தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கொடுத்த அனைத்துக் கட்சிகளும் தவெகவின் ‘மதச்சார்பற்ற வெற்றிக் கூட்டணியில்’ இணைந்துவிட்டன.
ஆனால், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டும், திமுகக் கூட்டணியிலும் இல்லாமல், தவெகக் கூட்டணியிலும் இல்லாமல் தனி ரூட் எடுத்திருக்கின்றன.
மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளில் கூடப் போட்டியிட்டு ட்விஸ்ட் கொடுத்திருக்கின்றன இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும்.
மதுராந்தகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது. தாராபுரத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடுகிறது.

முதலமைச்சர் இருக்கும்போதே…
இந்த நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், “நேற்று தாராபுரம் தொகுதியின் தவெக வேட்பாளர் ஆளும்கட்சியில் இருந்தால்தான் தொகுதிக்கு நல்லது செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்.
அதுவும் அவர் முதலமைச்சரை அருகில் வைத்துக்கொண்டே இதைக் கூறியிருக்கிறார்.
108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தாலும், தமிழ்நாட்டின் 8 கோடி மக்களுக்கும்தான் முதலமைச்சர் விஜய்.
வேட்பாளர் இப்படிக் கூறுவது, எதிர்க்கட்சிகளின் தொகுதிக்கு ஆளும் கட்சி எதுவும் செய்யாது என்பதைக் குறிக்கிறது. இதை முதலமைச்சர் ஏற்றுக்கொள்கிறாரா என்பதை விளக்க வேண்டும். இப்படியொரு அணுகுமுறை இருந்தால் அது மிக மிகத் தவறு.
தவெகதான் அதிகப் பணம்…
நேற்று நான் மதுராந்தகம் சென்றிருந்தேன். அங்குப் பல கிராமங்களில், ‘நாங்கள் ஏன் தேர்தலில் நிற்கிறோம்… எங்களுக்கு ஏன் வாக்களிக்க வேண்டும்’ என்பதைக் கூறி நோட்டீஸ் மட்டுமே தந்தோம்.
சில கிராமங்களில் மக்கள், ‘எல்லாரும் பணம் கொடுக்கிறார்கள்… நீங்கள் நோட்டீஸ் மட்டுமே தருகிறீர்களே’ என்று கேட்டார்கள்.
எந்தக் கட்சி பணம் தருகிறது என்பதைக் கேட்டதற்கு, தவெகதான் இருப்பதிலேயே அதிகப் பணம் தருகிறது என்று மக்கள் கூறுகிறார்கள்.
உங்களால் அந்தளவுக்குக் கொடுக்க முடியாது. கொஞ்சமாவது கொடுங்கள் என்று மக்கள் எங்களிடம் பேரம் பேசுகிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

வெற்றிடம்…
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியனும், “இடைத்தேர்தலில் பண விநியோகம் செய்ய வேண்டிய தேவையில்லை. அதுவே ஒரு கலாச்சாரமாக மாறிவிட்டது.
தவெகவும் செய்கிறது… திமுக செய்கிறது, அதிமுகவும் செய்கிறது. அரசியல் பேச வேண்டும் என்று நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.
ஆனால் அங்கு அரசியல் உரையாடல் இல்லை. அந்த இடம் வெற்றிடமாக இருக்கிறது.
செங்கொடி பிடித்த கம்யூனிஸ்ட்கள் மட்டுமே வீடு வீடாகச் செல்கிறோம், மக்களோடு உரையாடுகிறோம், அரசியல் பேசுகிறோம்” என்று கூறியிருக்கிறார்.
ஹோர்மூஸ் நீரிணை மீதான கட்டுப்பாட்டை இரான் இழந்துவிட்டதா? எண்ணெய் ஏற்றுமதி தரவு உணர்த்தும் உண்மை
October 3, 2026
இருமல், தும்மல் அல்லது சத்தமாக சிரித்தால் சிறுநீர் கசிகிறதா? பெண்கள் கவனிக்க வேண்டியவை
October 3, 2026
அபிஷேக் வாண வேடிக்கை: பாகிஸ்தானை வீழ்த்தி ஆசிய விளையாட்டில் தங்கம் வென்றது இந்தியா
October 3, 2026
'சிறு பண்ணைகளில் 45% கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை' – தமிழக ஆய்வில் அதிர்ச்சி தகவல்
October 3, 2026
பாகிஸ்தானில் கடத்தப்பட்ட விமானத்தில் 300 பேரை காப்பாற்றி உயிரை விட்ட இந்திய பெண்ணின் கதை
October 3, 2026
தமிழக இளைஞரை காதல் மணம் புரிந்த இலங்கைத் தமிழ் பெண்ணுக்கு என்ன சிக்கல்?
October 3, 2026
Third time lucky for Pocognoli as Scotland make Robertson's 100th cap with win
October 3, 2026
World Grand Prix Darts LIVE! Humphries faces Wade after Price reaches final
October 3, 2026
Remains of Bulgaria’s Czar Samuel return ‘home’ after 1,000 years
October 3, 2026
FIBA 3×3 Basketball Built For The Next Generation And Coming To LA28
October 3, 2026
Is the CJP changing India’s political landscape?
October 3, 2026
‘Anna Pigeon’ Episode 9 Sets Up An Intense Battle For Glacier National Park
October 3, 2026