விடுதலைப் போராட்ட வீரர் வ.உ.சிதம்பரனரின் பிறந்த நாளினை முன்னிட்டு மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சிதம்பரனாரின் முழு உருவ சிலைக்கு மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து  செய்தியாளர்களைச் சந்தித்து பேசிய அமைச்சர் நிர்மல் குமார், “கேஎன் நேரு வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை விவகாரத்தில் எந்தப் பழிவாங்குதல் நடவடிக்கையும் கிடையாது. லஞ்ச ஒழிப்புத் துறையில் தலையிடும் உரிமை யாருக்கும் கிடையாது.

புகாரின் அடிப்படையில் ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குகள் பதிவு செய்கிறார்கள். அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும் யாரும் யாரையும் பழிவாங்க வேண்டிய அவசியம் இல்லை. உதயநிதி கைது என்பது அனைவருக்கும் தெரியும். பெண்களைப் பற்றி அவதூறாக பொது மேடையில் தொடர்பில்லாமல் பேசியதால் விசாரணைக்காகத்தான் அழைத்துச் செல்லப்பட்டார். இது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு என்ன நடந்திருக்கிறது எனத் தெரியவில்லை. அது தொடர்பாக அவர்கள்தான் தெரிவிக்க வேண்டும்” என்றார்.

திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,
திமுக ஸ்டாலின், அதிமுக எடப்பாடி பழனிசாமி,

தவெக ஆட்சி நீடிக்காது என திமுக அதிமுக சொல்வது தொடர்பான கேள்விக்கு, “இதில் திமுகவும் அதிமுகவும் சேர்ந்து இருப்பது தெரிகிறது. 50 ஆண்டுகள் ஆனாலும் இந்த ஆட்சியில் மாற்றம் இருக்காது. மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதிமுகவும் திமுகவும் இணைந்து ஒரே கூட்டணியில் பாஜகவுடன் சேர்ந்து போட்டியிட வாய்ப்பு உள்ளது. இவர்கள் யாருடன் சேர்ந்தாலும் எந்தத் தேர்தலிலும் எங்க கிட்டயே வர முடியாது.

தூய்மைப் பணியாளர்கள் சென்னை மட்டுமல்ல தமிழ்நாடு முழுவதும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் உள்ளனர். ஒவ்வொரு துறை வாரியாக முடிவுகள் எடுக்கப்படும்போது அனைத்து மாவட்டங்களை சேர்த்துதான் முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு முடிவுகளையும் சிறப்பாக எடுக்க வேண்டி இருக்கும். ஏழை எளிய மக்களுக்கான அரசு மக்களுக்கு என்ன செய்ய வேண்டுமோ அதனை அந்தந்த நேரத்தில் செய்வோம்” என்றார்.

தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்
தூய்மைப் பணியாளர்கள் போராட்டம்

முதலமைச்சரின் பதிலுறை நாளில் கேள்வி பதில் நேரமில்லை எனக் குறிப்பிட்ட தொடர்பான கேள்விக்கு, “முதலமைச்சர் அனைத்துக்கும் சேர்த்து பதில் சொல்ல வேண்டியது இருக்கும் கேள்வி பதில் நேரம் முடித்துவிட்டு வைத்துக் கொள்ளலாம். முதலமைச்சரின் பதிலுரை முடிந்த பிறகு அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டியதாக இருக்கும். அதற்கு பின்பு மானிய கோரிக்கை உள்ளது. அதற்குபின் கேள்வி நேரம் வைத்திருந்தால் இரவு 9 மணி ஆகிவிடும் சபை நடத்தியதாக வரலாறு இல்லை அதனால் கேள்வி நேரம் இல்லை” என்றார்.

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணம் குறித்த கேள்விக்கு, ”வெளிநாட்டு பயணம் எது குறித்து பயணம் என்பதை முதல்வர் அலுவலகத்தில் வெளியிடுவார்கள். ஆனால் அடுத்த வாரம் பயணம் உள்ளது. முதல்வர் திட்டங்கள் அலுவலகத்தில் இருந்து முதல்வரின் நிகழ்ச்சிகள் குறித்து அறிவிப்பு வரும் முதலமைச்சர் நிகழ்ச்சி குறித்து நிறைய ரூமர்ஸ் வருது மதுரையிலயே நிகழ்ச்சியில் உள்ளதாக எங்களுக்குத் தெரியாமலே சொல்கிறார்கள். முதல்வரின் நிகழ்ச்சி குறித்து முதல்வர் அலுவலகத்தில் இருந்து தகவல் அளிப்பார்கள்” என்றார்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

கோவில் விவகாரத்தில் பி.டிஆர் பழனி வேல் தியாகராஜன் எக்ஸ் தள பதிவு குறித்த கேள்விக்கு, “கோவில் விசயத்தில் நாங்கள் யாருமே தலையிட மாட்டோம். பாதுகாப்பு சம்பந்தப்பட்ட ஆலோசனைகள்தான் ஏற்பாடுகள் குறித்து தான் கேட்போம் . கோவில் விசயத்தில் முந்தைய அரசுகள் என்ன தவறு செய்ததோ அதனை நாங்கள்  செய்ய மாட்டோம். கோவில்களில் உள்ள அறங்காவலர் குழுவாக திமுகவினரின் குடும்பத்தைச் சேர்ந்த நபர்களைதான் நியமித்தார்கள்.

அந்த மாதிரியான தவறுகள் நம்ம ஆட்சியில் இருக்காது. பெயரைப் போட வேண்டும் என யாராவது உயர்நீதிமன்றத்திற்குச் செல்வார்களா?

இப்போது உள்ள குழுவிலே ஒரு சிலருக்கு உடன்பாடில்லை. இதில் பெயரைப் போடுவதற்கு என்ன இருக்கிறது ? மன்னர்கள் கட்டியது நம்ம போய் பெயரைப் போடுவதால் என்ன இருக்கிறது. இது சாதாரண விஷயம். ஒன்னும் இல்லாத விஷயத்திற்கு அவர் பேசிக்கொண்டிருப்பார்.

பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்
பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்

பழனிவேல் தியாகராஜன் குடும்பத்திற்குச் சொந்தமான கல்யாண மண்டபத்தில் இருந்து நிர்வாகிகள் வந்து என்னை பார்த்தார்கள். மூன்று வருடமாக எங்களை எதையுமே செய்ய விடவில்லை டிரஸ்டையும் முடக்கி வைத்திருக்கிறார்கள் எனக் கூறினார்கள். சின்ன சின்ன ஈகோவால்  அவருடைய சொந்த குடும்பத்தினருடைய அறக்கட்டளையையே செயல்படுத்த விடாமல் முடக்கி வைத்துள்ளார்.

சட்டபூர்வமாக என்ன வேண்டுமோ சொல்லுங்கள் செய்து தருகிறோம் என அவர்களிடம் தெரிவித்தேன். அதற்கெல்லாம் பெருசாக நினைக்க வேண்டாம்” என்றார்

More in TamilNews
டாலருக்கு பெரிய அடி இருக்கு! இந்தியா கொடுக்கப்போகும் ஷாக்! BRICS Pay கேம் தொடங்கியாச்சு! டாலருக்கு பெரிய அடி இருக்கு! இந்தியா கொடுக்கப்போகும் ஷாக்! BRICS Pay கேம் தொடங்கியாச்சு! September 9, 2026 தூத்துக்குடி ஆறுமுகநேரியில் இரவில் ஐடி ஊழியரை நடுரோட்டில் இறக்கிவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் தூத்துக்குடி ஆறுமுகநேரியில் இரவில் ஐடி ஊழியரை நடுரோட்டில் இறக்கிவிட்ட அரசு பஸ் டிரைவர் சஸ்பெண்ட் September 9, 2026 பிறவி இதய நோயால் உயிருக்கு போராடும் 8 வயது சிறுவன்! நீங்கள் நினைத்தால் காப்பாற்ற முடியும்! உதவுங்கள் பிறவி இதய நோயால் உயிருக்கு போராடும் 8 வயது சிறுவன்! நீங்கள் நினைத்தால் காப்பாற்ற முடியும்! உதவுங்கள் September 9, 2026 Kerala accident: விடுதியில் தகராறு.. போலீஸ்க்கு பயந்து அதிவேகத்தில் போனதால் விபத்தா? கேரள சம்பவத்தில் வெளியான பகீர் Kerala accident: விடுதியில் தகராறு.. போலீஸ்க்கு பயந்து அதிவேகத்தில் போனதால் விபத்தா? கேரள சம்பவத்தில் வெளியான பகீர் September 9, 2026 நிர்மல் குமார் டோன் கவனிச்சீங்களா? மிசா வேறு, குண்டாஸ் வேறு தெரியுமா? விஜய் மீதும் பாய்ந்த பரந்தாமன் நிர்மல் குமார் டோன் கவனிச்சீங்களா? மிசா வேறு, குண்டாஸ் வேறு தெரியுமா? விஜய் மீதும் பாய்ந்த பரந்தாமன் September 9, 2026 திமுக vs தவெக.. விஜய் சொதப்பிட்டாரே? திமுகவை சாதாரணமாக எடைபோட முடியாது ஏன்? திமுக vs தவெக.. விஜய் சொதப்பிட்டாரே? திமுகவை சாதாரணமாக எடைபோட முடியாது ஏன்? September 9, 2026

See all 775 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *