அமெரிக்காவில் அந்த நாட்டு அதிபர் ட்ரம்ப்பை அதிகம் விமர்சிக்கும் செய்தி நிறுவனங்களில் முக்கியமானவை – CNN, MS NOW மற்றும் Politico.
இதை ட்ரம்ப் விரும்பவில்லை. இதனால், இந்த மூன்று செய்தி நிறுவனங்களையும் ‘போலிச் செய்திகளைப் பரப்புகின்றன’ என்று வெள்ளை மாளிகைக்கு உள்ளே வரக்கூடாது என்று தடை செய்தார் ட்ரம்ப்.
இந்த அறிவிப்பு கடந்த வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 18) வெளியானது.
போலிச் செய்திகளைப் பரப்பினால் (அதாவது ட்ரம்ப்பை விமர்சிக்கும் செய்திகளை வெளியிட்டால்) இன்னும் பல செய்தி நிறுவனங்கள் வெள்ளை மாளிகையில் தடை செய்யப்படும் என்று வேறு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், இந்த மூன்று செய்தி நிறுவனங்களுக்கும் ஆதரவளிக்கும் விதமாக, அமெரிக்காவில் இருக்கும் முக்கிய செய்தித் தொலைகாட்சி நிறுவனங்கள் நேற்றைய வெள்ளை மாளிகை நிகழ்ச்சிகளை முற்றிலும் புறக்கணித்துவிட்டன.
எந்தச் செய்தி நிறுவனமும் நேற்று வெள்ளை மாளிகையில் நடந்த எந்த நிகழ்ச்சியையும் ஒளிபரப்பவில்லை.
அமெரிக்காவில் வெள்ளை மாளிகை ரிப்போர்ட்டிங் என்பது ‘White House TV pool’ என்ற முறையில் நடக்கும்.
White House TV pool என்றால்…
ABC, CBS, CNN, Fox, NBC ஆகிய செய்தி நிறுவனங்கள் அமெரிக்காவின் பெரிய தொலைகாட்சிச் செய்தி நிறுவனங்கள். இதில் ஒவ்வொரு நாளுக்கும் ஒவ்வொரு செய்தி நிறுவனத்திற்கு வெள்ளை மாளிகையின் கவரேஜுக்கு வாய்ப்பு கிடைக்கும்.
அன்று அந்தவொரு செய்தி நிறுவனம் மட்டும் வெள்ளை மாளிகைக்குச் சென்றால் போதும்.
இந்த முறை எதற்கென்றால், அனைத்துச் செய்தி நிறுவனங்களும் சென்றால், அதற்கு ஆகும் செலவுகள் அதிகம்… கூட்டமும் அதிகம் கூடும்.
அதற்குப் பதிலாக ஒரு நாளில் ஒரே செய்தி நிறுவனம் சென்று வெள்ளை மாளிகை கவரேஜ் செய்து பிற செய்தி நிறுவனங்களுக்குப் பகிரும்.
இதற்காகும் செலவுகளை மொத்த நிறுவனங்களும் பிரித்துக்கொள்ளும்.

இந்த முறையில் நேற்று (செப்டம்பர் 21) CNN செய்தி நிறுவனத்தின் முறை.
ட்ரம்ப் அந்தச் செய்தி நிறுவனத்தைத் தடை செய்ததால், அந்த நிறுவனம் போக முடியாது.
ஆனால், அதற்குப் பதிலாக வேறு செய்தி நிறுவனம் சென்றிருக்க வேண்டும். ஆனால், யாரும் செல்லவில்லை.
இது குறித்து ஐந்து செய்தி நிறுவனங்களும் இணைந்து “அரசாங்கத்தைப் பற்றிய துல்லியமான, சுதந்திரமான தகவல்களைப் பெறுவதில் மக்களுக்கு மிக முக்கியமான உரிமை உள்ளது.
ஒரு செய்தி நிறுவனம் தரும் செய்தி பிடிக்கவில்லை என்று எந்த நிர்வாகமும் குறிப்பிட்ட செய்தி நிறுவனத்தின் மீது தடைகளையோ கட்டுப்பாடுகளையோ விதிக்கக்கூடாது” என்று அறிக்கை வெளியிட்டுள்ளன.
தடை செய்யப்பட்ட மூன்று நிறுவனங்களும் நீதிமன்றத்திலும் வழக்குத் தொடர்ந்துள்ளன.
வெள்ளை மாளிகைக்கு நெருக்கடி
எந்தவொரு செய்தி நிறுவனமும் வெள்ளை மாளிகை கவரேஜுக்கு வராதது வெள்ளை மாளிகைக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, வெள்ளை மாளிகை யூடியூப்பில் ‘ட்ரம்ப் டிவி’ என்கிற செய்திச் சேனலைத் தொடங்கியுள்ளது.
இந்தச் சேனலில் 24*7 வெள்ளை மாளிகைச் செய்திகளைக் காணலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் என்ன சொல்கிறார்?
மூன்று செய்தி நிறுவனங்களின் வழக்கு குறித்து ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைத்தளப் பக்கத்தில், “இந்த வழக்கிற்கு எதிராக மேல்முறையீடு செய்வோம்.
எதிர்மறையாக மட்டுமே எழுதும்… அடையாளம் தெரியாத சோர்ஸ்களை வைத்துக்கொண்டு பொய்யான மற்றும் அவதூறான செய்திகளை எழுதி நமது தேசியப் பாதுகாப்பை மீறும் ‘ஃபேக் நியூஸ்’ நபர்களுக்கும் பத்திரிகைகளுக்கும் உலகின் மிக முக்கியமான அலுவலகமான ஓவல் அலுவலகத்திற்குள் நுழைய அனுமதி அளிக்கப்படக் கூடாது.
என்னைப் பற்றியோ அல்லது எனக்கு தொடர்புடைய எது பற்றியோ வெளிவரும் அனைத்துச் செய்திகளுமே எதிர்மறையானவை, தவறானவை, மேலும் பல சந்தர்ப்பங்களில் நமது நாட்டிற்கே ஆபத்தானவை!
என்னுடைய சாதனைகள் எவ்வளவு மகத்தானதாக இருந்தாலும், அவர்கள் அதைச் சிறுமைப்படுத்தி மட்டம் தட்டுகிறார்கள்.
நமது நாட்டின் வெற்றிக்கும் பாதுகாப்பிற்கும் போராட வேண்டிய கடமை எனக்கு உள்ளது. போலிச் செய்திகள் ஜனநாயகத்திற்கு ஒரு மிகப்பெரிய அச்சுறுத்தல்.
அமெரிக்கா தொடர்ந்து வளர்வதை உறுதிசெய்யத் தேவையான அனைத்தையும் நான் செய்வேன்” என்று பதிவிட்டுள்ளார்.
'ஆர்டர் செய்யலாம், பொருள் வராது' – திரில்லுக்காக இந்தியர்களிடையே உருவாகும் புதிய ஷாப்பிங் போக்கு
September 24, 2026
'தீ சூழ்ந்த போது 12 குழந்தைகளை காப்பாற்றினேன்; ஆனால் என் குழந்தையை இழந்தேன்'
September 24, 2026
'10 மாதங்களில் 14 ஆட்சேபனை': தேர்தல் ஆணைய செயல்பாடு குறித்த புலனாய்வு அறிக்கை தகவலால் கொந்தளிப்பு
September 24, 2026
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட தடை வேண்டும்! முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு!
September 24, 2026
வசதியான குடும்பத்தில் பிறந்து பின் அனைத்தையும் இழந்த ஷி ஜின்பிங் சீனாவின் சக்திவாய்ந்த தலைவரானது எப்படி?
September 24, 2026
ஹைதராபாத்தில் சிரிச்சிட்டே பேசிய ஐடி ஊழியர் திஷா.. அந்தரங்க விஷயத்தை பேசிய வக்கீல்.. என்னாது 5 கோடி?
September 24, 2026
பிச்சிக்குது ஆர்டர்.. 50 சதவீத ஆஃபரில் 43 இன்ச் டிவி.. QLED டிஸ்பிளே.. 24W சவுண்ட் அவுட்புட்.. எந்த மாடல்?
September 24, 2026
Leicestershire will appeal pitch penalty in bid to avoid relegation
September 24, 2026
சியோமி அறிமுகம் செய்த புதிய 4கே டிவிகள்.. 65 இன்ச் முதல் 98 இன்ச் வரை.. எந்த மாடல்? என்ன விலை?
September 24, 2026
Luke Williams takes over from Lisa Keightley as Mumbai Indians' head coach in WPL
September 24, 2026
Pavandeep, Amir silence Hong Kong in Malaysia's comprehensive Group B victory
September 24, 2026
Australia opt to bowl, Edwards debuts, Green, Starc, Hazlewood return
September 24, 2026