சென்னை விமான நிலையத்தின் நிர்வாகத்தை மாற்றக் கோரி முதலமைச்சர் விஜய் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியதாக வெளியான தகவல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. AAI நிர்வாகத்துக்கு பதிலாக புதிய ஆபரேட்டரை நியமிக்கக் கோரப்பட்ட நிலையில், சென்னை விமான நிலையம் தனியார்மயமாக்கப்படுகிறதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன் தன் எக்ஸ் பக்கத்தில், “இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (Airport Authority of India) கட்டுப்பாட்டில் உள்ள சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை வேறொரு நிறுவனத்திடமோ அல்லது தனியாரிடமோ மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை விமான நிலையம்
சென்னை விமான நிலையம்

ஏற்கனவே, பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த அரசுகள், அந்தந்த மாநிலங்களில் உள்ள விமான நிலையங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், தமிழ்நாடு அரசு தாமாக முன்வந்து விமான நிலையத்தைத் தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசைக் கோருவது கடும் கண்டனத்திற்குரியது.

சென்னை விமான நிலையத்தின் செயல்பாடுகள், உட்கட்டமைப்பு மற்றும் பயணிகள் வசதிகளில் குறைபாடுகள் இருக்கும் பட்சத்தில், அதனை மத்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று தீர்வு காண வேண்டுமே தவிர, பொதுத்துறை நிறுவனத்தைத் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும் எனக் கூறுவது ஏற்புடையதல்ல.

பொதுமக்களுக்குப் பாதுகாப்பான, தரமான மற்றும் குறைந்த செலவில் சேவைகளை வழங்கும் பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார் வசம் ஒப்படைக்கும் பட்சத்தில், லாபமே முதன்மை நோக்கமாக மாறும்.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

மேலும், பயணிகள் மற்றும் விமான நிலைய ஊழியர்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்ற விமர்சனமும் பரவலாக எழத் தொடங்கியுள்ளது. எனவே, சென்னை விமான நிலையத்தைத் தனியார் வசம் ஒப்படைக்கக் கோரி மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு. நரேந்திர மோடி அவர்களுக்கு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம் எழுதியிருப்பதாக வெளியாகியிருக்கும் செய்திகளில் உண்மை இருக்கும் பட்சத்தில், அத்தகைய முடிவை உடனடியாகக் கைவிட வேண்டும் என வலியுறுத்துகிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

More in TamilNews
திடீரென ஆடையை கிழித்துக்கொண்ட இளம்பெண்.. டிக்கெட் பரிசோதகருக்கு ஷாக்! ஓடும் ரயிலில் சலசலப்பு! திடீரென ஆடையை கிழித்துக்கொண்ட இளம்பெண்.. டிக்கெட் பரிசோதகருக்கு ஷாக்! ஓடும் ரயிலில் சலசலப்பு! September 20, 2026 "பிரதமர் மோடி மாதிரி மிமிக்ரி.." வெடித்து சிரித்த ராகுல் காந்தி.. காங்கிரஸ்- பாஜக இடையே மோதல்! "பிரதமர் மோடி மாதிரி மிமிக்ரி.." வெடித்து சிரித்த ராகுல் காந்தி.. காங்கிரஸ்- பாஜக இடையே மோதல்! September 20, 2026 பரமக்குடியில் கோலாகலமாக நடக்கும் முப்பெரும் விழா: சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பரிசுகள்! பரமக்குடியில் கோலாகலமாக நடக்கும் முப்பெரும் விழா: சிறந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்குப் பரிசுகள்! September 20, 2026 `3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை…' – அமைச்சர் தமிழன் பார்த்திபன் `3 மணிக்கே எழுந்து ஆய்வுக்குச் செல்கிறேன்; சின்னச்சின்ன பிரச்னைகளை…' – அமைச்சர் தமிழன் பார்த்திபன் September 20, 2026 "ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? "ஆதவ் அர்ஜூனா ஒரு வேடந்தாங்கல் பறவை" – எடப்பாடி பழனிசாமி சொல்வது என்ன? September 20, 2026 தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: “இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" – கராத்தே தியாகராஜன் கேள்வி தவெக நட்சத்திரப் பேச்சாளர் பட்டியல்: “இடைத்தேர்தல் நியாயமாக நடைபெறுமா?" – கராத்தே தியாகராஜன் கேள்வி September 20, 2026

See all 847 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *