தமிழ்நாடு இடைநிலை சுகாதாரப் பணியாளர்கள் பொறுப்பில் இருக்கும் செவிலியர்கள் ஆயிரக்கணக்கானோர் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே போராடி வந்தனர். சமவேலைக்கு சம ஊதியம் உட்பட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆயிரத்துக்கும் மேட்பட்ட செவிலியர்கள் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நேற்று காலை முதல் போராடி வருகின்றனர். தங்களின் கோரிக்கைகளை அரசு மதித்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் எனக் கோரி வந்தனர். முன்னாள் அமைச்சர் மனோ தங்கராஜூம் போராட்டத்துக்கு நேரில் ஆதரவு தெரிவித்திருந்தார்.

செவிலியர்கள் போராட்டம்

நேற்று மாலை செவிலியர்களின் பிரதிநிதிகளை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த காவல்துறை அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. ஆனால், பேச்சுவார்த்தைக்கு கூட்டிச் செல்லாமல் காவல்துறை அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்திருப்பதாக செவிலியர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். பேச்சுவார்த்தைக்கு அழைத்துச் சென்றவர்களை விடுவித்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் என செவிலியர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர். ஆனால் காவல்துறை போராட்ட இடத்தின் மின் இணைப்பை துண்டித்து, பந்தல்களை அகற்றியது. இரவு 8:30 மணியளவில் காவல்துறையினர் குண்டுக்கட்டாக செவிலியர்களை கைது செய்து பேருந்தில் அடைக்க தொடங்கினர். 

ஆனால், செவிலியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் கைது நடவடிக்கை கைவிடப்பட்டது. இதற்கிடையில் அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்குப் பிறகு, `நவம்பர் 3ஆம் தேதிக்குள் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்றால் மீண்டும் போராட்டம் தொடரும்’ என்ற எச்சரிக்கையுடன் செவிலியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

கனிமொழி
கனிமொழி

இந்த நிலையில், திமுக எம்.பி கனிமொழி தன் எக்ஸ் பக்கத்தில், “பணி நிரந்தரம், சம ஊதியம், ஊக்கத்தொகை உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து அமைதியான முறையில் போராடிவரும் செவிலியர்களை ஒடுக்க முற்படுகிறது தவெக அரசு. தற்காலிகப் பணியில் உள்ள செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் எனத் தேர்தல் வாக்குறுதியில் ரீல் விட்டுவிட்டு, இப்போது அதே செவிலியர்களை ஏமாற்றியிருக்கிறது இந்த ரீல் அரசு. செவிலியர்களின் கோரிக்கைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

See all 723 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *