தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் நேற்றோடு (செப்டம்பர் 8) முடிந்திருக்கிறது. இந்தக் கூட்டத்தொடரில் நடந்த முக்கியமான நிகழ்வுகளை தமிழ்நாடு அரசு தகவல்களாக வெளியிட்டுள்ளது.
அந்த நிகழ்வுகளின் ஹைலைட்ஸ்…
> தமிழ்நாடு சட்டமன்றக் கூட்டத்தொடர் 28 நாள்கள், அதாவது 178 மணி நேரம் 31 நிமிடங்கள் நடைபெற்றது.
> விதி 110-ன் கீழ் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 17 அறிக்கைகளையும். 51 துறைகளின் சார்பில் 1,117 அறிவிப்புகளும் வெளியிடப்பட்டதோடு, 13 சட்ட முன்வடிவுகள் மற்றும் 9 அரசினர் தனித் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

> விதி 110-ன் கீழ் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் அறிக்கைகள் மற்றும் அறிவிப்புகள்:
1. நெல் மற்றும் கரும்புக்கான மாநில அரசின் ஊக்கத்தொகை தொடர்பான அறிவிப்பு.
2. கூட்டுறவு வங்கிகள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பயிர்க்கடன்களுக்குக் கூடுதல் தள்ளுபடி வழங்கும் அறிவிப்பு.
3. பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவுச் சங்கங்களுக்கு வழங்கப்படும் பால் கொள்முதல் விலையை உயர்த்தும் அறிவிப்பு.
4. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் மக்கள் நல அறிவிப்புகள்.
5. சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது தொகுதிகளில் மக்கள் பணிகளைச் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், அரசு சார்பில் வாகனம், வாகனப் படி மற்றும் உதவியாளர் படி வழங்கும் அறிவிப்பு.
6. வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின்படி, ஒவ்வொரு குடும்பத்திற்கும் விலையில்லா எரிவாயு சிலிண்டர் வழங்கும் அறிவிப்பு.
7. பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் நடவடிக்கைகளை அரசு கைவிடும் என்ற அறிவிப்பு.
8. “வெற்றித் தமிழகம்” தொலைநோக்குத் திட்டத்தின் ஓர் அங்கமாக “வெற்றிப் பயணம்” திட்டத்தைச் செயல்படுத்தும் அறிவிப்பு.
9. பால் உற்பத்தியாளர்கள் மேலும் பயனடையும் வகையில் பால் கொள்முதல் விலையை மேலும் உயர்த்தும் அறிவிப்பு.
10. எரிசக்தித் துறையின் சார்பில் புதிய மின்கட்டமைப்புகளை அமைக்கும் அறிவிப்பு.

11. காஞ்சிபுரம் மாவட்டத்தில் செமிகண்டெக்டர் மற்றும் மின்னணுவியல் உற்பத்திப் பூங்கா, கோயம்புத்தூரில் டிஜிட்டல் நிதி மையம் மற்றும் திருச்சிராப்பள்ளி மண்டலத்தில் பல்முனை சரக்குப் போக்குவரத்து மையம் அமைக்கும் அறிவிப்பு.
12. நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் பல்வேறு புதிய திட்டங்கள் மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு அறிவிப்புகள்.
13. ஓட்டுநர் உரிமம் மற்றும் வாகனப் பதிவுச் சான்றிதழ் ஆகியவற்றைப் பொதுமக்கள் டிஜிட்டல் முறையில் தாங்களே பதிவிறக்கம் செய்துகொள்ளும் நடைமுறையைத் தமிழ்நாட்டில் அறிமுகப்படுத்தும் அறிவிப்பு.
14. விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது அவர்கள்மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெறும் அறிவிப்பு.
15. சென்னையில் உலகத்தரம் வாய்ந்த “தமிழ்நாடு ஒலிம்பிக் நகரம்” அமைக்கும் அறிவிப்பு.
16. தமிழ்நாட்டில் உலகத்தரம் வாய்ந்த “மோட்டார் ஸ்போர்ட்ஸ் நகரம்” அமைக்கும் அறிவிப்பு.
17. சென்னையில் நவீன வசதிகளுடன் சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டட வளாகத்தை அமைக்கும் அறிவிப்பு.
விவசாயிகள் முதல் தொழிலாளர்கள் வரை அனைத்துத் தரப்பு மக்களின் நலனையும், தமிழ்நாட்டின் நீண்டகால வளர்ச்சியையும் மையமாகக் கொண்டதாக இந்த அறிவிப்புகள் அமைந்தன.

நிறைவேற்றப்பட்ட குறிப்பிடத்தக்க தீர்மானங்கள்:
1. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள், அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளிட்ட பொது அமைப்புகளின் நிகழ்ச்சிகள் தொடங்குவதற்கு முன் “தமிழ்த்தாய் வாழ்த்து” கட்டாயம் முதலில் பாடப்பட வேண்டும் என்ற தீர்மானம்.
2. நாடாளுமன்ற மக்களவையின் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கையை 543 என்ற நிலையிலேயே நிரந்தரமாக்க வேண்டும்.
3. தமிழை மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தின் முதன்மையான நீதிமன்ற மொழியாக அங்கீகரிக்க வேண்டும்.
எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அதிக வாய்ப்பு
இக்கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது கருத்துகள், கோரிக்கைகள் மற்றும் தொகுதி சார்ந்த பிரச்னைகளை விரிவாக எடுத்துரைப்பதற்கு அதிக நேரமும் வாய்ப்பும் வழங்கப்பட்டது.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் 17 மணி நேரம் 43 நிமிடங்களும், திமுக உறுப்பினர்கள் 31 மணி நேரம் 21 நிமிடங்களும், அதிமுக உறுப்பினர்கள் 17 மணி நேரம் 45 நிமிடங்களும், இதரக் கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்கள் 20 மணி நேரம் 24 நிமிடங்களும் உரையாற்றியுள்ளனர்.
28 நாள்கள் நடைபெற்ற இந்தக் கூட்டத்தொடரில் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு கட்சியினரின் மோசமான நடவடிக்கையால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். மற்ற நாள்களில் கடும் அமளி செய்தபோதும் அவர்களை மாண்புமிகு சட்டமன்றப்பேரவைத் தலைவர் அவர்கள் வெளியேற்றவில்லை.”
நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
September 13, 2026
நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்!
September 13, 2026
திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா?
September 13, 2026
திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை
September 13, 2026
பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான்
September 13, 2026
Senthil Balaji: பாட்டிலுக்கு 10 ரூபாய்.. கரூரில் பாட்டு பாடினாங்களே? இப்போ என்ன பாட்டு பாட போறாங்க? செந்தில் பாலாஜி
September 13, 2026
ஆசிய கோப்பையை 8வது முறையாக வென்று இந்திய மகளிர் அணி சாதனை.. பைனலில் இலங்கைக்கு பதிலடி
September 13, 2026
நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
September 13, 2026
32 பந்தில் 82 ரன்.. 7 சிக்ஸர்கள் பறக்கவிட்ட அபிஷேக் சர்மா.. ஆப்கானிஸ்தானை பந்தாடி வென்ற இந்தியா
September 13, 2026
நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்!
September 13, 2026
வைபவ் சூர்யவன்ஷி இருக்கும்போது சஞ்சு சாம்சன் செய்த சொதப்பல்.. ஆப்கானிஸ்தான் டி20 போட்டியில் ஏமாற்றம்
September 13, 2026
திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா?
September 13, 2026