“சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது” என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி பேசினார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

தருமபுரியில் நடந்த அதிமுக விழாவில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி பேசும்போது, “இன்று தவெக ஆட்சிக்கு வந்திருப்பது ஒரு விபத்து, இதை யாரும் எதிர்பார்க்கவில்லை, ஒரு கொள்கையும் கிடையாது. இந்த அரசு ஒரு மாததில் ரூ. 28 ஆயிரம் கோடி கடன் பெற்றுள்ளது. இந்த ஆண்டில ரூ. 1 லட்சத்து 25 ஆயிரம் கோடி கடன் வாங்கினால்தான் அரசை நடத்த முடியும்.

ஏரியில் வண்டல் மணல் எடுப்பவர்களை மாபியா என்று கூறும் அமைச்சர், மாபியாக்களைத் தப்பிக்க விட்டு விவசாயிகளைக் கொச்சைப்படுத்துகிறார். ஒன்றுமே தெரியாதவர்கள் எல்லாம் அமைச்சராகி விட்டார்கள். மூன்று பேர் மட்டும்தான் பேசுகிறார்கள், இன்று தமிழகமே தட்டுத் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

தருமபுரி விழாவில் எடப்பாடி பழனிசாமி
தருமபுரி விழாவில் எடப்பாடி பழனிசாமி

அதிமுக ஆட்சியில் தேவைக்கு மட்டும கடன் வாங்கப்பட்டது. கஜா புயல், கொரோனா ஊரடங்கு எனப் பல்வேறு பிரச்னைகளை அதிமுக ஆட்சி எதிர்கொண்டாலும், இறுதி ஆண்டில் மட்டும் 11 மருத்துவக்கல்லூரிகள், 7 சட்டக்கல்லூரிகள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைக் கொண்டு வந்தது. ஆனால், திமுக அரசு கடந்த 5 ஆண்டுகளில் கடனை மட்டும்தான் வாங்கியது.

ஆட்சிக்கு வந்த 100 நாட்களில் இந்த அரசு மக்களுக்கு என்ன செய்துள்ளது? பட்ஜெட்டில் ஒன்றுமே இல்லை. சட்டமன்றத்தில் ஆளும்கட்சியினரும், எதிர்க்கட்சியினரும் தங்கள் சொந்தப் பிரச்னைகளைத்தான் பேசி வருகிறார்கள். மக்கள் பிரச்னைகளைப் பற்றி அதிமுக மட்டும்தான் பேசுகிறது.

ஜன நாயகன் படத்துக்கு அப்படி இப்படி என்று ரீல்ஸ் போட்டார்கள். ஆனால், படம் வந்த ஒரு வாரத்தில் தியேட்டர்கள் காத்து வாங்கியது. அப்படித்தான் இந்த 100 நாள் ஆட்சியும் உள்ளது. ரீல் விடுகிறார்கள் அல்லது ரில்ஸ் போடுகிறார்கள்” என்று எடப்பாடி பழனிசாமி பேசிக்கொண்டிருக்கும்போதே மின் தடை ஏற்பட்டது.

அதன் பின்பு ஜெனரேட்டர் மின்சாரத்தால் மீண்டும் பேசியவர், “அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுவதுதான் இந்த ஆட்சியோட லட்சணம்” என்றார்.

More in TamilNews
MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ MP தொகுதி மேம்பாட்டு நிதி: அதிகாரிகளுக்கு கங்கனா ரனாவத் சரமாரி கேள்வி; வைரலாகும் வீடியோ September 6, 2026 “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? “`திமாகி நக்சல்' என்ற வார்த்தை ஹோமியோபதி மருந்து போன்றது" – என்ன சொல்கிறார் பிரதமர் மோடி? September 6, 2026 நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் நேபாள வெள்ளம் இந்தியாவுக்கு ஓர் எச்சரிக்கையாக கருதப்படுவது ஏன்? 7 முக்கிய விஷயங்கள் September 6, 2026 இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி இந்தியாவில் 'நாய்ப்பழம்' என அழைக்கப்பட்ட அவகாடோ விரும்பப்படும் பழமாக மாறிய பின்னணி September 6, 2026 சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் சாதிவாரி கணக்கெடுப்பு: "OBC மக்களின் உரிமையைக் காப்பாற்ற தீர்மானம் இயற்ற வேண்டும்" – ஸ்டாலின் September 6, 2026 புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் புத்தம் புது கார்.. 6 ஏர்பேக்குகள் இருந்தும் 8 உயிர்கள் பலி! கேரள விபத்து குறித்து ஷாக் தகவல் September 6, 2026

See all 773 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *