தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் ம.தி.மு.க வடக்கு மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில், கட்சியின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ கலந்து கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தாராபுரத்தில் தொகுதி மக்களுடன் கலந்து பேசும்போது அங்கு நடைபெறும் இடைத்தேர்தலில் த.வெ.க.,வுக்கும், அ.தி.மு.க.,வுக்கும் இடையில்தான் போட்டி என்று சொன்னார்கள்.
தி.மு.க., லிஸ்ட்டிலேயே இல்லை. தி.மு.க., மீது மக்களுக்கு அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் த.வெ.க., அமோக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.

தி.மு.க., டெபாசிட் இழந்தால்கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பிரசாரத்தின்போது தி.மு.கவுக்கு வாக்களிக்கவில்லை என்றாலும் அதிமுகவுக்கு வாக்களியுங்கள். த.வெ.க.,வுக்கும், ஓட்டு போட்டு விடாதீர்கள் என்றுதான் தி.மு.க.,வினர் பிரசாரம் செய்து வருகிறார்கள்.
தி.மு.கவிற்கு மக்கள் ஓட்டு போடுவார்கள் என்ற நம்பிக்கை அவர்களுக்கே இல்லை. அதனால்தான் அவ்வாறு பிரசாரம் செய்கிறார்கள். இந்த இடைத்தேர்தல் திணிக்கப்பட்ட இடைத்தேர்தல் என்ற பிரச்சாரத்தை, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வினரும் மக்கள் முன் வலுவாக வைக்கின்றனர். ஆனால், த.வெ.க., ஆட்சி அமைக்கக் கூடாது.
முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய் அமர்ந்து விடக்கூடாது என்பதற்காக அ.தி.மு.க, தி.மு.க., கூட்டணி ஆட்சி அமைக்க முயன்ற காரணத்தால்தான் அ.தி.மு.க.,வின் முன்னணித் தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் வெளியேறி த.வெ.கவில் இணைந்துள்ளனர். அ.தி.மு.க., மூலம் பா.ஜ.க., தமிழகத்திற்குள் நுழைந்து விடுவார்கள் என்கிற ஒரே காரணத்திற்காகத்தான், காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, போன்ற பொதுவுடைமை இயக்கங்கள் தி.மு.க., கூட்டணியில் பயணித்தோம்.
ஆனால், தேர்தல் முடிந்து அதி.மு.க., ஆட்சி அமைக்க தி.மு.க., ஆதரவு கொடுக்க முயன்றது இரு கட்சியினரிடையேயும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த உடன்பாடை மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஒப்புக் கொள்வார்களா?

அந்த ஒற்றை காரணத்திற்காத்தான் இன்றைக்கு அ.தி.மு.க.வினர் த.வெ.க.,வில் இணைகிறார்கள். ம.தி.மு.கவை அழிக்க வேண்டும் என்று 33 ஆண்டுகளாக தி.மு.க முயற்சி செய்கிறது. நாங்கள் எதிரணியில் இருக்கும்போதும் சரி, அவர்களுடன் பயணிக்கும்போதும் சரி எங்களை அழிப்பதற்கு அத்துணை முயற்சிகளும் எடுத்தார்கள். பா.ஜ.கவில் அண்ணாமலை இணைந்ததும் அந்தக்கட்சி வேகமாக வளரக்கூடிய சூழ்நிலை இருந்தது. திராவிட இயக்கங்களுக்கு நாம் பாதுகாவலராக இருக்க வேண்டும், தி.மு.க., உள்ளிட்ட சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற கருத்தோடு திமுக., கூட்டணியில் இருந்தோம்.
எங்களை தி.மு.க., எப்படியெல்லாம் அழிக்க நினைத்தார்கள் என்பதை இனிவரும் காலங்களில் நிச்சயம் கூறுவேன். ம.தி.மு.கவை யாராலும் அழிக்க முடியாது. எங்களது பயணம் தொடரும். இந்த பயணத்தை யாராலும் தடுக்கவும் முடியாது. ”லஞ்ச லாவண்யம் இல்லாத நிர்வாகம் கொடுப்போம்” என திமுகவினர் பிரசாரம் செய்தனர். ஆனால் அதை செய்து காண்பித்தது முதல்வர் விஜய். இன்று பல்வேறு அரசு அலுவலகங்களில் லஞ்ச லாவண்யம் இல்லை.

ஆனால், முந்தைய தி.மு.க., ஆட்சியில் லட்சக்கணக்கான கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளது. அதனால்தான் கடந்த தேர்தலில் ரூ.8 ஆயிரம் கோடியை தி.மு.க செலவு செய்தது. அதற்கு அடுத்தபடியாக அ.தி.மு.க., ரூ.4 ஆயிரம் கோடியை செலவு செய்துள்ளது. இந்த ஆட்சி கவிழ்ந்து விடாதா, பிரச்னைகள் எதுவும் வராதா என்பதை தி.மு.க., அ.தி.மு.க.வில் லஞ்ச லாவண்யத்தில் ஊறிய அதிகாரிகளும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இந்த அரசு காப்பாற்றப்பட வேண்டும். இந்த மாற்றம் தொடர வேண்டும்.
இதற்கு மக்கள் துணை நிற்க வேண்டும் என்பதை பிரசாரமாக வைக்க வேண்டும். ஜெம் வீரமணி வழக்கை 3 மாத காலத்திலேயே முடிக்க தி.மு.க., ஆட்சியில் முடிவெடுத்தது ஏன்? அப்போது சட்டம் ஒழுங்கு முன்னாள் முதல்வர் ஸ்டாலின் கையில்தானே இருந்தது. அதைத்தான் இன்றைய முதல்வர் விஜய் கேள்வியாக கேட்கிறார். அந்த 3 மாதத்தில் ஜெம் வீரமணி ரூ.100 கோடி மதிப்புள்ள சொத்தை விற்பனை செய்துள்ளார். அந்த பணப்பரிமாற்றம் தொடர்பான பல சந்தேகங்கள் எழுகின்றன. அரசியல்வாதிகள், அதிகாரிகள் என பலர் சம்பந்தப்பட்டுள்ளனர்.

இதில், ஒரு சிறுமி மட்டுமல்ல, நூற்றுக்கணக்கான சிறுமிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த பிரச்னை கடந்த 30 ஆண்டுகளாகவே நடந்து வந்துள்ளது. இதற்கான ஆதாரங்களை சேமிக்க வேண்டும் என்பதற்காகத்தான் த.வெ.க., அரசு காலஅவகாசம் கேட்டது. இதில் தவறு கிடையாது. இதை எடப்பாடி பழனிசாமி திசை திருப்ப முயல்கிறார். கடந்த 2014-ல் அ.தி.மு.க., ஆட்சியிலும் ஒரு சம்பவம் நடந்திருக்கிறது. பல சிறுமிகளை நாசப்படுத்தி உள்ளனர். இதில் சம்பந்தப்பட்ட நபர்கள், இதற்கு ஆதரவாக இருந்த அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் விஜய் சொல்கிறார். இதில் தவறு இல்லை.” என்றார்.
திடீரென 12,500 அடி கீழிறங்கி மாயமான விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம்
October 3, 2026
தொழ போவதாக சொல்லி கொடூரமாக தாக்கினார்.. முதல் அடியிலேயே பார்வை மங்கியது.. நெதன்யாகுவிடம் விவரித்த இந்திய பைலட்
October 3, 2026
4வது மாடியில் இருந்து குதித்ததால் பலி.. சென்னையில் இந்தியன் வங்கி தலைமை மேனேஜர் எடுத்த விபரீத முடிவு
October 3, 2026
ஓமன் துணை விமானியை விட்டுடுங்க.. கெஞ்சிய பணியாளர்களுக்கு இஸ்ரேல் பயணிகள் கொடுத்த பதிலடி.. வெளிவராத தகவல்
October 3, 2026
பெண் பத்திரிகையாளரிடம் அத்துமீறல்.. போராட்டத்தில் சில்மிஷத்தில் ஈடுபட்ட டெல்லி போலீஸ் அதிகாரி?
October 3, 2026
ஆனந்த் அம்பானி ரூ.1 லட்சம் கோடி முதலீடு.. அட, தெலுங்கில் அப்படி கேட்டதுமே.. வியந்த சந்திரபாபு நாயுடு
October 3, 2026
Third time lucky for Pocognoli as Scotland make Robertson's 100th cap with win
October 3, 2026
World Grand Prix Darts LIVE! Humphries faces Wade after Price reaches final
October 3, 2026
திடீரென 12,500 அடி கீழிறங்கி மாயமான விமானம்.. பயணிகளின் கதி என்ன? திடுக்கிட வைக்கும் அடுத்த சம்பவம்
October 3, 2026
Remains of Bulgaria’s Czar Samuel return ‘home’ after 1,000 years
October 3, 2026
FIBA 3×3 Basketball Built For The Next Generation And Coming To LA28
October 3, 2026
தொழ போவதாக சொல்லி கொடூரமாக தாக்கினார்.. முதல் அடியிலேயே பார்வை மங்கியது.. நெதன்யாகுவிடம் விவரித்த இந்திய பைலட்
October 3, 2026