திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மீது தமிழ்நாடு காவல்துறை அவசர அவசரமாக வழக்குப் பதிவு செய்து வருவதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “தஞ்சாவூர் மற்றும் தாராபுரத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசியதற்காக உடனடியாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

தி.மு.க தலைவர் மீதும் பல்வேறு இடங்களில் புகார்கள் அளிக்கப்பட்டு வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால், ஆளுங்கட்சி அல்லது பிற கட்சிப் பிரமுகர்கள் மீது காவல்துறை ஏன் நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

முதலமைச்சருடன் தலைமறைவு குற்றவாளி ஒருவர் ஒரே வாகனத்தில் பயணம் செய்துள்ளார். அவர் மீது காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்தது? அதேபோல், பள்ளிக் குழந்தைகளை அமர வைத்துக்கொண்டு பெண்களை இழிவாகப் பேசிய விவகாரத்தில் அமைச்சர் கீர்த்தனா மீது நடவடிக்கை எடுக்கப்படாதது ஏன்?

மேலும், தாராபுரத்தில் நடைபெற்ற ஊர்வலத்தின்போது பெண் காவலர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட நபரை உடனடியாகக் கைது செய்த காவல்துறை, ஒரு மணி நேரத்திற்குள் விடுவித்துள்ளது.

யாருடைய தலையீட்டால் அவர் விடுவிக்கப்பட்டார் என்பதற்கு தமிழ்நாடு காவல்துறை உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
கடந்த சில மாதங்களாக பிற கட்சியினரைத் தங்கள் பக்கம் இழுக்க முயற்சித்து வரும் த.வெ.க கட்சியினரால், தி.மு.க-வைச் சேர்ந்த ஒரு சட்டமன்ற உறுப்பினரையோ அல்லது சாதாரணத் தொண்டனையோ கூடத் தொட்டுப் பார்க்க முடியவில்லை. கட்சி உறுப்பினர்களை இழுக்க முடியாத விரக்தியில், தி.மு.க அவைத்தலைவர் வீட்டு மரத்தில் இருந்த முருங்கைக்காயை மட்டுமே அவர்களால் பறிக்க முடிந்துள்ளது.

உதயநிதி, ஸ்டாலின்
உதயநிதி, ஸ்டாலின்

வழக்குகளைக் கண்டு அஞ்சும் கட்சி தி.மு.க அல்ல. பல்வேறு பெரிய வழக்குகளைச் சந்தித்தே நாங்கள் வளர்ந்துள்ளோம். ஆனால், சட்டம்-ஒழுங்கு மற்றும் காவல்துறையின் இந்த ஒருபக்கச் சார்பான செயல்பாட்டை பொதுமக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்" – உச்ச நீதிமன்ற நீதிபதி தேர்தல் ஆணையர் விவகாரம்: “விரிவாக விசாரிக்க உள்ளோம்" – உச்ச நீதிமன்ற நீதிபதி October 5, 2026 தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு? தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக vs திமுக vs அதிமுக.. களத்தில் முந்துவது யார்? வெற்றி யாருக்கு? October 5, 2026 ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்! ஆளை கொல்லும் ஜாம்பி வைரஸ்! எல்லையை மூடி சீல் வைக்க ரெடியாகும்.. ரஷ்யாவின் பக்கத்து நாடுகள்! October 5, 2026 மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் உட்பட 8 சிட்டிங் எம்பிக்களை கழற்றிவிட்ட பாஜக! உ.பியில் அதிரடி திருப்பம் October 5, 2026 எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு எதிர்பாராத நேரத்தில் உடைந்த டெஸ்ட் டியூப்.. பரவும் ஆபத்தான பிளாக் தொற்று? 200+ பேர் கண்காணிப்பு October 5, 2026 தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' – சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன? தவெக: 'மெழுகுவர்த்தி சண்டை இல்ல; கௌரவச் சண்டை?' – சர்ச்சையான நவல்பட்டு விஜி; பின்னணி என்ன? October 5, 2026

See all 690 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *