மதுரை மாவட்டம், மீனாட்சி அம்மன் கோயிலுக்குப் பாத்தியப்பட்ட வண்டியூர் தெப்பக்குளம் ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் வறட்சி நிலையை எட்டியிருக்கிறது.
மதுரையில் கி.பி. 1645 ஆம் ஆண்டு மன்னர் திருமலை நாயக்கரால், இன்று புகழ்பெற்ற சுற்றுலாத் தளமாக விளங்கக்கூடிய திருமலை நாயக்கர் மஹாலினைக் கட்டுவதற்கு, மீனாட்சியம்மன் கோயிலுக்கு கிழக்கே இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள இடத்தில் தேவைப்பட்ட மண்ணை தோண்டி எடுக்கப்பட்டபோது மிகப்பெரிய பள்ளம் உருவானது. அப்பள்ளத்தை மூட வேறொரு இடத்திலிருந்து மண்ணைக் கொண்டுவராமல், அதனை அழகிய குளமாக மாற்ற உத்தரவிட்டார். அப்படி உருவானதே மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.

இந்தத் தெப்பக்குளம் 16 ஏக்கர் பரப்பளவில் மாநகரத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. இக்குளத்தின் உட்பகுதியின் சுற்றுப்புறம் கிரானைட் கற்களால் கட்டமைத்து நான்கு பகுதியிலும் 12 நீண்ட படிகள் உள்ளன.
இந்தத் தெப்பக்குளம் மதுரை வண்டியூர் மாரியம்மன் திருக்கோயிலுக்குப் பாத்தியப்பட்டிருந்தாலும் நிர்வாக ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் இக்குளத்தினை மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் நிர்வாகம் பாராமரித்து வருகிறது. அத்தோடு ஆண்டுக்கொருமுறை தைப்பூசத்தன்று தெப்பத்திருவிழாவில் மீனாட்சியும் சுந்தரேசுவரரும் தெப்பக்குளத்தில் எழுந்தருளி காட்சி தருவது பொதுமக்களிடையே பிரசித்தி பெற்ற நிகழ்வாகும்.

கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பனையூர் கால்வாய் சீரமைக்கப்பட்டு, கான்கிரீட் குழாய்கள் மூலம் வைகை ஆற்று நீர் மீண்டும் குளத்திற்குள் கொண்டு வரப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2020 முதல் 2025 வரை தெப்பக்குளத்தில் அடிக்கடி பெய்துவரும் மழையின் காரணமாகவும், வைகையாற்றிலிருந்து கிடைக்கப்பெற்ற நீரின் காரணமாகவும் நீர் வற்றாமல் முழு கொள்ளளவான 14 அடியையும் எட்டி நிரம்பி வழிந்தது. அதனால் பாதுகாப்பிற்காக நான்கு படித்துரைகளில் பாதுகாப்புக் கம்பிகளை அமைத்தனர்.
தொடர் நீர் இருப்பின் காரணமாக இப்பகுதி ஒரு சுற்றுலாத் தலமாக விளங்கியது. குளத்தைச் சுற்றி நூற்றுக்கணக்கான உணவு, ஆடை அலங்கார மற்றும் பொழுதுபோக்குக் கடைகளும் படையெடுத்தன. நாள் ஒன்றுக்கு உள்ளூர் வாசிகள், சுற்றுலாப் பயணிகள் என சராசரியாக ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்லும் இடமாக மாறியது.

இந்த ஆண்டின் கோடைக் காலத்திலிருந்து தெப்பக்குளத்தில் நீர் படிப்படியாக வற்ற ஆரம்பித்தது. இத்தெப்பக்குளத்தைச் சுற்றி ஏராளமான உணவுக்கடைகள் இருப்பதால் உள்ளூர் வாசிகளும் சுற்றுலாப் பயணிகளும் தாங்கள் வாங்கி உண்ட பிறகு பிளாஸ்டிக் குப்பைகள், பிளாஸ்டிக் தட்டுகள், பிளாஸ்டிக் பாட்டில்கள் என அனைத்தையும் பாதிப்பறியாது குளத்தில் வீசி மாசடையச் செய்தனர். அதனை உள்ளூர் தன்னார்வலர்கள் குளத்தில் இறங்கி ஒரு பகுதியைச் சுத்தம் செய்ததும் குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து குளத்தின் ஒரு பகுதி முழுவதும் நீர் வற்றி, உள்ளிருக்கும் கழிவுகளால் துர்நாற்றம் வீசுவதால் காலை – மாலை வேளைகளில் நடைபயிற்சி மேற்கொள்ளும் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
இக்குளத்தின் மையப்பகுதியில் அமைந்துள்ள நீராழி மண்டபம் சிதிலமடைந்து காணப்பட்டதையடுத்து புணரமைப்பிற்காக கடந்த ஜூலை மாத இறுதியில் சாரம் கட்டப்பட்ட நிலையில், அந்தப் பணிகளும் கிடப்பில் போடப்பட்டிருக்கின்றன. விரைவில் அப்பணியை முடுக்கிவிட்டு, வடகிழக்குப் பருவமழை தொடங்குவதற்கு முன் குளத்தையும் சுத்தம் செய்வதோடு பொதுமக்களுக்கு தெப்பக்குளத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உரிய விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு உள்ளூர் வாசிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
விஜய் பக்கம் நிற்கும் திருமாவளவன்.. தவெகவுக்கு எவ்வளவு பலம் தெரியுமா? ஓபனாக பேசிய புஸ்ஸி ஆனந்த்!
October 1, 2026
சைக்கிளில் இருந்து விழுந்த எம்எல்ஏ.. கண்டுகொள்ளாமல் எஸ்கேப்பான புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா?
October 1, 2026
அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு
October 1, 2026
ஜூலை.. ஆகஸ்ட்.. செப்டம்பர்! 3 மாதமாக சரியும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வசூல்.. இந்த முறை ரூ.482 கோடி சரிவு
October 1, 2026
சோபா அனுப்பியது உண்மை தான்.. விசிக, மதிமுகவுக்கு சோபா கொடுத்தது ஏன் தெரியுமா? ஆதவ் அர்ஜுனா விளக்கம்!
October 1, 2026
"விஜய்யிடம் வெளிப்படத்தன்மை இல்லை.. அரசு பதில் சொல்லியே தீரணும்.." சிபிஎம் சண்முகம் சரமாரி கேள்வி
October 1, 2026
விஜய் பக்கம் நிற்கும் திருமாவளவன்.. தவெகவுக்கு எவ்வளவு பலம் தெரியுமா? ஓபனாக பேசிய புஸ்ஸி ஆனந்த்!
October 1, 2026
சைக்கிளில் இருந்து விழுந்த எம்எல்ஏ.. கண்டுகொள்ளாமல் எஸ்கேப்பான புஸ்ஸி ஆனந்த்.. இதுதான் காரணமா?
October 1, 2026
அக்டோபர் 10.. இந்தியா vs பாகிஸ்தான் போட்டி.. 2027 உலகக்கோப்பை தொடர் அட்டவணை வெளியீடு
October 1, 2026
Mark London’s ‘Underworld’ Comic Book Universe Continues In ‘Victoria Jaguar’ (First Look)
October 1, 2026
Agility Robotics Wants To Make 500 Humanoid Robots Safe, Not Just One
October 1, 2026
ஜூலை.. ஆகஸ்ட்.. செப்டம்பர்! 3 மாதமாக சரியும் தமிழ்நாடு ஜிஎஸ்டி வசூல்.. இந்த முறை ரூ.482 கோடி சரிவு
October 1, 2026