ஈரான் போர் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையிலான போராகத்தான் முதலில் தொடங்கியது.
ஆனால், இந்தப் போருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியபோதுதான், ஈரான் போர் உலக நாடுகளுக்கான பிரச்னையாக மாறியது.
காரணம், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்து இந்த நீர்ச்சந்தி வழியாகத்தான் பெரும்பான்மையாக நடக்கும்.
இதனால், இந்த நீர்ச்சந்தியை மூடியதும் பல உலக நாடுகள் எண்ணெய் இருப்பு… எண்ணெய் போக்குவரத்தில் நெருக்கடியைச் சந்தித்தன. எண்ணெய் விலையும் எகிறியது.

ஈரானுக்கு எளிது!
ஈரானின் எல்லை ஹார்முஸ் நீர்ச்சந்தி விரிந்திருப்பதால், ஈரானுக்கு இதை மூடிவிடுவது எளிதாக இருந்தது.
ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் கடக்க முயன்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்.
தற்போது ஓமனுடன் சேர்ந்து ஹார்முஸ் நீர்ச்சந்தி போக்குவரத்திற்கு சுங்கக் கட்டணம் விதிக்க பிளான் போட்டு வருகிறது ஈரான்.
கப்பல்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், சுங்கக் கட்டண வரியைத் தடுக்கவும், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கவும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்கப் படைகளை நிறுத்தியுள்ளோம்… நிறுத்துகிறோம் என்று கூறிவந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
ட்ரம்பின் யு-டர்ன்
இப்போது திடீரென்று யு-டர்ன் அடித்து, அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் ஹார்முஸ் வந்துவிட்டது என்றும், ஹார்முஸிற்கு ட்ரம்ப் நீர்ச்சந்தி என்று பெயர் வைக்கலாம் என்றும் கூறுகிறார்.
ஹார்முஸ் அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது என்று அவர் பல முறை கூறிவிட்டார். ஆனால், ‘ட்ரம்ப் நீர்ச்சந்தி பெயர்’ குறித்து தற்போதுதான் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.
இது குறித்து அவருடைய பதிவு…
“இப்போது இது அமெரிக்காவின் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டதால், ‘ஹார்முஸ் நீர்ச்சந்தி’ என்ற பெயரை ‘ட்ரம்ப் நீர்ச்சந்தி’ என்று மாற்றிவிடலாமா? அமெரிக்காவைப் போலவே, இதுவும் இதுவரை இல்லாத அளவிற்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக மாறிவிடும்!” என்று பதிவிட்டுள்ளார் ட்ரம்ப்.

ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடி உலக நாடுகளுக்கு நெருக்கடியைக் கொடுத்து வருகிறது… ட்ரம்போ அந்த நீர்ச்சந்திக்குப் பெயரை மாற்றலாமா என்று கேட்கிறார்.
எது எப்படியோ… ஹார்முஸ் நீர்ச்சந்தியை ஈரானும் சரி… அமெரிக்காவும் சரி… ‘தங்களுக்கு’த்தான் என்று சொந்தம் கொண்டாட முடியாது.
காரணம், இது இயற்கையாகவே உருவான நீர்ச்சந்தி. இதனால், அது உலக நாடுகளின் பொதுச் சொத்து.
ஆக, ஹார்முஸ் நீர்ச்சந்தியை யாரும் சொந்தம் கொண்டாடுவதற்கு அல்ல.
நேபாளத்தில் வெள்ளமே வராத 'கருப்பு கிராமத்தில்' மக்களை வாட்டும் இரட்டை கவலை
September 7, 2026
சிங்கப்பூரில் இந்தியர்களை குறிவைத்து வெறுப்புப் பேச்சு – என்ன நடக்கிறது?
September 7, 2026
முதல்வர் விஜய் உரை: "கலைஞர் மீது அவர்களுக்கு இருக்கும் அச்சம் புரிகிறது" – தங்கம் தென்னரசு
September 7, 2026
எஃப்.கியூ.எல். செயலியில் பணத்தை இழந்தது எப்படி? கலங்கி நிற்கும் கிராம மக்கள் பேட்டி
September 7, 2026
அதிமுகவை தவிர்த்து திமுகவை சாடிய விஜயின் வியூகம் என்ன? சட்டப்பேரவை நிகழ்வு பற்றி நிபுணர்கள் கருத்து
September 7, 2026
LIC-ன் 70வது ஆண்டு விழா கோலாகலம்… பயனாளிகளுக்கு நல உதவிகள்!
September 7, 2026
Audi’s new A2 E-tron is its most affordable and efficient EV yet
September 7, 2026
5 Standout Women’s Takeaways From Creative Arts Emmys Night 2
September 7, 2026
J.A. Bayona’s ‘Beyond Society’ Doc Revisits Survivors’ Lives After Andes Crash Rescue
September 7, 2026
Jason Statham’s ‘Mutiny’ Seeks New Audience On Streaming This Week After Stalling At Box Office
September 7, 2026
Opaque recurrence, and other AI terms that you should probably know
September 7, 2026