிழ்நாடு பெண்கள் வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் ஆகியவற்றின் கீழ் பிணையில் வெளிவர முடியாத குற்றங்களாகும் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
நடவடிக்கை இல்லாதது குறித்து கேள்வி
நவம்பர் 9-ஆம் தேதியே கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக சார்பில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டும், ஆட்சியரின் கணவர் தலைமைச் செயலாளருக்கும் முதலமைச்சருக்கும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியும் இதுவரை எஃப்.ஐ.ஆர் (FIR) பதிவு செய்யப்படவில்லை என ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார். உள்கட்சி விசாரணையோ, அமைச்சரின் உறுதிமொழியோ சட்டப்பூர்வ குற்றவியல் விசாரணைக்கு மாற்றாகாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்கப்பெண் சிறப்புப் படை மீது விமர்சனம்
பெண்கள் பாதுகாப்பிற்காக முதலமைச்சரின் நேரடிக் கண்காணிப்பில் உருவாக்கப்பட்ட ‘சிங்கப்பெண் சிறப்புப் படை’, ஆளும் கட்சி எம்.எல்.ஏ மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளதால் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மௌனம் காப்பதாக மனுவில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முக்கியக் கோரிக்கைகள்
”சம்பந்தப்பட்ட சட்டமன்ற உறுப்பினர் சி. அருள் விக்னேஷ் மீது உடனடியாக எஃப்.ஐ.ஆர் பதிவு செய்ய வேண்டும்.
உள்ளூர் காவல்துறை ஆளும் கட்சி எம்.எல்.ஏ-வின் செல்வாக்கிற்கு உட்பட வாய்ப்புள்ளதால், விசாரணையை சிபிசிஐடி-க்கு மாற்றி, காவல் கண்காணிப்பாளர் (SP) அந்தஸ்திற்குக் குறையாத பெண் அதிகாரி தலைமையில் விசாரிக்க வேண்டும்.
வாட்ஸ்அப் செய்திகள், அழைப்பு விவரங்கள், ஆட்சியர் இல்லத்தின் சிசிடிவி காட்சிகள் மற்றும் பார்வையாளர் பதிவேடுகளை உடனடியாகப் பறிமுதல் செய்து பாதுகாக்க வேண்டும்.
மாவட்ட ஆட்சியர், அவரது குடும்பத்தினர் மற்றும் ஊழியர்களுக்கு முழுமையான பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
ஜெய்ஸ்வாலை டிரேட் செய்யும் ராஜஸ்தான் அணி? பின்னணியில் இப்படியொரு காரணமா.. சங்கக்காரா முடிவு!
November 13, 2026
தந்தையால் மண்ணில் புதைக்கப்பட்ட 11 மாத குழந்தை உயிருடன் மீட்பு – என்ன நடந்தது?
November 13, 2026
ஆன்லைனில் ஆர்டர் செய்த உணவுப்பொருள் அல்லது மருந்து காலாவதியாகி இருந்தால் என்ன செய்ய வேண்டும்?
November 13, 2026
கர்நாடகாவில் பெண்ணை கொலை செய்ததாக 2.6 ஆண்டுகள் சிறை! கொலை செய்யப்பட்ட பெண் மீண்டும் உயிருடன் வந்து ட்விஸ்ட் !
November 13, 2026
89 ரன்னுக்கு ஆல்அவுட்: கோலி, ரோகித் இருந்தும் இந்தியா படுதோல்வி ஏன்? நிபுணர்கள் கருத்து
November 13, 2026
விஜய் ஆட்சியில் முதல் ஆறு மாதங்களில் ஏற்பட்ட 6 முக்கிய சர்ச்சைகள்
November 13, 2026
Before Directing the Biggest Success of His Career, Steven Spielberg Almost Made an Alien Horror Movie Instead
November 13, 2026
Kevin Feige Didn't Want Wanda in VisionQuest Because He Was Worried She Would 'Distract' From the Core Show
November 13, 2026
Barbie Rewind Review
November 13, 2026
Some of These GTA 6 Clips Look So Good That I Don't Care if It's Running at 30fps
November 13, 2026
Millions of Americans are not taking their GLP-1 drugs as prescribed
November 13, 2026
Save $500 Off the 42" LG C6 4K OLED TV for Black Friday, Doubles as a Gaming Monitor, Plus Get an Xbox Controller
November 13, 2026