பிப்ரவரி மாதக் கடைசியில் தொடங்கிய ஈரான் போர் இன்னும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
ஆனால், அமெரிக்க அதிபர் ட்ரம்போ ஈரான் போர் விரைவில் முடிந்துவிடும்… இப்போது முடிந்துவிடும்… அப்போது முடிந்துவிடும் என்று தொடர்ந்து கூறிக்கொண்டே இருக்கிறார்.
நீளும் ஈரான் போர்
வருகிற நவம்பர் மாதம் அமெரிக்காவின் மிட் டேர்ம் தேர்தல் வர உள்ளது. இது அந்த நாட்டின் காங்கிரஸின் (நாடாளுமன்றம்) தேர்தல் ஆகும்.
அதற்குள்ளாவது இந்தப் போர் முடிந்துவிடும் என்று நினைத்தால், ‘தேர்தலை முன்னிட்டெல்லாம் போர் சீக்கிரம் முடிக்கப்படாது’ என்று கூறிவிட்டார் ட்ரம்ப்.
இதனால், அமெரிக்கா தாக்க… ஈரான் பதிலுக்குத் தாக்க அல்லது ஈரான் முதலில் தாக்க… அமெரிக்கா பதிலுக்குத் தாக்க என்கிற காட்சிகள் தொடர்கதையாகிக்கொண்டே இருக்கின்றன.

ட்ரம்ப் விளக்கம்
நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்துள்ளார் ட்ரம்ப். அப்போது இந்தப் போர் இத்தனை நாட்கள் நீள்வது குறித்து விளக்கமளித்துள்ளார்.
“இந்தப் போரின் முதன்மையான நோக்கமே தெஹ்ரான் அணு ஆயுதத்தை உற்பத்தி செய்வதைத் தடுப்பதுதான். இப்போது ஐந்து மாதங்கள் ஆகின்றன.
இந்த ஐந்து மாதங்களில் என்ன சாதித்தோம் தெரியுமா? அவர்கள் இனி அணு ஆயுதத்தைப் பெறவே முடியாது. அதைத்தான் செய்திருக்கிறோம். ஈரான் கைக்கு அணு ஆயுதம் கிடைக்கவே கிடைக்காது.
இஸ்ரேலும், மத்திய கிழக்கும்
அமெரிக்க ராணுவத்தின் தலையீடுதான் ஒரு பெரிய பிராந்தியப் போரைத் தடுத்து நிறுத்தியுள்ளது.
அமெரிக்கா இந்த நடவடிக்கையை எடுக்காமல் இருந்திருந்தால், இஸ்ரேலும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கும் மிக மோசமான அச்சுறுத்தலை எதிர்கொண்டிருக்கும்.
அமெரிக்கா மட்டும் உள்ளே இறங்காமல் இருந்திருந்தால், இப்போது இஸ்ரேல் என்ற ஒரு நாடே இருந்திருக்காது. மத்திய கிழக்கே அழிந்திருக்கும்.
அதற்கு அடுத்து அவர்கள் ஐரோப்பிய நகரங்களையும், நமது நகரங்களையும் கூடத் தாக்கியிருப்பார்கள்.
ஆனால், இந்த ஐந்து மாதங்களிலேயே அவர்கள் அணு ஆயுதம் தயாரிப்பதைத் தடுத்து நிறுத்திவிட்டோம்” என்று பேசியிருக்கிறார்.
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும்
September 7, 2026
SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
September 7, 2026
Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்
September 7, 2026
Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம்
September 7, 2026
உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம்
September 7, 2026
கரண்ட் பில் திடீரென டபுள் மடங்கா? இனி உடனே கட்ட வேண்டாம்.. 3 நாளில் ஆய்வு: தமிழக மின்சார வாரியம்
September 7, 2026
புதிய தலைமை செயலகம்.. தமிழக அரசு அடையாளம் கண்டுள்ள 3 இடங்களும் அவற்றில் உள்ள சிக்கல்களும்
September 7, 2026
SBI Job: எஸ்பிஐ வங்கியில் அதிகாரி ஆகனுமா? 207 காலிப்பணியிடங்கள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?
September 7, 2026
Gold Price Today: இன்று தலைகீழாக குறையப் போகுது தங்கம் விலை.. வாரத்தின் முதல் நாளே நகை பிரியர்களுக்கு சர்ப்ரைஸ்
September 7, 2026
Nithyananda: கைலாசா எங்கே இருக்கு.. முகவரியை வெளியிட்ட நித்யானந்தா! நல்ல நேரம் பிறந்தாச்சாம்
September 7, 2026
Immortal Box Office: கயாடு லோஹர் கருணையால் ஜி.வி. பிரகாஷுக்கு ஒரு ஹிட் பார்சல்.. இம்மார்ட்டல் வசூல்!
September 7, 2026
உதயநிதி ஸ்டாலினுக்கு விஜய் பதிலடி என்ன? இன்று திமுக இதைதான் செய்யுமா? இந்த 4 விஷயம்தான் முக்கியம்
September 7, 2026