வாக்காளர் பெயர்கள் நீக்கம், சிறப்புத் தீவிரத் திருத்தக் குளறுபடிகளுக்குப் பொறுப்பேற்று ‘தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும்’ என்று நேற்று (அக்டோபர் 6) டெல்லியில் பேரணியும், போராட்டமும் நடைபெற்றது.

இது ‘இந்தியா’ கூட்டணி சார்பாக நடந்தது. இந்தப் பேரணியை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் தலைமையேற்று நடத்தினர்.

ராகுல் காந்தி
ராகுல் காந்தி

அசைவம் சாப்பிடும் ராகுல் காந்தி…

இந்தப் பேரணி வீடியோ ஒன்றில் ராகுல் காந்தி அசைவ ரோல் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவைப் பகிர்ந்து சிலர், “போராட்டம் நடைபெறும் இடத்தில் ராகுல் காந்தி ரோல் ஒன்றைச் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்.

அந்தப் பொட்டலத்தை ஜூம் செய்து பார்த்தபோது, அதில் சிவப்பு நிறக் குறியீடு இருக்கிறது.

பொதுவாக அசைவ உணவைக் குறிக்கவே இந்தக் குறியீடு பயன்படுத்தப்படும்.

அப்படியானால், ஒரு இந்துவான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை அன்று அசைவ உணவு சாப்பிடுகிறார் என்று இதற்கு அர்த்தமா?” என்று சர்ச்சையைக் கிளப்பி வருகின்றனர்.

கார்த்தி சிதம்பரம் பதிலடி

இதற்குப் பதில் தரும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தனது எக்ஸ் பக்கத்தில், “சாதாரண பா.ஜ.க ஆதரவாளர்களின் தீவிரமான சைவ உணவுத் திணிப்பு இது!

உங்கள் தகவலுக்குச் சொல்கிறேன்… இந்தியாவில் வாழும் பெரும்பான்மையான மக்கள் (80% மேல்) கறி, கோழி, மீன் போன்ற அசைவ உணவை உண்பவர்கள்தாம்” என்று பதிவிட்டுள்ளார்.

More in TamilNews
SIR: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க அனுமதி மறுப்பா? நடைமுறையை மீறியதா 'இந்தியா' கூட்டணி? SIR: தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைச் சந்திக்க அனுமதி மறுப்பா? நடைமுறையை மீறியதா 'இந்தியா' கூட்டணி? October 7, 2026 SIR விவகாரம்: "துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்" – காங்கிரஸ் சரமாரி கேள்வி SIR விவகாரம்: "துணிச்சல் இருந்தால் பதில் சொல்லுங்க மோடி சார்" – காங்கிரஸ் சரமாரி கேள்வி October 7, 2026 தாராபுரம்: இளம் தலைமுறை முதல் மூத்த குடிமக்கள் வரை குறையாத ஆர்வம்; வாக்குப்பதிவின் Highlights|Photos தாராபுரம்: இளம் தலைமுறை முதல் மூத்த குடிமக்கள் வரை குறையாத ஆர்வம்; வாக்குப்பதிவின் Highlights|Photos October 7, 2026 கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை..தமிழக மீனவர்கள் கைதை உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்திய மத்திய அரசு கச்சத்தீவு விவகாரத்தில் தலையிட விரும்பவில்லை..தமிழக மீனவர்கள் கைதை உச்சநீதிமன்றத்தில் நியாயப்படுத்திய மத்திய அரசு October 6, 2026 இனி மேற்குவங்காளம் என்ற பெயர் கிடையாது.. மாநிலத்தின் பெயரை மாற்ற ரெடியான பாஜக அரசு! பின்னணி இனி மேற்குவங்காளம் என்ற பெயர் கிடையாது.. மாநிலத்தின் பெயரை மாற்ற ரெடியான பாஜக அரசு! பின்னணி October 6, 2026 ஒரு வழியா.. நல்ல செய்தியை சொன்ன WHO! ரஷ்யாவை நினைத்து உலக மக்கள் கவலைப்பட வேண்டாம்! ஒரு வழியா.. நல்ல செய்தியை சொன்ன WHO! ரஷ்யாவை நினைத்து உலக மக்கள் கவலைப்பட வேண்டாம்! October 6, 2026

See all 694 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *