பாமக பொதுக்குழு கூட்டம் நேற்று விக்ரவாண்டியில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “இப்போது தான் நம்மைப் பற்றி எல்லோரும் கொஞ்சம் நன்றாக பேசுகிறார்கள். இல்லையென்றால் அய்யோ இவர்களா? சாதி கட்சி என்று ஒரே வார்த்தையில் சொல்லி முடித்துவிடுவார்கள்.

சட்டமன்றத்தில் சௌமியா அன்புமணியும், நம் எம்எல்ஏ-க்களும் ஆக்கப்பூர்வமாக பேசும் கருத்துகள் இப்போது எல்லோருக்கும் சென்றடைகிறது. ஆனால் 30 வருடமாக நாம் பேசிய கருத்துகள் மக்களை சென்றடைய வில்லை. இருப்பினும் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

இப்படி எல்லாம் ஸ்கோர் செய்கிறார்கள் என்று பொறாமைப்படுகிறார்கள். கடந்த வாரம் ஈரோட்டில் நடைபெற்ற ஒரு முக்கியத் திருமண நிகழ்வுக்கு நான் சென்றிருந்தேன்.

அப்போது அங்கு எனது பழைய பள்ளி நண்பர்களும், அவர்களது மனைவிகளும் திரண்டு வந்திருந்தார்கள்.

அவர்கள் அனைவரும் என்னிடம் வந்து, சௌமியா அன்புமணி தற்பொழுது சட்டமன்றத்திற்குள் தமிழ்நாட்டு மக்களின் நல்வாழ்விற்காகவும், கல்வி மற்றும் உரிமைகளுக்காகவும் எத்தனையோ ஆக்கப்பூர்வமான நல்ல விஷயங்களைப் பேசி வருகிறார்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணி

அவரது இந்த மாஸ் பேச்சுகளைப் பார்த்து நாங்கள் அனைவரும் அவருக்குப் பெரிய ரசிகர்களாக மாறிவிட்டோம், எனவே சௌமியா அன்புமணிக்குத் தமிழ்நாட்டில் ஒரு புதிய ‘ரசிகர் மன்றம்’ (Fans Club) ஆரம்பிக்கப் போகிறோம் என்று ஆசையோடு கூறினார்கள்” என்று மேடையில் பேசியிருக்கிறார்.

More in TamilNews
“இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” – உதயநிதி “இந்தி வேண்டாம் என்பதால் தமிழ்நாடு தனிநாடு ஆகவில்லை; தனித்தன்மையுடன் இயங்குகிறது” – உதயநிதி September 18, 2026 'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…' – முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன? 'உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்…' – முதல்வர் விஜய்யின் இடைத்தேர்தல் பிரசார பிளான் என்ன? September 18, 2026 “விலைவாசி உயர்வுக்கு வழிவகுக்கும் UPI கட்டணம்" – நடைமுறைச் சிக்கல்கள் என்ன?| ஓர் அலசல் September 18, 2026 மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு – வேட்பாளர் திடீர் கைது! மேற்கு வங்கம்: நந்திகிராம் தொகுதியில் தேர்தல்; காங்கிரஸுக்கு மம்தா ஆதரவு – வேட்பாளர் திடீர் கைது! September 18, 2026 ”அது AI போட்டோ; போலி புகார்; என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது" – கருப்பு முருகானந்தம்! ”அது AI போட்டோ; போலி புகார்; என் மீதான நடவடிக்கையை ஏற்க முடியாது" – கருப்பு முருகானந்தம்! September 18, 2026 குழந்தை வடிவில் அருளும் அன்னை….ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியின் மகிமை! குழந்தை வடிவில் அருளும் அன்னை….ஸ்ரீபாலா திரிபுரசுந்தரியின் மகிமை! September 18, 2026

See all 874 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *