தவெக அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று செய்தியாளர் சந்திப்பின்போது, “மறைந்த தலைவர் விஜயகாந்த் தனது அரசியல் வாழ்நாள் முழுவதும் எந்தத் திமுகவை மிகக் கடுமையாக எதிர்த்துப் போராடி தூக்கி எறிந்தாரோ, அதே திமுகவுடன் இன்று தேமுதிக கூட்டணி அமைத்துள்ளது. இந்தச் சுயநல அரசியல் முடிவு மறைந்த விஜயகாந்தின் ஆன்மாவால் கூட மன்னிக்க முடியாத ஒன்றாகும். எனவே, விஜயகாந்த் அன்று திமுகவிற்கு எதிராக முன்வைத்த உண்மையான அரசியல் பாதையையே தவெக மக்களிடம் கொண்டு சேர்க்கும்” என்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக தே.மு.தி.க தலைவரும், எம்.எல்.ஏ-வுமான பிரேமலதா விஜயகாந்த் தாராபுரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.

ஆதவ் அர்ஜுனா
ஆதவ் அர்ஜுனா

அப்போது, “கூட்டணி தர்மத்தை மதித்தும், முதல்வர் அண்ணன் ஸ்டாலின் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும், வேட்பாளர் நேரில் வந்து பிரசாரத்திற்கு அழைப்பு விடுத்ததன் பேரிலும் நான் தாராபுரம் வந்திருக்கிறேன். நிச்சயமாக திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றியைப் பெறும். பெண் வேட்பாளர்கள் நிறைந்த களத்தில், பெண்களைப் பற்றி யாராவது தரைக்குறைவாகவோ அல்லது தவறாகவோ பேசுவதை எந்தக் காலத்திலும் அனுமதிக்கவே முடியாது. பெண்களைப் பற்றித் தரைக்குறைவாகப் பேசுபவர்களுக்கு என்னுடைய கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

‘கேப்டனின் ஆன்மா’ பற்றிப் பேசுபவர்கள், முதன்முதலில் கேப்டனை நேரில் பார்த்திருக்கிறார்களா? கேப்டனின் ஆன்மா என்பது இங்கே என்னைச் சுற்றி இருக்கும் எங்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடம் தான் உள்ளது. கேப்டன் குடும்பத்திற்கும் கட்சிக்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் கேப்டன் ஆன்மாவைப் பற்றிப் பேச எந்த அருகதையும் இல்லை. தம்பி ஆதவ் அர்ஜுனா ஏதோ வாய்க்கு வந்ததையெல்லாம் பேசக்கூடாது. இனிமேல் இதைப் பற்றிப் பேசுவதை தயவுசெய்து நிறுத்திக் கொள்ள வேண்டும். தேர்தல் முறையைப் பொறுத்தவரை, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் (EVM) நிறைய குளறுபடிகள் நடப்பதாக அதிகாரபூர்வமாகவும் ஆராய்ச்சி பூர்வமாகவும் நிரூபிக்கப்பட்டு வருகிறது.

பிரேமலதா விஜயகாந்த்
பிரேமலதா விஜயகாந்த்

எனவே, பழைய வாக்குச்சீட்டு முறைக்கு மீண்டும் மாற வேண்டும் என்பதே தேமுதிகவின் தெளிவான நிலைப்பாடு. இப்போதைய EVM பெட்டிகளில் தவறுகள் நடப்பது உண்மை. தமிழ்நாட்டில் பேருந்துக் கட்டணங்கள் பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன. இந்த விலைவாசி உயர்வு மற்றும் பேருந்துக் கட்டண உயர்வை அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மேலும், மின்வெட்டு, சட்டம் ஒழுங்கு பிரச்னை, டாஸ்மாக் மற்றும் பாலியல் வன்கொடுமைகள் எனப் பல பிரச்னைகள் நிலவுகின்றன. அரசு அளித்த வாக்குறுதிகளை இன்னும் நிறைவேற்றவில்லை என்பதே மக்களின் கருத்தாக உள்ளது. மக்களுக்கு வாக்குறுதியளித்த ரூ.2,500 தொகையை விரைவில் வழங்க வேண்டும்.” என்றார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

See all 837 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *