பேரறிஞர் அண்ணாவின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகர தி.மு.க சார்பில் அமைதிப் பேரணி நடத்த, காவல்துறையிடம் அனுமதி கோரப்பட்டிருக்கிறது.
அதற்கு குடியாத்தம் நகர காவல் ஆய்வாளர் R.S. சிவகுமார், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு அனுமதி அளிக்க மறுத்துள்ளார்.
இதற்கு திமுக தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தன் எக்ஸ் பக்கத்தில், “தந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் பிறந்த ஈரோட்டு மண்ணில் தி.க. சார்பில் செப்டம்பர் 17-ஆம் தேதி ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பேரணிக்கும், குடியாத்தத்தில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு தி.மு.கழகம் உள்ளிட்ட கட்சிகள் நடத்தவிருந்த பேரணிக்கும், இந்த Circus அரசின் காவல்துறை அனுமதி மறுத்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை, வலதுசாரி அமைப்புகளின் பேரணிகளுக்கு அனுமதி வழங்கிவிட்டு, தமிழ்நாட்டைச் செதுக்கிய பெரியார் – அண்ணாவின் பிறந்த நாள் பேரணிகளுக்கு அனுமதி மறுப்பது ஏன்? பெரியாரையும், அண்ணாவையும் கொள்கைத்தலைவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் முதலமைச்சர், யாரைத் திருப்திப்படுத்த இதைச் செய்கிறார்?
காவல்துறை, முதலமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கிறதா? இல்லை அவரது காவி எஜமானர்களின் Control-க்கு சென்றுவிட்டதா? பெரியார் – அண்ணாவைப் புறக்கணிக்கும் Reels முதலமைச்சர், அவருடைய அடிமைத்தனத்தையும் – ஆணவத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உணர்ந்து, உடனே இந்தப் பேரணிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு?…மருத்துவ நிர்வாகம் சொன்னது என்ன?
September 17, 2026
விஜயின் LONDON VISIT… வெற்றிப் பயணமா? வெற்றுப் பயணமா?
September 17, 2026
மக்களே நகை வாங்கப் போறீங்களா?.. இன்று தங்கம் விலை என்ன தெரியுமா?
September 17, 2026
இதுதான் தமிழ்நாடு! மதுரை ஆளும் மீனாட்சி! கோபுர தரிசனத்துக்கு வந்த மக்கள்..குளிர வைத்த இஸ்லாமியர்கள்
September 17, 2026
தமிழ்நாட்டுக்கு வந்து இறங்கியதுமே பிரதமர் மோடியை வாழ்த்திய முதல்வர் விஜய்! வார்த்தைகளை கவனிச்சீங்களா
September 17, 2026
கரண்ட் கட் போதாதுன்னு.. 1 யூனிட் மின்சாரத்துக்கு ரூ.30க்கு வாங்கும் நிலை? தமிழகத்தில் என்ன நடக்குது?
September 17, 2026
கோவை டூ விருதுநகர் வரை.. இன்று 6 மாவட்டங்களில் கனமழை வெளுக்கும்.. வானிலை அப்டேட்
September 17, 2026
‘What did you do in the past year?’ NGT asks Tamil Nadu govt. over Vinayaka idol immersion preparedness
September 17, 2026
வி.எஸ்.பாபுவின் உடல்நிலை எப்படி இருக்கு?…மருத்துவ நிர்வாகம் சொன்னது என்ன?
September 17, 2026
DMK govt. mooted heritage structure in place of King’s Barracks at Fort St. George
September 17, 2026
E.M. Sudarsana Natchiappan, former Union Minister and senior Congress leader, passes away at 78
September 17, 2026
Deboning technology by ICAR-CIBA to popularise milkfish
September 17, 2026