2026-ம் ஆண்டிற்கான அமைதிக்கான நோபல் பரிசை நவநீதம் பிள்ளை பெறவுள்ளார். தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் நோபல் பரிசு பெறுவது இதுவே முதல்முறை. சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) நீதிபதியாகப் பணியாற்றிய இவர், `பாலின வன்முறை, பாலியல் வன்கொடுமை மற்றும் பொய்ப் பிரசாரங்களைப் பரப்புவது ஆகியவை மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள். இவை இனப்படுகொலைக்கான குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுக்கும்’ என்பதைச் சட்டப்பூர்வமாக நிறுவி பெரும் புகழ்பெற்றார்.

சர்வதேச சட்ட நிறுவனங்கள் மீதான அரசியல் தாக்குதல்களுக்கு மத்தியில், கொடூரமான சர்வதேசக் குற்றங்களில் ஈடுபடுபவர்களைப் பொறுப்பேற்க வைக்கும் நீதிமன்றங்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், ICC நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி நவநீத பிள்ளைக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு எதிராக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பிரசாரத்தைத் தீவிரப்படுத்தி, அந்நிறுவனத்தின் மீது தடைகளை விதித்திருக்கிறார்.
பொருளாதாரத் தடைகளுக்கு ஆரம்பக்கட்டமாக 6 மாத கால அவகாசத்தை அமெரிக்க நிதியமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு, ICC-யை வலுவாக ஆதரிக்கும் ஐரோப்பிய நட்பு நாடுகளுடன் அமெரிக்காவை மோதல் பாதையில் நிறுத்தியுள்ளது.
காசா விவகாரத்தில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உள்ளிட்ட அதிகாரிகளுக்கு எதிராக வழங்கப்பட்ட பிடியாணை, ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படையினர் செய்ததாகக் கூறப்படும் குற்றங்கள் தொடர்பான விசாரணை ஆகிய காரணங்களால் அமெரிக்கா தொடர்ந்து ICC-யை விமர்சித்து வருவது குறிப்பிடதக்கது.
ICC-யின் துணை தலைமை வழக்கறிஞர் நஜத் ஷமீம் கான், “அமெரிக்காவின் இந்த நடவடிக்கைகள் சர்வதேச சட்டத்தையும் ஒரு சுதந்திரமான நீதித்துறை நிறுவனத்தின் பணியையும் சீர்குலைக்கும் நோக்கம் கொண்டவை. எங்களின் விசாரணை மற்றும் வழக்கு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெறும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இனப்படுகொலை, போர்க் குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரித்து தண்டனை வழங்கும் ஐசிசி மீது ட்ரம்ப் நிர்வாகம் பொருளாதாரத் தடைகளை அறிவித்ததும், நீதிமன்றம் இந்த நடவடிக்கையைக் கடுமையாகக் கண்டித்திருக்கிறது.
இது தொடர்பாக ICC நீதிமன்றம், “இது சட்டத்தின் ஆட்சி மற்றும் சர்வதேச சட்ட அமைப்பின் அடித்தளத்தின் மீதான தாக்குதல். நீதிமன்றத்தின் சுதந்திரத்தைப் பாதுகாக்க வேண்டும். இந்த நீதிமன்றத்தால் தனித்து நிற்க முடியாது. இதன் எதிர்காலம் இதை உருவாக்கிய நாடுகளின் கைகளில்தான் உள்ளது. இதன் விளைவுகள் இந்த நிறுவனத்தையும் தாண்டிப் பாதிப்பை ஏற்படுத்தும். இது ஒரு தனி நிறுவனத்தைப் பாதுகாப்பது பற்றியது மட்டுமல்ல, சட்டத்தின் ஆட்சியை அடிப்படையாகக் கொண்ட சர்வதேச ஒழுங்கைப் பாதுகாப்பது பற்றியது. வரலாறு இந்தத் தருணத்தை மதிப்பிடும்” என தனது 125 உறுப்பு நாடுகளுக்கும் கோரிக்கை விடுத்திருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுத் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ், “இந்த 6 மாத அவகாசம் பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பை வழங்குகிறது. நீதிமன்றம் தனது பணியைத் தொடர்வதை உறுதிசெய்ய ஐரோப்பிய ஒன்றியத்திடம் வழிகள் உள்ளன. அமெரிக்க நடவடிக்கைகளின் தாக்கத்திலிருந்து நீதிமன்றத்தைப் பாதுகாக்க ‘தடுப்புச் சட்டத்தை’ (blocking statute) ஐரோப்பிய ஒன்றியம் அமல்படுத்த வேண்டும்.” என அழைப்பு விடுத்துள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
கூட்டாக வீட்டுக் கடன் வாங்கினால் வரிச் சலுகை இரட்டிப்பாகுமா? பொருளாதார நிபுணர் விளக்கம்
October 14, 2026
ரோபோ தந்த ஷாக்.. 16 வயது சிறுமியை விரட்டி விரட்டி பாலியல் தொல்லை! என்ன நடந்தது?
October 14, 2026
இந்திய பைலட்டை கொல்ல முயன்ற விமான பணியாளர்கள்? வாயில் மர்ம மாத்திரையை திணிக்க முயன்றது ஏன்? பகீர்
October 14, 2026
போப்பாண்டவர் லியோவிற்கு புற்றுநோய்.. நுரையீரலின் ஒருபகுதி அறுவை சிகிச்சையில் அகற்றம்
October 14, 2026
மம்தா பானர்ஜியை கொல்ல முயற்சி.. வீட்டுக்குள் கத்தியுடன் நுழைந்த பெண்ணால் பரபரப்பு
October 14, 2026
விருந்துக்கு போனவர்களுக்கு நேர்ந்த கதி.. கங்கையில் படகு விபத்தில் 11 பேர் பலி! நள்ளிரவில் சோகம்!
October 13, 2026
சிறுமியை சீரழிக்க முயன்ற சிட்டி ரோபோ…..அதிர்ச்சியூட்டும் வீடியோ!
October 14, 2026
Late additions: Sports Ministry approves two Boccia players for Para Asian Games
October 14, 2026
வாக்காளர்களை ட்ராக் செய்த PEN நிறுவனம் – ஆதாரத்தோடு அம்பலப்படுத்திய ஆதவ் !
October 14, 2026
ராகுல் வைத்த 3 ரிக்குவஸ்ட்… உடனே NO சொன்ன விஜய்… காபி குடித்தாலும் கூட்டணியில் கசப்பா?
October 14, 2026
Jailer 2: "வரலாற்றை மீண்டும் மீண்டும் மாற்றி எழுதி வருகிறார்!" – அனிருத் ட்வீட்
October 14, 2026
இறுதிச்சடங்குக்கு தயாரான குடும்பம்…சவப்பெட்டிக்குள் திடீரென கண்விழித்த 15 வயது சிறுமி!
October 14, 2026