பா.ஜ.க முன்னாள் தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை அரசு மருத்துவமனையில் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் வழங்கும்போது மின்வெட்டு ஏற்பட்டு மருத்துவமனை அதிகாரிகள் மொபைல் டார்ச் லைட் அடித்து மோதிரங்களை வழங்கிய வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் எந்த அளவிற்கு மின்வெட்டு நிலைமை மோசமாகி இருக்கிறது என்பதற்கு இந்த ஒரு சம்பவமே சாட்சி. மக்கள் நலத்திட்டத்தின் ஒரு துவக்கவிழாவானது அதுவும் உயிர் காக்கும் அரசு மருத்துவமனையில் இருளில் நடந்திருப்பது, த.வெ.க அரசு ஆட்சிப் பொறுப்பேற்ற 4 மாதங்களிலேயே தமிழகத்தை இருண்ட மாநிலமாக மாற்றி விட்டது என்பதற்கான அடையாளமே.

இருட்டில் நடந்த நிகழ்ச்சி
இருட்டில் நடந்த நிகழ்ச்சி

ஆனால் இதற்கெல்லாம் பதில் சொல்ல வேண்டிய மின்சாரத்துறை அமைச்சரோ சமாளிக்கும் விதமாக அற்ப காரணங்களைக் கூறி வருவது ஏற்றுக் கொள்ள முடியாதது.

அண்மையில் விகடன் இதழில் வெளியான தகவலின் படி, தனியாரிடம் மின்சாரம் கொள்முதல் செய்வதற்காக தூத்துக்குடி, வடசென்னை, மேட்டூர் போன்ற அரசுக்குச் சொந்தமான அனல்மின்நிலையங்களில் மின் உற்பத்தியைக் குறைக்கச் சொல்லியும், தனியாரை ஊக்குவிப்பதற்காக இதுபோன்ற மின்வெட்டு செயற்கையாக ஏற்படுத்தப்படுகிறது என்ற தகவலும் வெளியாகி இருப்பது த.வெ.க அரசு மக்களுக்கான அரசா அல்லது தனியாருக்கான அரசா என்ற கேள்வியையும் எழுப்புகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More in TamilNews
தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album தாராபுரத்தில் நாளை விஜய் தேர்தல் பிரசாரம்; பிரமாண்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரம் | Photo Album September 29, 2026 `படத்துல மீனவனா வேடம் போட்டீங்களே விஜய்?' – கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் Spot Report `படத்துல மீனவனா வேடம் போட்டீங்களே விஜய்?' – கொந்தளிக்கும் பட்டினப்பாக்கம் மீனவர்கள் Spot Report September 29, 2026 நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து – உயர்நீதிமன்றம் நெல்லை கவின் ஆணவப் படுகொலை: சுர்ஜித்தின் பெற்றோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து – உயர்நீதிமன்றம் September 29, 2026 "நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம் "நான் அவர்களை குறிப்பிடவில்லை, மோகன் குமாரமங்கலம் எனக்கு தோழர்.!"- சர்ச்சைக்கு ராஜ்மோகன் விளக்கம் September 29, 2026 “அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா “அதிமுக-வை எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன்தான் கட்டுப்படுத்துகிறார்" – அமைச்சர் ஆதவ் அர்ஜுனா September 29, 2026 "2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" – உதயநிதி "2 நாள்களில் 9 கொலைகள்; முதல்வர் 'மிக்சர்' சாப்பிடாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட வேண்டும்" – உதயநிதி September 29, 2026

See all 725 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *