தமிழகத்தில் புதிய படம் வெளியான முதல் ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் திரையரங்குகளில் 9 மணி காட்சிக்கு அனுமதி கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள திரையரங்குகளில் இப்போது அதிகாலை காட்சிகளெல்லாம் திரையிடப்படுகிறது. விதிகளை மீறி திரையிடப்படும் இந்த காட்சிகளை அரசு அதிகாரிகளும் கண்டும் காணாமல் இருக்கின்றனர்.

CM Vijay
CM Vijay

2023 ஆம் ஆண்டு பொங்கல் வரைக்கும் தமிழகத்தில் அதிகாலை, நள்ளிரவு காட்சிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. அப்போது விஜய்யின் வாரிசும் அஜித்தின் துணிவு படமும் ஒரே நாளில் ரிலீஸ் ஆகியிருந்தது. அந்த சமயத்தில் ரசிகர்களிடையே நடந்த மோதலும், விபத்தில் ஒரு ரசிகர் உயிரிழந்ததும் பெரும் சர்ச்சையை கிளப்பியிருந்தது. அதைத் தொடர்ந்தே புதிய படங்களுக்கான அதிகாலை காட்சிகளுக்கான அனுமதியை அப்போதைய அரசு கொடுக்காமல் தவிர்த்தது.

புதிய படங்களுக்கு கோரிக்கையின் பேரின் காலை 9 மணிக்கு சிறப்புக் காட்சி திரையிடும் நடைமுறையை கொண்டு வந்தனர். அதன்படி ஒரு புதிய படம் வெளியாகும்போது, படக்குழு அரசிடம் சிறப்புக் காட்சிக்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்க வேண்டும். அரசு சார்பில் பரீசிலித்து அனுமதி கொடுப்பார்கள். தவெக அரசு ஆட்சியமைத்தவுடன் இந்த நடைமுறை மாற்றப்பட்டது. புதிய படங்கள் வெளியான ஒரு வாரத்திற்கும் அரசு விடுமுறை நாட்களிலும் சிறப்புக் காட்சியாக 9 மணிக்கு திரையிட்டுக் கொள்ளலாம். அதற்கு எந்த அனுமதியும் வாங்க தேவையில்லை என முதல்வர் விஜய் அறிவித்தார்.

திரைத்துறையை சார்ந்த அத்தனை சங்கங்களும் இதற்கு நன்றி தெரிவித்தனர். ஆனால், இந்த 9 மணி காட்சி அனுமதியை வைத்துக் கொண்டு அதிகாலை காட்சியையெல்லாம் திரையிட்டு திரையரங்க உரிமையாளர்கள் விதிகளை மீறுவதாக புகார் எழுந்திருக்கிறது.

இதுதொடர்பாக நம்மிடம் பேசிய சமூக ஆர்வலர்கள் சிலர், ‘ரசிகர்களின் பாதுகாப்புக்காகவும் பொதுமக்களுக்கு எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதற்காகவும்தான் தமிழகத்தில் 9 மணிக்கு முன்பான காட்சிகளுக்கு அனுமதி வழங்கும் நடைமுறை ரத்து செய்யப்பட்டது. தவெக அரசும் 9 மணிக்கு முன்பான காட்சிகளுக்கு அனுமதி வழங்கவில்லை. ஆனால், கடந்த இரண்டு மாதங்களில் வெளியான பெரிய படங்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் 9 மணிக்கு முன்பாகவே படத்தை திரையிட்டு வருகிறார்கள். கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் 2 படத்தை திருநெல்வேலியில் உள்ள ஒரு திரையரங்கில் காலை 5:30 மணிக்கே திரையிட்டார்கள். அதை இன்ப்ளூயன்சர்களை வைத்து தியேட்டருக்கான விளம்பரமாகவும் செய்தார்கள். தென்காசி ஆலங்குளத்தில் தவெக சார்பில் தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர் விபின் சக்கரவர்த்தி குடும்பத்துக்கு சொந்தமான ஒரு தியேட்டர் இருக்கிறது. அந்த திரையரங்கிலும் ஸ்பைடர் மேன், சர்தார் 2 போன்ற படங்களை அதிகாலையிலேயே திரையிட்டார்கள். சென்னக்குள்ளேயே இன்னும் சில திரையரங்குகள் 9 மணி காட்சிக்கான அனுமதியை வைத்தும் கொண்டு காலை 8 மணிக்கே ஷோவை ஓப்பன் செய்தார்கள்.இவர்களெல்லாம் இந்த ஷோக்களுக்கான டிக்கெட்டுகளை ஆன்லைனிலேயே பகிரங்கமாக நேரமிட்டு விற்றார்கள். ஆனாலும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் சமீபத்தில் வெளியான ஜெயிலர் 2 படத்துக்கு தமிழகம் முழுவதுமே பல்வேறு திரையரங்குகள் காலை 7 மணி முதலே ஷோவை தொடங்கிவிட்டார்கள். சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோயம்புத்தூர், ஓசூர், திருச்சி, தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி என முக்கியமான ஊர்களில் வார இறுதி நாளான ஞாயிற்று கிழமைக்கு காலை 7, 8 மணிக்கெல்லாம் ஆன்லைனில் புக்கிங் ஓப்பன் செய்து வைத்திருக்கிறார்கள். தவெக வேட்பாளர் விபின் சக்கரவர்த்தியின் திரையரங்கில் நாளை காலை 7 மணிக்கு ஷோவென ஆன்லைனிலேயே போட்டிருக்கிறார்கள். தியேட்டர் ஓனர்களை மட்டும் இதில் குறைசொல்ல முடியாது.

தயாரிப்பாளர்களும் விநியோகஸ்தர்களும் முடிவெடுக்காமல் 9 மணிக்கு முன்பாக எந்த திரையரங்கிலும் படத்தை திரையிட முடியாது. Qube இல் இத்தனை மணிக்குதான் லைசன்ஸ் ஓப்பன் செய்ய வேண்டுமென தயாரிப்பாளர்கள் கூறிவிட்டால் அத்தனை மணிக்குதான் திரையரங்குகளுக்கு படமே செல்லும். அதனால் இதில் திரையரங்குகளை மட்டுமே குற்றம் சொல்ல முடியாது. ஆனால், இந்த விதிமீறலை கண்டும் காணாமல் இருப்பது தவறான முன்னுதாரணமாக இருக்கும். இதைப் பார்த்து மற்ற துறையினரும் விதிமுறைகள் எளிதில் மீறும் உந்துதலைப் பெறுவர். பொதுமக்களும் இது இடையூறை ஏற்படுத்தும்’ என்றனர்.

More in TamilNews
கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் கொல்கத்தா துர்கா பூஜை பந்தலில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது ஏன்? 7 நிமிடங்களில் துக்கமாக மாறிய கொண்டாட்டம் October 18, 2026 அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி அருண்ராஜூக்கே இந்த நிலையா.. ரோட்டில் மோதி கொண்ட தவெகவினர்.. தர்மசங்கடத்தில் முடிந்த நிகழ்ச்சி October 18, 2026 காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு காணொளி: சுரங்க பாதையில் தேங்கிய மழைநீரில் சிக்கிய கார் மீட்பு October 18, 2026 சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? சென்னையில் கனமழை: 'இது வழக்கமான நிகழ்வல்ல' – அடுத்தடுத்த நாட்களில் நிலைமை எப்படி மாறும்? October 18, 2026 "தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன? "தனுஷ் அதிமுகவில் இணைந்தால் இருகரம் கூப்பி வரவேற்போம்"- அதிமுக ராஜேந்திர பாலாஜ பாலாஜி கூறியதென்ன? October 18, 2026 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் 'சோர்வு என்றே நினைத்தோம்' – குழந்தைகளிடம் எளிதில் கவனிக்க தவறக்கூடிய 4 புற்றுநோய் அறிகுறிகள் October 18, 2026

See all 681 in TamilNews →

By

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *