இடைத்தேர்தல் தோல்வியால் நாம் தமிழர் கட்சி சோர்ந்துவிடவில்லை, நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம் என்கிறார் அக்கட்சியின் முக்கியப் பொறுப்பாளர் இடும்பாவனம் கார்த்திக். தொடர்ந்து அவரிடம் பேசுகையில்…
தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகளை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இந்த இடைத்தேர்தல் முடிவு என்பது ஏற்புடையதல்ல. மக்கள் மீது வருத்தம் இருக்கிறது, ஆதங்கம் இருக்கிறது, இந்த முடிவைக் கொடுத்திருக்கக் கூடாது என்று பார்க்கிறோம். அதே சமயத்தில் இடைத்தேர்தலே ஒரு ஜனநாயகப் படுகொலை என்றுதான் பார்க்கிறோம்; வழக்கமாக இடைத்தேர்தல் நடக்கும்போது அங்கு காசு கொடுத்து, பரிசுப் பொருள் கொடுத்து ஜனநாயகத்தைப் படுகொலை செய்வார்கள். ஆனால் இந்த முறை ஜனநாயகத்தைப் படுகொலை செய்து, இடைத்தேர்தலை உருவாக்கி, இங்கு வெற்றி பெற்றிருக்கிறார்கள்; எப்படிப் பார்த்தாலும் இது ஏற்புடையது அல்ல, இது ஒரு கேலிக்கூத்து.
இரண்டு தொகுதியிலும் உங்கள் கட்சிக்கு வாக்குகள் குறைந்திருப்பது, கட்சிக்குள் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது?

நாம் தமிழர் கட்சிக்குள் பெரிய தாக்கத்தை இந்தத் தேர்தல் உருவாக்கவில்லை.மக்கள் நம் உழைப்புக்கான அங்கீகாரத்தைத் தரவில்லை; மக்கள் நம்மைப் புரிந்துகொள்ளவில்லை என்கிற வருத்தம் எப்போதும் இருக்கிறது. ஆனால், இந்தத் தேர்தல் முடிவுக்குப் பிறகு நாம் சோர்ந்துவிட்டோம் அல்லது ஓய்ந்துவிட்டோம் என்று இல்லை. மக்களை இன்னும் அரசியல்படுத்த வேண்டும், இன்னும் தெளிவூட்ட வேண்டும், இன்னும் இந்தத் திரைக்கவர்ச்சியிலிருந்து வெளிவர வைக்க வேண்டும் என்கிற பொறுப்புணர்வு இருக்கிறது; அதனால் நம்பிக்கையோடுதான் பயணிக்கிறோம்.
நாம் தமிழர் கட்சியை மக்கள் ஏன் அங்கீகரிக்கவில்லை என்று நினைக்கிறீர்கள்?
கருத்தியல் அரசியலை விடக் கவர்ச்சி அரசியலுக்கு இருப்பு அதிகம். த.வெ.கவின் கொள்கை, தேர்தல் அறிக்கையை பகுப்பாய்வு செய்து மக்கள் வாக்களிக்கவில்லை. தனக்குப் பிடித்த, தன்னால் நன்கு அறியப்பட்ட ஒரு நடிகனுக்கு வாக்கு செலுத்தியிருக்கிறார்கள். அந்தத் திரைப்பிம்பம் மட்டும்தான் விஜய்க்கான ஒரே மூலதனம்; அதுமட்டும்தான் அவருக்கு வெற்றியைக் கொடுத்திருக்கிறது.
சீமானைச் சுற்றியிருப்பவர்கள் சாதி வெறியர்களாகவும் மதவெறியர்களாகவும்தான் இருக்கிறார்கள் என்று வி.சி.க தலைவர் திருமாவளவன் விமர்சித்திருக்கிறாரே?
அண்ணன் திருமாவளவனுக்கு இருப்பது அப்பட்டமான வன்மம், காழ்ப்புணர்ச்சி, பொறாமை; அதைத் தாண்டி சொல்வதற்கு ஒன்றும் இல்லை. ஏனென்றால் நாம் தமிழர் கட்சியில் சாதியவாதத்தோடு, மதவாதத்தோடு யார் செயல்பட்டது?.., அவர் ஆதரிக்கக்கூடிய, கூட்டணி வைத்துள்ள த.வெ.கவைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெகநாத் மிஸ்ரா பொதுமேடையில் “நான் சாதிவெறியன், நான் சாதிவெறியில் பெருமைப்படுகிறேன்” என்று பேசியிருக்கிறார்.

அவரை ஒன்று சட்டமன்ற உறுப்பினராக்கியிருக்கிறார்கள். அதேபோல நிர்மல் குமார் பா.ஜ.கவின் நிலைப்பாடுகளை மிக வலிமையாகப் பேசியவர், பா.ஜ.கவின் குரலாக ஒலித்தவர், ஆர்.எஸ்.எஸ்-இன் காக்கி உடை போட்டுக்கொண்டு சாகா முகாமில் பங்கேற்றவர்; அவரைக் கொண்டுவந்து த.வெ.கவின் முதன்மைத் தலைவர்களில் ஒருவராக அமர்த்தி, அவருக்கு அமைச்சர் பொறுப்பையும் வழங்கிவிட்டார் விஜய். இதற்கு அண்ணன் திருமாவளவன் என்ன சொல்லப் போகிறார்?
நாம் தமிழர் கட்சியில் இருப்பவர்களிடம் ஞானம் இல்லை, முதிர்ச்சி இல்லை, பக்குவம் இல்லை” என்று சொல்கிறீர்கள்; உளுந்தூர்ப்பேட்டை மாநாட்டில் ஓடிப்போனீர்களே, ஏன் ஓடிப்போனீர்கள்?.., அங்கு கட்டுக்கோப்பு, ஒழுங்கு, நேர்த்தி துளியாவது இருந்ததா? கட்சித் தலைவரையே மதிக்காத கட்சிக்காரன் அமைப்பாகத் திரள்வானா?..,நாம் தமிழர் கட்சியின் திருச்சி மாநாட்டில் ஒரே ஒரு சின்ன சலசலப்பு, தேவையில்லாத கூச்சல் இருந்ததா? ..,வி.சி.க கூட்டத்தில் மேடையில் ஏறித் தகராறு செய்கிறானே கட்சிக்காரன், அதை நாம் தமிழர் கட்சிக்காரன் செய்திருக்கிறானா?
நாம் தமிழர் கட்சி தி.மு.கவோடு நெருக்கமாக இருக்கிறது என சமூக வலைதளங்களில் நிறைய பேர் எழுதுகிறார்கள். உங்கள் கட்சியிலிருந்து சமீபத்தில் வெளியே போன சிலரும்கூட விமர்சனமாக முன்வைக்கிறார்களே?
நாம் தமிழரிலிருந்து போன ஆட்கள் நாம் தமிழர் கட்சியை விமர்சிக்கத்தான் செய்வார்கள், அதை விட்டுவிடலாம். நாம் தமிழர் கட்சி எந்த இடத்தில் தி.மு.கவோடு நெருக்கமாக இருந்தது. பிரச்னைகள் சார்ந்து ஒரு நிலைப்பாடு எடுப்பது பற்றிய பார்வை த.வெ.க காரனுக்குக் கிடையாது. ஒரு பிரச்னையில் யார் பாதிக்கப்படுகிறார்களோ அவர்கள் பக்கம்தான் நிற்க முடியும். உதாரணமாகச் சொன்னால், ராகுல் காந்தியை நாடாளுமன்றத்திலிருந்து தகுதிநீக்கம் செய்தபோது, அது ஜனநாயகப் படுகொலை என்று அண்ணன் சீமான் அறிக்கை விட்டார். ஏனென்றால் அந்தப் பிரச்சினையில் ராகுல் காந்தி பாதிக்கப்பட்டவர். எடப்பாடி பழனிச்சாமியை ஆ.ராசா கடுமையாகப் பேசியபோது அதைக் கண்டித்தோம். அப்படித்தான் தி.மு.க பக்கமும் பேசியிருக்கிறோம். சட்டமன்றத்தில் வெளிநடப்பு என்பது காலங்காலமாக இருக்கக்கூடிய ஒரு நடைமுறை, அது எதிர்ப்பின் வெளிப்பாடு.

110 விதிகளை வாசிக்கும்போது விவாதிக்க முடியாது என்றால் வெளிநடப்பு செய்து வெளியே போய் ஊடகங்களைச் சந்தித்துத் தன் எதிர்ப்பை வெளிப்படுத்துவார்கள்; எதிர்க்கட்சிகள் பயன்படுத்தக்கூடிய ஒரு ஜனநாயக வழிமுறைதான் வெளிநடப்பு. ஆனால் வெளிநடப்பை, ஓடிப்போகிறார்கள்” என்று முதல்வர் கொச்சைப்படுத்துவது தவறு. அதைத்தான் நாங்கள் கண்டிக்கிறோம். சட்டமன்றத்தில் சைகை செய்து மாண்பைக் குலைக்கிறீர்கள். அதைத்தான் நாங்கள் கண்டித்தோம். அதற்கு உடனே தி.மு.க ஆதரவு என முத்திரை குத்துகிறார்கள்.
தி.மு.க தலைவர்களோடு நெருக்கமாக இருக்கிறீர்கள், பணம் சார்ந்து கூட குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறதே?
இது உண்மைக்குப் புறம்பான கட்டுக்கதை. நாம் தமிழர் கட்சிக்குப் பணம்தான் பிரதானம் என்றால் 2026 வரைக்கும் காத்திருக்கத் தேவையில்லையே ?..,8 சதவிகித வாக்குக்கு இன்றைக்குத் தேர்தலில் எவ்வளவு மதிப்பு, மிகக் குறைந்தபட்சம் 500 கோடி ரூபாய். ஒரு லெட்டர் பேடு இயக்கம் என்றால் கூடப் பிரச்சாரம் செய்ய 10 கோடி ரூபாய் தருகிறார்கள். அப்படியிருக்கும்போது 8 சதவீத வாக்குகளைப் பெற்ற நாம் தமிழர் கட்சி அ.தி.மு.கவோடோ பா.ஜ.கவோடோ கூட்டணிக்குச் சென்றிருந்தால் எவ்வளவு கொடுத்திருப்பார்கள், அதைச் செய்யாமல் தான் நிற்கிறோம். தமிழ்நாட்டில் எந்தக் கட்சி இவ்வளவு தோல்விகளைக் கண்ட பிறகும் கூட்டணியைப் பற்றி யோசிக்காமல் இருக்கிறது?
தற்போது, உங்கள் கட்சியிலேயே அதுபோன்ற குரல்கள் எழுவதாக தகவல்கள் வருகின்றனவே?
அப்படியெல்லாம் இல்லை; நாங்கள் தெளிவாக இருக்கிறோம். நாம் தமிழர் கட்சி ஒரு கொள்கை, கோட்பாட்டை வைக்கிறது. தமிழ் நலனுக்காக இயங்கக்கூடிய ஒரு மாற்று அரசியல் சக்தி வருகிறார்கள் என்றால் ஏற்பது குறித்துப் பரிசீலிக்கலாம் இப்போது அண்ணன் வேல்முருகன் நாம் தமிழர் கட்சியின் தலைமையேற்று வருகிறார் என்றால் தலைமேற்கொண்டு வரவேற்கிறோம்; ஆனால் நாங்கள் யார் தலைமையின் கீழும் போவதற்கு வாய்ப்பில்லை.

நாங்கள் இன்னொரு தலைமையை ஏற்றுக்கொண்டு கரைந்துபோவதற்கு வாய்ப்பில்லை; ஒருவேளை கூட்டணி என்றால் கூட அது நல்ல ஆற்றலாக இருந்து நாம் தமிழர் கட்சித் தலைமையில் வந்தால் பார்க்கலாம். மற்றபடி நாங்கள் தி.மு.க தலைமையையோ, அ.தி.மு.க தலைமையையோ, பா.ஜ.க தலைமையையோ ஏற்றுப்போவதற்கு வாய்ப்பில்லை.
நாம் தமிழர் கட்சியில் மாவட்ட அளவில் ஆட்களை வளர்க்கவில்லை என்கிற விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனவே?
தயவுசெய்து நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டங்கள், போராட்டங்களை ஊடகங்கள் செய்தியாக மாற்றுங்கள், மக்களிடம் கொண்டுபோய்ச் சேருங்கள். 16 ஆண்டுகளாக ஊடக வெளிச்சம் நாம் தமிழருக்குக் சரியாகக் கிடைக்கவில்லை. தி.மு.க, அ.தி.மு.க, த.வெ.கவுக்கு கொடுக்கும் வெளிச்சத்தை எங்களுக்கும் கொடுங்கள். எங்கள் கட்சியில், கடைக்கோடி தொண்டன் வரை தத்துவார்த்தப் பக்குவம், முதிர்ச்சி இருக்கிறது.
அம்பாசமுத்திரம் தொகுதியில் சீமான் போட்டியிடுவதாக செய்திகள் வெளியானது. இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறீர்களா?
இது குறித்து அதிகாரப்பூர்வமாக தலைமை அறிவிக்கும்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://tinyurl.com/2b963ppb
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://tinyurl.com/2b963ppb
பால், பிஸ்கட், திராட்சை என எல்லாம் விஷம் ! FSSAI ஆய்வில் சிக்கிய 3 நிறுவனங்கள் !
October 17, 2026
'தேவாவின் மறைவு பேரிழப்பு !' – துணைக் குடியரசுத் தலைவர் உருக்கம் !
October 17, 2026
டேய் மனசாட்சியே இல்லையாடா.. 8 மாதம் போராடி நதியை சுத்தப்படுத்திய இன்ஸ்டா பிரபலத்துக்கு அடுத்த அடி
October 17, 2026
மழை வருமா? வராதா? இந்தியா VS வெ.இண்டீஸ் 5வது டி20 பெங்களூரில் நடக்குமா? வானிலை நிலவரம்
October 17, 2026
கேப்டனை நெகிழவைத்த தேவாவின்…‘என் மன்னவரு சின்னவருதான்’ பாட்டு!
October 17, 2026
அனிருத் – காவ்யா மாறன் திருமணம்… பெரிதாகும் VVIP's லிஸ்ட் !
October 17, 2026
Val Chmerkovskiy Ousted From Next ‘DWTS’ Episode Amid Will Smith Oscars Slap Reference, Jenna Dewan to Dance With Alan Bersten
October 17, 2026
‘9-1-1: Nashville’ Pays Tribute to Chad Lowe’s Daughter Fiona After Her Death at 13
October 17, 2026
UCLA Bruins vs. Wisconsin Badgers: Where to Watch the 2026 College Football Game Online
October 17, 2026
‘American Horror Story’ Actor Orlando Jones on Taking Over Lance Reddick’s Role and His Season 13 Prediction: “Somebody Gonna Die!”
October 17, 2026
24 ஆண்டு கால வரலாற்றை முறியடிக்க இருந்த வெஸ்ட் இண்டீஸ்.. பெங்களூர் மழையால் தப்பிய இந்திய அணி
October 17, 2026
Jerusalem Daily: Israeli settlers attack farmers and journalists
October 17, 2026