தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலில் த‌.வெ.க வேட்பாளராக போட்டியிட்டுள்ள சத்தியபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் தாராபுரத்தில் நேற்று ரோடு ஷோ நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார்.

வாக்காளர்களைக் கவரும் வகையில் மாட்டு வண்டியில் பயணித்தும் விவசாயிகளுடன் முருங்கைக்காய் பறித்தும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். இந்த நிலையில், முதலமைச்சர் விஜய்யின் மாட்டு வண்டி பயணித்தின்போது அஷோக் என்ற நபர் அந்த மாட்டு வண்டியை ஓட்டியுள்ளார்.

அ.தி.மு.க-வைச் சேர்ந்த அஷோக், சத்தியபாமாவைப் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார் என்ற காரணத்திற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்திருக்கிறது காவல்துறை. கைது நடவடிக்கையில் இருந்து காப்பாற்றுகிறோம்‌ என்கிற பெயரில் அவரை மிரட்டி த.வெ.க- வில் இணைத்துள்ளனர் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்
முதலமைச்சர் தேர்தல் பிரசாரம்

இது குறித்து தெரிவித்த அ‌.தி.மு.க திருப்பூர் புறநகர் மாவட்ட செயலாளர் செல்வகுமார், “பொட்டிக்காபாளையம் அஷோக் என்பவர் எங்கள் கட்சியில்தான் இருந்தார். சில தினங்களுக்கு முன்பு த.வெ.க வேட்பாளர் சத்தியபாமாவை தேர்தல் பிரசாரம் செய்ய விடாமல் தடுத்தார் என்ற காரணத்திற்காக அஷோக் உட்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

மற்ற அனைவரும் சிறையில் இருக்கிறார்கள். அஷோக்கைத் தேடி வருவதாக காவல்துறை கூறியிருந்தது. ஆனால், அஷோக்கை மட்டும் இரவோடு இரவாக மிரட்டி த.வெ.க-வில் இணைய வைத்திருக்கிறார்கள். அதோடு விடமால், முதலமைச்சருக்கு மாட்டு வண்டியை ஓட்ட வைத்திருக்கிறார்கள். அதற்கு ஆடியோ ஆதாரம் இருக்கிறது. கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க கட்சி மாறினாலும் அவர் தேடப்படும் குற்றவாளிதான்” என்றார்.

More in TamilNews
மின்சார காரில் செல்லும் போது சிலருக்கு குமட்டல், வாந்தி வருவது ஏன்? மின்சார காரில் செல்லும் போது சிலருக்கு குமட்டல், வாந்தி வருவது ஏன்? October 5, 2026 எஸ்ஐஆர்: படிவம்-6 பற்றிய உச்சநீதிமன்ற கருத்தால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய நெருக்கடி – அடுத்தது என்ன? எஸ்ஐஆர்: படிவம்-6 பற்றிய உச்சநீதிமன்ற கருத்தால் தேர்தல் ஆணையத்திற்கு புதிய நெருக்கடி – அடுத்தது என்ன? October 5, 2026 கொசுவர்த்தி சுருளில் மறைந்துள்ள ஆபத்து – கொசு விரட்ட பாதுகாப்பான சிறந்த வழி எது? கொசுவர்த்தி சுருளில் மறைந்துள்ள ஆபத்து – கொசு விரட்ட பாதுகாப்பான சிறந்த வழி எது? October 5, 2026 தமிழ்நாட்டில் 3 மாதமாக ஜிஎஸ்டி வசூல் சரிவா? திமுக குற்றச்சாட்டும் அரசு பதிலும் – நிபுணர்கள் விளக்கம் தமிழ்நாட்டில் 3 மாதமாக ஜிஎஸ்டி வசூல் சரிவா? திமுக குற்றச்சாட்டும் அரசு பதிலும் – நிபுணர்கள் விளக்கம் October 5, 2026 கவிஞர் புலமைப்பித்தனின் 10 பிரபல பாடல்களின் தொகுப்பு – கண்ணதாசன் பாணியில் அவர் எழுதிய பாடல் தெரியுமா? கவிஞர் புலமைப்பித்தனின் 10 பிரபல பாடல்களின் தொகுப்பு – கண்ணதாசன் பாணியில் அவர் எழுதிய பாடல் தெரியுமா? October 5, 2026 ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? ஞானேஷ் குமாருக்கு எதிரான வழக்கில் தேர்தல் ஆணையம், மத்திய அரசுக்கு நோட்டீஸ் – உச்ச நீதிமன்றம் கூறியது என்ன? October 5, 2026

See all 695 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *