சமீபத்தில் இந்தியப் பிரதமர் மோடி கிர்கிஸ்தான் நாட்டில் உள்ள பிஷ்கெக் நகருக்கு 26-வது ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) உச்சி மாநாட்டிற்காகச் சென்றிருந்தார்.

மோடி – ஈரான் பிரதமர் சந்திப்பு

அங்கே ரஷ்ய அதிபர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங் உள்ளிட்ட பல உலகத் தலைவர்களைச் சந்தித்தார் மோடி. இந்த உலகத் தலைவர்களில் ஈரான் பிரதமர் பெசெஷ்கியனும் அடக்கம்.

நேற்று அமெரிக்காவின் செய்தியாளர்கள் சந்திப்பில் மோடி – பெசெஷ்கியன் சந்திப்பு குறித்து அமெரிக்காவின் வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோவிடம் கேட்கப்பட்டது.

இந்த இரு நாடுகளும் ஏதேனும் வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்ள இருக்கிறதா என்றும் கேட்கப்பட்டது.

மார்கோ ரூபியோ
மார்கோ ரூபியோ

மார்கோ ரூபியோ பேச்சு

இதற்கு மார்கோ ரூபியோ, “எனக்குத் தெரிந்து இந்தியாவிற்கும் ஈரானுக்கும் இடையே எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஒவ்வொரு நாடும் தங்களுக்கான சொந்த வெளியுறவுக் கொள்கையை வைத்திருக்கின்றன. உலகின் பல நாடுகள் ஈரான் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு தான் இருக்கின்றன.

ஆனால், ஈரான் பொருளாதாரத் தடைகளில் இருந்து தப்பிப்பதற்கு எந்தவொரு நாடும் உதவக் கூடாது.

பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கவும், அணு ஆயுதங்களைத் தயாரிக்கவும் ஈரான் அந்த வருவாயைப் பயன்படுத்திக்கொள்ளும் வகையில், அவர்கள் பணம் ஈட்டுவதற்கான வழிகளை உருவாக்க எந்த நாடும் துணைநிற்கக் கூடாது.

ஏதேனும் ஒரு நாடு அதைச் செய்யத் துணிந்தால், அந்த நாட்டின் மீதும் நாங்கள் பொருளாதாரத் தடைகளை விதிக்க வேண்டியிருக்கும்” என்று பதிலளித்துள்ளார்.

More in TamilNews

See all 796 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *