தமிழ்நாட்டில் மதுராந்தகம், தாராபுரம் ஆகிய இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6 – ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரையில் அரசியல் கட்சிகள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றன. தாராபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகாவிற்கு ஆதரவாக அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வாக்கு கேட்டு பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். முதலமைச்சர் விஜய், முன்னாள் முதலமைச்சர்கள் ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தாராபுரத்தில் தேர்தல் பரப்புரையில் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில், தாராபுரம் தனி தொகுதியில் அ.தி.மு.க வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற சத்தியபாமா, தன்னுடைய எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு த.வெ.க- வில் இணைந்தார். தற்போது த.வெ.க கட்சி வேட்பாளராக மீண்டும் அதே தொகுதியில் களம் இறங்கியிருக்கிறார். இந்த விவகாரம் அ.தி.மு.க நிர்வாகிகள், தொண்டர்கள் மட்டுமன்றி த.வெ.க மற்றும் விவசாய அமைப்புகள் மத்தியிலும் கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவிற்கு எதிராகப் பிரசாரக் கூட்டங்களில் சிலர் கோஷங்களை எழுப்பி வருகின்றனர். கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனைத் தொடர்ந்து சத்தியபாமா பிரசாரத்துக்கு 50 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வாக்கு சேகரிக்க அவர் செல்லும் இடங்களுக்கெல்லாம் காவல்துறையினர் பின்தொடர்ந்து சென்று பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இது தொடர்பான வீடியோக்கள் வைரலாகி வருகின்றன.
'ஆர்டர் செய்யலாம், பொருள் வராது' – திரில்லுக்காக இந்தியர்களிடையே உருவாகும் புதிய ஷாப்பிங் போக்கு
September 24, 2026
'தீ சூழ்ந்த போது 12 குழந்தைகளை காப்பாற்றினேன்; ஆனால் என் குழந்தையை இழந்தேன்'
September 24, 2026
'10 மாதங்களில் 14 ஆட்சேபனை': தேர்தல் ஆணைய செயல்பாடு குறித்த புலனாய்வு அறிக்கை தகவலால் கொந்தளிப்பு
September 24, 2026
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்து மீண்டும் போட்டியிட தடை வேண்டும்! முக்கிய வழக்கில் இன்று தீர்ப்பு!
September 24, 2026
வசதியான குடும்பத்தில் பிறந்து பின் அனைத்தையும் இழந்த ஷி ஜின்பிங் சீனாவின் சக்திவாய்ந்த தலைவரானது எப்படி?
September 24, 2026
ஹைதராபாத்தில் சிரிச்சிட்டே பேசிய ஐடி ஊழியர் திஷா.. அந்தரங்க விஷயத்தை பேசிய வக்கீல்.. என்னாது 5 கோடி?
September 24, 2026
Rogue OpenAI agent 'infiltrated' Australian government website in world first
September 24, 2026
இந்திய அணி பேட்டிங் மோசமாக இருக்கிறது.. பவுலிங் பிட்சில் சுத்தமாக ஆட தெரியல.. வசீம் ஜாபர்
September 24, 2026
“நன்றி எலி.. இப்படிக்கு அஞ்சலி.. அவரே ஜோக் சொல்லி, அவரே சிரிச்சுக்கிட்டாரே.. வேற லெவல்!”
September 24, 2026
'ஆர்டர் செய்யலாம், பொருள் வராது' – திரில்லுக்காக இந்தியர்களிடையே உருவாகும் புதிய ஷாப்பிங் போக்கு
September 24, 2026
எம்ஜி எலெக்ட்ரிக் கார்களின் விலை குறையுமா? PLI திட்டத்தில் புதிய வாய்ப்பு
September 24, 2026
ஜேசன் சஞ்சய் பட விழாவில் சங்கீதா பங்கேற்காத காரணம்.. விஜய்யுடன்மீண்டும் சேர்வாரா?.. பிரபலம் ஓபன்
September 24, 2026