கேரள உயர் நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, அமிகஸ் கியூரி நீதிபதி கே.டி. சங்கரன் தலைமையில் சபரிமலையில் உள்ள திருவாபரணங்கள் மற்றும் விலைமதிப்பற்ற காணிக்கைப் பொருள்களின் இருப்பு தொடர்பான கணக்கெடுப்பு மற்றும் விரிவான தணிக்கைப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆய்வின் போது, சன்னிதான ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த 55.75 பவுன் எடை கொண்ட உண்மையான தங்கக் கிரீடம் காணாமல் போயிருப்பதும், அதற்குப் பதிலாக முலாம் பூசப்பட்ட ஒரு போலி கிரீடம் மாற்றி வைக்கப்பட்டிருப்பதும் தெரியவந்ததாகத் தகவல்கள் வெளியாகின. ​மாயமானதாகக் கூறப்படும் இந்தத் தங்கக் கிரீடம், கடந்த 2012-ம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த பக்தர் ஒருவரால் சபரிமலை ஐயப்ப சுவாமிக்குக் காணிக்கையாகச் சமர்ப்பிக்கப்பட்டதாகும். சன்னிதானத்திலிருந்து ஆறன்முளாவில் உள்ள பிரதான ஸ்ட்ராங் ரூமிற்கு முறைப்படி மாற்றப்பட வேண்டிய இந்தக் கிரீடம், முறையான சி.சி.டி.வி கண்காணிப்பு இல்லாத இடத்தில் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், ஆறன்முளா தேவஸ்வம் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த மற்றொரு 4 பவுன் தங்க மாலையும் மாயமாகி இருப்பதாகக் கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளதாகக் கூறப்பட்டது, பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

இந்நிலையில், இப்புகார்கள் மற்றும் சலசலப்புகளுக்கு விளக்கம் அளித்துள்ள திருவிதாங்கூர் தேவஸ்வம் போர்டு நிர்வாகம், ஐயப்ப சுவாமிக்குப் பக்தர்கள் சமர்ப்பிக்கும் காணிக்கைகள், நகைகள் மற்றும் திருவாபரணங்கள் அனைத்தும் முறையான பதிவேட்டுப் பராமரிப்புடன் மிகுந்த பாதுகாப்புடன் கையாளப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளது. நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடைபெறும் தணிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கப்பட்டு வருவதாகவும், ஆபரணங்கள் விவகாரத்தில் ஏதேனும் முறைகேடுகளோ, விதிமீறல்களோ அல்லது அலட்சியமோ நடந்திருப்பது கண்டறியப்பட்டால் சம்பந்தப்பட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி கடுமையான குற்றவியல் மற்றும் துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கைகள் பாயும் என்றும் தேவஸ்வம் போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்
சபரிமலை ஐயப்ப சுவாமி கோயில்

மேலும், கார்த்திகை மாதம் தொடங்கும் மண்டல கால, மகரவிளக்கு யாத்திரையை முன்னிட்டு சன்னிதானத்தில் பக்தர்களுக்கான முன்னேற்பாடுகள் முழுவீச்சில் முடுக்கிவிடப்பட்டுள்ளன. நிலக்கல், பம்பை முதல் சன்னிதானம் வரை பக்தர்கள் நெரிசலின்றி எளிதாகத் தரிசனம் செய்வதற்கான பிரத்யேக வரிசை மேலாண்மைத் திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன. நடைப்பந்தல் விரிவாக்கம், தடையில்லா பாதுகாக்கப்பட்ட குடிநீர், கூடுதல் கழிப்பறை வசதிகள் மற்றும் அவசர மருத்துவ முகாம்கள் தயார்நிலையில் வைக்கப்படுகின்றன. அதேபோல், ஆன்லைன் முன்பதிவுக்கான வெர்ச்சுவல் கியூ முறையை மேலும் செம்மைப்படுத்தவும், சன்னிதானம் மற்றும் அதைச் சுற்றியுள்ள வனப்பகுதிகளில் கூடுதல் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி பலத்த போலீஸ் பாதுகாப்பை உறுதி செய்யவும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருவதாகவும் திருவிதாங்கூர் தேவஸ்வம்போர்டு தலைவர் கே.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

More in TamilNews
CJP நிர்வாகிகள் திடீர் கைது.. கொந்தளித்த அபிஜித் தீப்கே! அசாமில் போராட்டம் வெடிக்கும் என வார்னிங் CJP நிர்வாகிகள் திடீர் கைது.. கொந்தளித்த அபிஜித் தீப்கே! அசாமில் போராட்டம் வெடிக்கும் என வார்னிங் September 27, 2026 கள்ளக்காதல் டவுட்.. ஊரையே மிரட்டிய பெண் ரவுடியை கொன்று 15 மாதம் நாடகம்! கணவன் – மகன் சைலன்ட் பிளான் கள்ளக்காதல் டவுட்.. ஊரையே மிரட்டிய பெண் ரவுடியை கொன்று 15 மாதம் நாடகம்! கணவன் – மகன் சைலன்ட் பிளான் September 27, 2026 "அம்மா.. என்னை கொன்னுடுவாங்க.." நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்! "அம்மா.. என்னை கொன்னுடுவாங்க.." நள்ளிரவில் அழுது கொண்டே போன் கால்.. மறுநாள் காலை மாணவி மர்ம மரணம்! September 27, 2026 "வன்முறை வெறியாட்டம்!" ரத்த வெள்ளத்தில் சரிந்த மக்கள்.. துப்பாக்கி சூட்டில் 27 பேர் துடிதுடித்து பலி "வன்முறை வெறியாட்டம்!" ரத்த வெள்ளத்தில் சரிந்த மக்கள்.. துப்பாக்கி சூட்டில் 27 பேர் துடிதுடித்து பலி September 27, 2026 சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த தவெக MLA.. திரும்பி பார்த்துவிட்டு நிற்காமல் சென்ற புஸ்ஸி ஆனந்த்! சைக்கிளில் இருந்து தடுமாறி விழுந்த தவெக MLA.. திரும்பி பார்த்துவிட்டு நிற்காமல் சென்ற புஸ்ஸி ஆனந்த்! September 27, 2026 வங்கதேசத்தில் மோசமான நிலைமை.. 4 ஆண்டுக்கு பின் கோதுமை கொடுத்து காப்பாற்றும் இந்தியா.. பின்னணி வங்கதேசத்தில் மோசமான நிலைமை.. 4 ஆண்டுக்கு பின் கோதுமை கொடுத்து காப்பாற்றும் இந்தியா.. பின்னணி September 27, 2026

See all 663 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *