லண்டனின் சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டில் நடக்கும் கார் ரேஸ் பந்தயத்தை தமிழக முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கவிருக்கிறார். முன்னதாக சில்வர் ஸ்டோன் சர்க்கியூட்டுக்கு வந்த முதல்வர் விஜய்யும் அஜித்குமாரும் சந்தித்துக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

முதலீடுகளை ஈர்ப்பதற்காக கடந்த 10 ஆம் தேதி இரவு முதல்வர் விஜய் லண்டன் கிளம்பி சென்றார். கார் ரேஸில் கலந்துகொள்ள நடிகர் அஜித்தும் லண்டனில்தான் முகாமிட்டிருக்கிறார். அவரை பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா நேற்று சந்தித்து பேசியிருந்தார்.
இந்நிலையில், இன்று நடக்கவிருக்கும் பந்தயத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைப்பார் என அறிவிக்கப்பட்டது. போட்டியை தொடங்கி வைக்க இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு சில்வர் ஸ்டோன் மைதானத்துக்கு வந்த முதல்வர் விஜய், அங்கிருந்த ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து ஆட்டோகிராப் கொடுத்தார். தொடர்ந்து சர்க்கியூட்டுக்குள் சென்ற விஜய் ரேஸிங் உடையோடு தயாராக இருந்த அஜித் குமாரை சந்தித்து கட்டித் தழுவி நலம் விசாரித்தார்.

இருவரும் ஒன்றாக இணைந்து ரசிகர்களை நோக்கி கையசைக்கவும் செய்தனர். ‘தலைவரோட ரேஸிங் சூட்டை பிடிச்சு நான் போட்டோ எடுத்துக்கணும்’ என்றும் முதல்வர் விஜய் கூறினார்.
இன்னும் சில நிமிடங்களில் தொடங்கவிருக்கும் இந்த ரேஸை முதல்வர் விஜய் கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.
நள்ளிரவில் வச்சு செய்யப்போகுது மழை.. தமிழகம் முழுக்க 15 மாவட்டங்களுக்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம்
September 13, 2026
நடுக்கடலில் குதித்து உயிர் தப்பிய இந்தியர்கள்.. வளைகுடாவில் திக்திக்.. ஒரு இந்திய மாலுமி மாயம்!
September 13, 2026
திருமாவளவன் திமுகவை விட்டுட்டு, விஜய் பக்கம் போக காரணமே வேற போல.. தவெக அப்படியே பாஜக மாதிரி இருக்கா?
September 13, 2026
திமுக, தவெக ஒன்றுக்கொன்று சளைத்தது அல்ல.. லண்டனில் கார் ரேஸ்! விஜய்யை விட்டு விளாசிய அதிமுக இன்பதுரை
September 13, 2026
பிரிக்ஸ் அமைப்பை ஒற்றை ஆளா தூக்கி நிறுத்தும் சீனா.. இந்தியா உட்பட மற்ற நாடுகள் நிலைமை மோசம் தான்
September 13, 2026
Senthil Balaji: பாட்டிலுக்கு 10 ரூபாய்.. கரூரில் பாட்டு பாடினாங்களே? இப்போ என்ன பாட்டு பாட போறாங்க? செந்தில் பாலாஜி
September 13, 2026
Overwatch Season 5 Will Add a New Kind of Support, Try to Solve 2 Roster Headaches
September 13, 2026
Trump and Mike Johnson think the AI industry is overreacting
September 13, 2026
Sweden election: Center-left coalition leads initial polls
September 13, 2026
Trump downplays warnings of AI risks, citing rivalry with China
September 13, 2026
Apple is reportedly working on iPhone game controllers
September 13, 2026