சுதந்திரப் போராட்ட தியாகி ராமசாமி படையாட்சியாரின் 109-வது பிறந்தநாளை முன்னிட்டு காங்கிரஸ் முன்னாள் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட தலைவர்கள், சென்னையில் அவரின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த செல்வப்பெருந்தகை, “சுதந்திரப் போராட்ட தியாகியும், பிற்படுத்தப்பட்ட மற்றும் விளிம்புநிலை மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்கு வித்திட்டவர் தலைவர் ராமசாமி படையாட்சியார். ராமசாமி படையாட்சியார் தன் மக்களுக்காகவும், மாநிலத்திற்காகவும், தேசத்திற்காகவும் எந்தவொரு கருத்தையும் துணிச்சலுடனும் தைரியத்துடனும் பதிவு செய்யக்கூடியவர்.
அத்தகைய துணிச்சலும் ஆளுமையும் இன்றைய அரசியல் சூழலில் குறைந்திருக்கிறதோ என்ற கேள்வி எழுகிறது.

அரசு கொண்டுவரும் ஐந்து ஆண்டுகள் திட்டங்களோ அல்லது எதிர்காலத் திட்டங்களோ எதுவாக இருந்தாலும், திட்டம் செயல்படுத்தப்படும் பகுதிக்கு நேரடியாகச் சென்று, அங்குள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களையும் மக்களையும் சந்தித்து ஆலோசனைகளைப் பெற வேண்டும். பரந்தூர் விமான நிலையத் திட்டத்தில் நேரில் சென்று மக்களைச் சந்தித்து, முதல்வர் வேண்டாமென முடிவெடுத்தது போல, ஏனைய திட்டங்களிலும் மக்களிடம் ஏன் கருத்து கேட்கப்படவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
கூட்டணி ஆட்சியில் இருந்தாலும், கம்யூனிஸ்ட் கட்சிகள் மக்களின் நலனுக்காகத் தங்கள் ஆளுமையுடன் குரல் கொடுத்து வருகின்றன.
அதேபோன்று, கூட்டணியில் உள்ள அனைத்துக் கட்சிகளும் மக்களுக்காகத் தைரியமாகத் குரல் கொடுக்க வேண்டும். மேலும், காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர் என்றால் கூட்டணிக் கட்சிகள், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும். அவரை பிரதமராக ஏற்கவில்லை எனில், இந்தக் கூட்டணி தொடர்வதற்கு என்ன வாய்ப்பு இருக்கிறது? தலைவர் ராமசாமி படையாட்சியாரின் இந்தப் பிறந்த நாளில், ராகுல் காந்தியை பிரதமராக ஏற்றுக்கொள்ளும் நேர்மையான நிலையை வலியுறுத்திச் சபதம் ஏற்போம்” என்றார்
அப்போ வேற.. இப்போ வேற.. மேல்மா சிப்காட் நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டு வாபஸ் பெற்ற தவெக அரசு!
September 18, 2026
ஓய்வூதியமே வேண்டாம்.. ரூ.1.01 கோடியை தானம் வழங்கிய உயர்நீதிமன்ற நீதிபதி.. ஓய்வு நாளில் நெகிழ்ச்சி
September 18, 2026
காவிரி விவகாரம்.. கர்நாடக அரசுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அவசர மனு!
September 18, 2026
சிறுவன் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்வதா? உதயநிதி கண்டனம்!
September 18, 2026
சென்னையில் துப்பாக்கி.. கூமாபட்டியில் பெட்ரோல் குண்டு.. பரவி வரும் வன்முறை கலாச்சாரத்தால் அச்சம்!
September 18, 2026
அண்ணா பல்கலைக்கழக மாணவர் டெங்குவால் உயிரிழக்கவில்லை – சுகாதாரத்துறை விளக்கம்!
September 18, 2026
Remedy Honors the Late David Lynch in Control Resonant With Powerful Twin Peaks Quote
September 18, 2026
This Swamp Thing by Alan Moore Hardcover Might Be DC's Most Exciting Release of 2027
September 18, 2026
NASA Invites Media to Albania Artemis Accords Signing Ceremony
September 18, 2026
Astartes II, the Most Anticipated Warhammer 40,000 Animation Ever, Has a New Trailer and Confirmation of Key Details
September 18, 2026
அப்போ வேற.. இப்போ வேற.. மேல்மா சிப்காட் நிலம் எடுக்க அரசாணை வெளியிட்டு வாபஸ் பெற்ற தவெக அரசு!
September 18, 2026
World War Z Sequel Confirms Brad Pitt Return as Conclave's Edward Berger Boards as Director
September 18, 2026