ஆட்சியைக் கவிழ்க்க திராவிட கட்சிகள் மீண்டும் பேச்சுவார்த்தையை தொடங்கிவிட்டதாக குற்றஞ்சாட்டி வருகிறது த.வெ.க. ‘எங்களிடம் த.வெ.க-வுக்கு எதிராக திரும்பச் சொல்லி பேச்சுவார்த்தை நடத்தினார்கள்’ என மதுரை மத்திய தொகுதி எம்.எல்.ஏ மதர் பதுருதீன் என்கிற முஸ்தபா குற்றசாட்டியிருந்தார். அவருக்கு முன்பு ஊத்தங்கரை எம்.எல்.ஏ இளையராஜாவுடனான பேச்சுவார்த்தை வழக்கு, கைது என பூதாகரமானது. ஶ்ரீவைகுண்டம் எம்.எல்.ஏ சரவணனும் தன்னுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பகிரங்கமாகச் சொன்னார்.

விஜய்
விஜய்

ஆனால், திருவள்ளூர், பூந்தமல்லி உள்ளிட்ட பல தொகுதி எம்.எல்.ஏ-க்களிடமும் பேச்சுவார்த்தை நடந்தும் அவர்கள் கட்சித் தலைமைக்கு சொல்லாமல் கமுக்கமாக இருப்பது முக்கிய நிர்வாகிகளுக்கு தெரிய வந்திருக்கிறதாம். உளவுத்துறை மூலம் இந்த விஷயங்களைத் தெரிந்துகொண்ட முதல்வருக்கு நெருக்கமானவர்கள், சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ-க்களின் செயல்பாடுகளை உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்களாம்.

நாம் தமிழர் கட்சியின் முக்கிய புள்ளியாக இருக்கும் பிரபல யூடியூபர் மீ்து எக்கசக்க புகார்கள் வரிசைக் கட்டுகின்றனவாம். “த.வெ.க-வுக்கும் தி.மு.க-வுக்கும் இடையேயான மோதலில், தி.மு.க சார்பாக தொடர்ச்சியாகப் பேசிவருகிறார் அந்த யூடியூபர். ஊழல் வழக்கில் சிறை சென்றவர்களுக்கு ஆதரவாக நாம் ஏன் பேச வேண்டும்?” என நா.த.க தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு வாட்ஸ் அப்பில் புகார் அனுப்புகிறார்களாம்.

சீமான்
சீமான்

மறுபக்கம் கட்சியின் முகமாக யூடியூபர் மாறி வருவதையும் ஒரு டீம் ரசிக்காததால் உட்கட்சிக்குள் பூசல்கள் உருவாகி வருகின்றன. எல்லாவற்றையும் கவனித்த சீமான், ‘விடுப்பா’ என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டாராம். ‘த.வெ.க-வை எதிர்த்துப் பேசி, விஜய்யை விமர்சித்தால் போதும்’ என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டாராம். இதனால் நா.த.க-வுக்குள் இருக்கும் தி.மு.க எதிர்ப்பு அணி நிர்வாகிகள் கடும் அதிருப்தியில் இருக்கிறார்களாம்.

தாம்பரம் பள்ளிக்காரணை துணை கமிஷனர் பதவிக்கு யாரையும் நியமிக்கவில்லை என சுட்டிக்காட்டியிருந்தோம் அல்லவா… உடனடியாக அந்தப் பதவிக்கு ஆவடி போக்குவரத்து துணை கமிஷனராக இருந்த ஈஸ்வரனை நியமித்துவிட்டார்கள்.

இவர், அ.தி.மு.க எம்.பி ஒருவரின் உறவினராம். இருந்தபோதிலும் ஈஸ்வரனின் மீது நம்பிக்கை வைத்து உளவுத்துறை உயரதிகாரி அவருக்கு அங்கு போஸ்டிங் போட க்ரீன் சிக்னல் கொடுத்தாராம். பள்ளிக்காரணையில் துணை கமிஷனராக இருந்த ரகுபதியை கரூருக்கு மாற்றியிருக்கிறார்கள்.

கரூர் இடைத்தேர்தலை மனதில் வைத்துதான் ரகுபதியை அங்கு நியமித்திருக்கிறார்களாம். ஹரி கிரண் பிரசாத்தை ராமநாதபுரம் மாவட்ட எஸ்.பி-யாக நியமித்திருக்கிறார்கள். ஏற்கெனவே சர்ச்சைகளில் சிக்கி அடிக்கடி இடமாறதலுக்குள்ளாகும் ஹரி கிரண் பிரசாத்துக்கு மீண்டும் மீண்டும் பவர்ஃபுல் பதவிகள் கொடுக்கப்படுவதன் பின்னணியில் த.வெ.க பவர்சென்டர் லாபி இருப்பதால் உளவுத்துறையும் அமைதியாக இருக்கிறதாம்.

தீபாவளி பண்டிகையின்போது மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் லோக்கல் நிர்வாகிகளுக்கு தீபாவளிப் பரிசு கொடுக்கும் வழக்கம் திராவிடக் கட்சிகளில் வழக்கம். ஆட்சியை தி.மு.க-வும் எதிர்க்கட்சி அந்தஸ்தை அ.தி.மு.க-வும் இழந்த நிலையில் தீபாவளி கொண்டாட்டத்தை அவர்கள் முற்றிலுமாக தவிர்க்க, ‘எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை’ ரேஞ்சில் கொண்டாடி தீர்த்திருக்கிறார்கள் த.வெ.க மாண்புமிகுக்கள். கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோருக்கு புத்தாடை, வெடி, இனிப்புகள் என வாரி வழங்கியிருக்கிறார்களாம்.

இவ்விவகாரம் உட்கட்சிக்குள்ளேயே பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கிறது. ‘மாண்புமிகுக்கள் வசூலில் ஈடுபடுவதில்லை, பார்ட்டி ஃபண்ட் வசூலிப்பதில்லை என்றெல்லாம் பிராண்ட் செய்துகொள்பவர்களுக்கு எங்கிருந்து பணம் வந்தது?’ என முகம் சுளித்திருக்கிறார்கள் எம்.எல்.ஏ-க்கள் பலர். ஏற்கெனவே பொறுப்பு அமைச்சர்களுக்கும் எம்.எல்.ஏ-க்களுக்கும் முட்டல் மோதல்கள் கிளம்பியிருக்கும் நிலையில், ‘மாண்புமிகுக்கள் மட்டும் சம்பாதிக்கிறார்களா…’ என்று புதுப்பிரச்னையை கிளப்புகிறார்கள் எம்.எல்.ஏ-க்கள் சிலர்.

தமிழகத்தில் என்றுமில்லாத புதுவகை குலுக்கல் டெண்டரை நடைமுறைப்படுத்தி வருகிறது மான்செஸ்டர் மாநகராட்சி. ஒரே ஒப்பந்தப்புள்ளி விலை கோரும் நிறுவனங்களை அழைத்துப் பேசி, பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படாவிட்டால் குலுக்கல் முறையில் ஒப்பந்தத்தை வழங்குவது வாடிக்கையானதுதான். ஆனால், நான்கு வெவ்வேறு வேலைகளுக்கு டெண்டர் கோரிய நிறுவனங்களை அழைத்துப் பேசி, ஒவ்வொரு வேலைக்கும் குலுக்கல் முறையில் டெண்டரை வழங்கியிருக்கிறதாம் மான்செஸ்டர் மாநகராட்சி.

ஒரு குலுக்கலில் பங்கெடுத்த நிறுவனம், வேறு குலுக்கலில் பங்கெடுக்கக் கூடாதாம். ‘இதென்ன செட்டிங் டெண்டரா… சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் தங்களுக்குள் கலந்துப் பேசி வேலைகளை பிரித்துக் கொள்வதற்கும், இந்த குலுக்கலுக்கும் என்ன வேறுபாடு… முதல்வரின் துறையில் இப்படியொரு அக்கப்போரா?’ என்று நொந்துகொள்கிறார்கள் ஒப்பந்ததாரர்கள். அதிகாரிகளிடம் கேட்டால், ‘யாரும் மனசு கோணாம இருக்கணும்ல…’ என்று சப்பைக்கட்டுக் கட்டுகிறார்களாம்.

More in TamilNews
செஞ்சி சிறுமி மாயம்.. அடித்து ஆடும் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன்.. விசாரணையில் இறங்கிய 2 புதிய தலைகள்! செஞ்சி சிறுமி மாயம்.. அடித்து ஆடும் சிபிசிஐடி டிஐஜி விக்ரமன்.. விசாரணையில் இறங்கிய 2 புதிய தலைகள்! November 13, 2026 முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்.. அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் காலியானது! பல கோடி பேர் அவதி! முடங்கிய மைக்ரோசாப்ட் சேவைகள்.. அவுட்லுக், டீம்ஸ், கோபைலட் காலியானது! பல கோடி பேர் அவதி! November 13, 2026 விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்.. திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்.. பின்னணி என்ன விஜய் அரசுக்கு எதிராக அரசு ஊழியர்கள்.. திமுக, அதிமுகவுக்கு சாதகமாக போன தபால் ஓட்டுகள்.. பின்னணி என்ன November 13, 2026 ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 திருமணத்தை மீறிய உறவு! பெண் மோகத்தால் பதவியை இழந்த ஜென்சன் ஹுவாங் ஒன்றல்ல.. இரண்டல்ல.. 3 திருமணத்தை மீறிய உறவு! பெண் மோகத்தால் பதவியை இழந்த ஜென்சன் ஹுவாங் November 13, 2026 ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து! லாரி மோதி தீப்பிடித்ததில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி ஐக்கிய அரபு அமீரகத்தில் கோர விபத்து! லாரி மோதி தீப்பிடித்ததில் இந்தியர்கள் உட்பட 14 பேர் பலி November 13, 2026 ‘லே' பகுதிக்குள் 60 நாள் நடமாடக்கூடாது.. நள்ளிரவில் சோனம் வாங்சுக் திடீர் வீடியோ.. வீட்டு காவலில் அடைப்பு? ‘லே' பகுதிக்குள் 60 நாள் நடமாடக்கூடாது.. நள்ளிரவில் சோனம் வாங்சுக் திடீர் வீடியோ.. வீட்டு காவலில் அடைப்பு? November 12, 2026

See all 707 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *