நடிகரும், சமூக ஆர்வலருமான பிரகாஷ் ராஜ் நேற்று செய்தியாளர் சந்திப்பில், 2023-ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்ட SIR உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் ரத்து செய்ய வேண்டும் என்றும், தேர்தல் ஆணையத்தின் தொடர்புடைய ஆவணங்கள் மற்றும் கோப்புகளை உச்ச நீதிமன்றமே நேரடியாகக் கைப்பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். மேலும், “தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு EVM எரிக்கப்படுவது மற்றும் முக்கிய அலுவலகங்களில் தீ விபத்துகள் ஏற்படுவது போன்ற சம்பவங்கள் குறித்து முறையான விசாரணைகள் நடத்தப்படுவதில்லை. இதைக் கேட்பதற்கு ஆளில்லையா?” எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக இன்று சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க தலைவர் நயினார் நாகேந்திரன், “ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் பேசுவதைப் பார்க்கும்போது வேடிக்கையாக உள்ளது. இந்த EVM கொண்டுவந்தது யார்? காங்கிரஸ் கட்சிதானே கொண்டுவந்தது? அதற்குப் பிறகும் அவர்கள் எத்தனை முறை ஆட்சிக்கு வந்திருக்கிறார்கள்?
இப்போது கேரளாவில் யார் வெற்றி பெற்றிருக்கிறார்கள்.. கர்நாடகாவில் யார் ஆட்சியில் இருக்கிறார்கள்.. காங்கிரஸ் கட்சிதானே இருக்கிறது. பா.ஜ.க-வா ஆட்சிக்கு வந்திருக்கிறது? வாக்குப்பதிவு இயந்திரங்களில் குளறுபடி செய்திருந்தால் நாங்கள்தானே அனைத்து இடங்களிலும் ஆட்சிக்கு வந்திருக்க வேண்டும்?
தமிழ்நாட்டில் தேர்தல் முடிந்து நான்கு மாதங்கள் ஆகிவிட்டன. இதுவரை யாரும் எதுவும் சொல்லாமல், திடீரென்று இது போன்ற பொய்யான குற்றச்சாட்டுகளைப் பரப்புவது தேவையற்ற விளம்பரத் தேடலேயாகும். இப்போது சமூக வலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்பி அரசியல் செய்வது ஒரு வழக்கமாகிவிட்டது. சமூக வலைதளங்களை மட்டுமே வைத்துக்கொண்டு பெரிய அளவில் அரசியல் செய்து கொண்டிருக்கிறார்கள். திருமாவளவன் கடந்த ஐந்து ஆண்டுகளாக யாருடன் இருந்தார், என்னவெல்லாம் பேசினார் என்பது அனைவருக்கும் தெரியும். அவர் ஏன் திடீரென்று நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டார் என்பதும் தெரியும். அப்போதெல்லாம் EVM குளறுபடியினால்தான் வெற்றி பெற்றோம் என்று சொல்லவில்லையே? இதையெல்லாம் ஒரு பிரச்னையாக ஆக்குவது சிரிப்பையே வரவழைக்கிறது.

நேற்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரதமர் மோடியையும் மத்திய அமைச்சர்களையும் ‘ரங்கா-பில்லா’ என்றும், அவர்கள் வாக்குகளைத் திருடிவிட்டார்கள் என்றும் கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்திப் பேசியிருக்கிறார். அவர் திரைப்படங்களில் எப்படிப்பட்ட கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறாரோ, அதே போன்ற குணம் மற்றும் குணாதிசயம்தான் அவருடைய நிஜ வாழ்க்கையிலும் வெளிப்படுகிறது” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
என்ன தான் நடக்குது தாராபுரத்தில்.. பத்திரிகையாளர்களுக்கு அனுமதி மறுப்பு.. அதிகாரிகளுடன் வாக்குவாதம்
October 9, 2026
தாராபுரம் வாக்கு எண்ணும் மையத்தில் மெகா சொதப்பல்.. கொந்தளித்த முகவர்கள்.. அதிகாரிகளால் அப்செட்
October 9, 2026
மதுராந்தகம், தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல்.. தபால் வாக்குகளில் தவெக முன்னிலை.. நெருங்கி வரும் திமுக!
October 9, 2026
Postal Votes: மதுராந்தகம் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை! தபால் வாக்குகளில் தவெக முன்னிலை!
October 9, 2026
மதுராந்தகம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு! குவிந்த அரசியல் கட்சியினர்
October 9, 2026
இரவு உறவு.. காலையில் செய்த செயல்.. முத்துக்குமரன் மீது குற்றச்சாட்டு! வாஹிதா வெளியிட்ட புதிய ஸ்டோரி!
October 9, 2026
Polanski challenged over whether he thinks Israel has right to exist
October 9, 2026
Ex-first minister Mark Drakeford suggests Wales Office should go
October 9, 2026
Polanski vows to stay on as Green leader as criticism mounts
October 9, 2026
'Deeply personal moment': Watch Sagal Abdi-Wali's by-election victory speech
October 9, 2026
‘Indentured servants’: US green card move will hit thousands of IT workers
October 9, 2026
‘Is it April fool’s?’ Navi Pillay reacts to Nobel Peace Prize news
October 9, 2026