நடந்து முடிந்திருக்கும் இடைத்தேர்தலில் மதுராந்தகம், தாராபுரம் தொகுதியில் முதல்வர் விஜய்யின் தவெக வெற்றி வாகையைச் சூடியிருக்கிறது.

திமுக இந்த இரண்டு தொகுதிகளிலும் இரண்டாம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்திருக்கிறது. இந்நிலையில் தவெகவின் வெற்றி குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தப்போது பேசியிருக்கிறார்.

வெற்றிக் கொண்டாட்டத்தில் முதல்வர் விஜய்
வெற்றிக் கொண்டாட்டத்தில் முதல்வர் விஜய்

“முதல்வர் விஜய் மீது அவதூறு விமர்சனங்களை முன்வைத்து மு.க.ஸ்டாலின், உதயநிதி, அதிமுகவினர் பரப்புரை செய்தனர். எதிர்க்கட்சிகள் பணம் கொடுத்ததையும் மீறி ஆளுங்கட்சி பணம் செலவு செய்யாமல் வெற்றிபெற்றுள்ளது.

இடைத்தேர்தலில் தவெக வெற்றிபெற்றது தவெக அரசுக்கு மக்கள் அளித்த அங்கீகாரம். அனைத்துத் தலைவர்களும் முதல்வர் விஜய் தெரு, தெருவாக இரண்டு நாள் பிரசாரம் செய்ததை விமர்சிக்கிறார்கள். ஆனால் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுகவின் முன்னாள் முதல்வரும் மக்களைத் திரட்டி அவதூறு பிரசாரம் செய்தார்கள். அவர்கள் முயற்சிகள் வெற்றிப்பெறவில்லை.

முதலமைச்சர் மீது மக்கள் கொண்டிருக்கிற நம்பிக்கையையும், இந்த ஆட்சியில் ஊழல் இல்லை என்பதையும் மக்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள்” என்று பேசியிருக்கிறார்.

தொடர்ந்து, “நம்மைக் கேலி செய்தவருக்கு இந்த இடைத்தேர்தல் மரண பயத்தைக் காட்டியிருக்கிறது. இது இடைக்கால வெற்றிதான்” என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டிருந்த அறிக்கை குறித்த கேள்விக்கு, “தோற்றுப்போனவர்கள் ஏதாவது ஒரு விளக்கத்தைச் சொல்லத்தானே வேண்டும்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

அவர் சொல்வதைப் பார்த்தால் எதுவுமே யாருக்கும் நிரந்தரமில்லை. இது இடைக்கால வெற்றி என்கிறார். அவர் நிரந்தரமாக வென்றுவிட்டாரா? இந்த வெற்றி அடுத்து வரும் தேர்தல்களிலும் தவெகவின் வெற்றியை உறுதி செய்கிறது. வெற்றிகள் தொடரும்” என்று கூறியிருக்கிறார்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb

More in TamilNews
டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்…ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்க ஏற்பாடு! டாஸ்மாக் ஊழியர்களுக்கு குட் நியூஸ்…ரூ.50 லட்சம் வரை காப்பீடு வழங்க ஏற்பாடு! October 12, 2026 மது பாட்டில்களை திரும்பப்பெறும் மெஷின்: டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! மது பாட்டில்களை திரும்பப்பெறும் மெஷின்: டெண்டர் விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு! October 12, 2026 SIR: "விஜய் ஏன் போராட்டத்தில் பங்கேற்கவில்லை? சொரணை இருந்தால் கேளுங்கள்"- காங்கிரஸுக்கு திமுக பதில்! October 12, 2026 தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: மும்பை மாதுங்காவில் 10 டவர்கள் கட்டுமானப் பணிகள் தொடக்கம்! தாராவி மறுசீரமைப்புத் திட்டம்: மும்பை மாதுங்காவில் 10 டவர்கள் கட்டுமானப் பணிகள் தொடக்கம்! October 12, 2026 மேஜர் சந்திரகாந்த் – ல் ரஜினிகாந்த்…த்ரில்லரில் ஸ்டைல் காட்டிய பாலசந்தர்! மேஜர் சந்திரகாந்த் – ல் ரஜினிகாந்த்…த்ரில்லரில் ஸ்டைல் காட்டிய பாலசந்தர்! October 12, 2026 மாணிக்கம் தாகூர் மிரட்டலுக்கு பயந்தவர் அல்ல, திருப்பி அடிக்கக்கூடியவர்.. திமுகவுக்கு காங்கிரஸ் பதிலடி மாணிக்கம் தாகூர் மிரட்டலுக்கு பயந்தவர் அல்ல, திருப்பி அடிக்கக்கூடியவர்.. திமுகவுக்கு காங்கிரஸ் பதிலடி October 12, 2026

See all 708 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *