நடந்து முடிந்த சட்டமன்றக் கூட்டத்தொடரின்போது, 110-வது விதியின் கீழ் ரூ.1,200 கோடி மதிப்பில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய தலைமைச் செயலகம் கட்டப்படும் என தமிழக முதல்வர் விஜய் அறிவித்தார்.

இதைத் தொடர்ந்து, புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்காக சென்னை பட்டினப்பாக்கம் லூப் சாலையில் 25 ஏக்கர் நிலம் தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு அப்பகுதியில் வசிக்கும் மீனவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக, பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கு 9 மீனவ கிராமங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

புதிய தலைமைச் செயலகக் கட்டடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், தங்களது படகுகளில் கறுப்புக் கொடிகளைக் கட்டி தவெக அரசின் முயற்சிக்குத் தங்களின் எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளனர்.

மேலும் இந்த விவகாரம் முதல்வர் விஜய்க்கு மிகப்பெரிய அரசியல் சவாலாக மாறியுள்ள நிலையில், 9 கிராமங்களைச் சேர்ந்த பிரதிநிதிகள் நேற்று (செப்.15) பட்டினம்பாக்கத்தில் மாபெரும் ஆலோசனைக் கூட்டத்தையும் நடத்தி இருந்தனர்.

இதில் கலந்துகொண்ட தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் ஜெ.கோசுமணியைத் தொடர்புகொண்டு பேசினோம். நம்மிடம் பேசிய அவர், “1,200 கோடி ரூபாய் செலவில் புதிய தலைமைச் செயலகத்தை பட்டினப்பாக்கத்தில் அமைப்பதற்காகச் சில முயற்சிகளை முதல்வர் விஜய்யின் தவெக அரசு மேற்கொண்டு வருகிறது.

தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் ஜெ.கோசுமணி
தமிழ்நாடு மீனவர் மக்கள் சங்கத் தலைவர் ஜெ.கோசுமணி

வாழ்வாதாரத்தைப் பாதிக்கும்

இது முழுக்க முழுக்க மீனவர்களின் வாழ்வாதாரத்தையும், வாழ்வுரிமையையும், மீன்பிடி உரிமையையும் முற்றிலுமாகப் பாதிக்கக்கூடிய ஒரு திட்டம்.

இப்பகுதி மிகவும் குறுகிய ஒரு பகுதி. இத்திட்டம் அமல்படுத்தப்படும் பட்டினப்பாக்கம் பகுதியின் சர்வே எண்களான 4592 மற்றும் 4593 ஆகியவை முள்ளிக்குப்பம், முள்ளிமா நகர் ஆகிய மீனவ கிராம மக்களின் பட்டா நிலங்களாகும்.

போக்குவரத்து நெரிசல்…

சாந்தோம் ரோடு, லூப் ரோடு ஆகிய இரு குறுகிய சாலைகள் மட்டுமே உள்ள இப்பகுதியில் ஏற்கெனவே 15க்கும் மேற்பட்ட பள்ளிகள் இயங்கி வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவுகிறது.

இந்தச் சூழலில் தலைமைச் செயலகம் அமைந்தால் போக்குவரத்து பாதிப்பு மேலும் தீவிரமடையும். இந்தியாவில் ‘டெக்னாலஜி ஃபிஷிங்’ இல்லாததால், மீனவர்களாகிய நாங்கள் கடலையும் காற்றினுடைய திசையையும் நேரடியாகக் கணித்தே மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

கறுப்புக் கொடி
கறுப்புக் கொடி

கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கிடைக்காது!

கடற்கரையில் தங்கி தொழில் உபகரணங்களை வைத்துப் பராமரித்து வரும் எங்களுக்கு, இப்பகுதியில் தலைமைச் செயலகம் அமைவது வாழ்வாதாரத்தைப் பெருமளவில் பாதிக்கும். மேலும், கடலோர ஒழுங்குமுறை மண்டல விதிகளின்படி இங்கு கட்டுமானப் பணிகளுக்கு அனுமதி கிடைக்காது.

முதலமைச்சருக்குப் புரியவில்லை!

எனவே, அரசு இத்திட்டத்திற்கு மாற்றாக ECR பாதையில் உள்ள திருவிடந்தை அல்லது பனையூர், அக்கரை போன்ற சென்னைக்கு வெளியே உள்ள பகுதிகளைத் தேர்வு செய்யலாம்.

இத்திட்டம் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என அனைவருக்கும் புரிகிறது. ஆனால் முதலமைச்சருக்குப் புரியவில்லை என்றால், அவருக்கு அரசியல் பார்வையோ நிர்வாகப் பார்வையோ உள்ளதா என்ற கேள்வி எழுகிறது.

கறுப்புக் கொடி
கறுப்புக் கொடி

அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும்

நொச்சிக்குப்பம் முதல் சீனிவாசபுரம் வரையிலான பகுதியை ‘மீன்பிடி பாதுகாப்பு மண்டலமாக’ அறிவிக்க வேண்டும் என்றும், புதிய தலைமைச் செயலகத்திற்கான அரசாணையை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோருகிறோம்.

திரும்பப் பெறவில்லை என்றால், 56 மீனவ கிராமங்களை ஒன்றிணைத்து ஜல்லிக்கட்டு போராட்டத்தை விட மிகப்பெரிய அளவிலான வீரியமிக்க போராட்டத்தை முன்னெடுப்போம்” என்றார்.

More in TamilNews
திடீரென ஆடையை கிழித்துக்கொண்ட இளம்பெண்.. டிக்கெட் பரிசோதகருக்கு ஷாக்! ஓடும் ரயிலில் சலசலப்பு! திடீரென ஆடையை கிழித்துக்கொண்ட இளம்பெண்.. டிக்கெட் பரிசோதகருக்கு ஷாக்! ஓடும் ரயிலில் சலசலப்பு! September 20, 2026 "பிரதமர் மோடி மாதிரி மிமிக்ரி.." வெடித்து சிரித்த ராகுல் காந்தி.. காங்கிரஸ்- பாஜக இடையே மோதல்! "பிரதமர் மோடி மாதிரி மிமிக்ரி.." வெடித்து சிரித்த ராகுல் காந்தி.. காங்கிரஸ்- பாஜக இடையே மோதல்! September 20, 2026 பரமக்குடியில் கோலாகலமாக நடக்கும் முப்பெரும் விழா: சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பரிசுகள்! பரமக்குடியில் கோலாகலமாக நடக்கும் முப்பெரும் விழா: சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பரிசுகள்! September 20, 2026 `3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை…' – அமைச்சர் தமிழன் பார்த்திபன் `3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை…' – அமைச்சர் தமிழன் பார்த்திபன் September 20, 2026 "ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? "ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? September 20, 2026 தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: “இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" – கராத்தே தியாகராஜன் கேள்வி தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: “இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" – கராத்தே தியாகராஜன் கேள்வி September 20, 2026

See all 871 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *