இந்திய தேர்தல் ஆணையத்தின் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி காக்ரோச் ஜனதா கட்சி மற்றும் மாணவர் அமைப்புகள் இன்று டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த அழைப்பு விடுத்துள்ளன.
ஆனால் டெல்லி ஜந்தர் மந்தரில் இன்று போராட்டம் நடத்த சிஜேபி அமைப்பிற்கு டெல்லி போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். டெல்லி முழுவதும் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் இன்று காலை 4 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இயக்கப்பட வேண்டிய 254 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

போராட்டம் நடத்த குவிந்து வரும் இளைஞர்களை காவல்துறை உடனுக்குடன் கைது செய்து வருகின்றனர். சிஜேபிக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று பெசன்ட் நகரில் போராடிய இளைஞர்களையும் காவல்துறையினர் கைது செய்திருக்கின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் ஸ்டாலின் போராடும் இளைஞர்களுக்கு ஆதரவாகப் பதிவிட்டிருக்கிறார்.
“இன்று டெல்லியில் அரங்கேறி வரும் நிகழ்வுகளும், அமைதிவழியில் போராடுபவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்குமுறைகளும், நான் அனுபவித்த நெருக்கடிநிலைக் காலத்தின் வலிமிகுந்த நினைவுகளை மீண்டும் கண்முன் கொண்டுவருகின்றன.
தில்லியிலும் நாடு முழுவதிலும் கைது செய்து வைக்கப்பட்டுள்ள அரசியல் தலைவர்கள், மாணவர்கள், போராடும் இளைஞர்கள் அனைவரும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் போராடும் மாணவர்கள் மீது, பாஜகவின் கிளையாகச் செயல்பட்டுக்கொண்டு, காவல்துறை அடக்குமுறையை ஏவிவிடும் தவெக அரசையும் வன்மையாகக் கண்டிக்கின்றேன்.

அமைதிவழியில் போராடுவதற்கான தங்களது ஜனநாயக உரிமையைப் பயன்படுத்தும் இளைஞர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனடியாக நிறுத்த வேண்டும். எதிர்ப்பை வெளிப்படுத்துவது குற்றமல்ல. ஜனநாயகத்தைக் காப்பதற்காக எழும் குரலை ஒடுக்குவது ஜனநாயகத்தையே அழித்துவிடும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்பதில் எந்தச் சமரசத்துக்கும் இடமில்லை. அவர் பதவி விலகுவதோடு மட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள அனைத்து பாதிப்புகளும் சரிசெய்யப்பட்டு, அதன் சுதந்திரமும் நேர்மையும் மீட்டெடுக்கப்பட வேண்டும்” என்று வலியுறுத்தி இருக்கிறார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால் வரிச் சலுகை இரட்டிப்பாகுமா? பொருளாதார நிபுணர் விளக்கம்
October 14, 2026
ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது?
October 14, 2026
இந்திய பைலட்டை கொல்ல முயன்ற விமான பணியாளர்கள்? வாயில் மர்ம மாத்திரையை திணிக்க முயன்றது ஏன்? பகீர்
October 14, 2026
போப்பாண்டவர் லியோவிற்கு புற்றுநோய்.. நுரையீரலின் ஒருபகுதி அறுவை சிகிச்சையில் அகற்றம்
October 14, 2026
மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி.. வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
October 14, 2026
விருந்துக்கு போனவர்களுக்கு நேர்ந்த கதி.. கங்கையில் படகு விபத்தில் 11 பேர் பலி! நள்ளிரவில் சோகம்!
October 13, 2026
Tallinn Black Nights Fest Unveils Baltic Film Competition
October 14, 2026
Noah Centineo, Andrew Koji’s ‘Street Fighter’: First Reactions
October 14, 2026
Mikael Marcimain’s ‘The Cold Song’ Marks a Rare Return to Big Swing European TV Drama (Exclusive First Look)
October 14, 2026
DC Studios’ ‘Clayface’: First Reactions
October 14, 2026
Eight months of work down the dumps? Bittu Tabahi finds Ajnar River choked with garbage again
October 14, 2026
Ashok Lavasa: Ex-EC urges poll panel to regain public trust amid calls for Gyanesh Kumar’s resignation
October 14, 2026